அடையாளங்களை இழந்து விட்டு தமிழினம் என்று சொல்ல உரிமை கிடையாது !

 
தமிழ்நாட்டின் பிரபல கவிஞர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி உதயன் வாகசர்களுக்காக வழங்கிய நேர்காணல்.
கே: ஆரம்ப நாள்கள் பற்றிக் கூறுங்கள்......
ப: விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள தூக்கினனூர் என்ற சின்னஞ் சிறிய ஊரில் பிறந்தேன். மணிமுத்தாறு என்ற வெள்ளி மலையிலிருந்து இறங்கி வருகிற ஆற்றில் 14 ஆண்டுகள் குளித்த அந்த ஈரம்தான் மணிமுத்தாறு என் கிற அந்தம்மாவின் ஈரம்தான் இன்னும் என் விரல் வழியே கவிதைகளாக, எழுத் துக்களாக கசிந்து வந்து கொண்டிருக்கின் றன என்று கருதுகிறேன். என என் தாய் மடிகனக்க விதை களை அன்று அள்ளித் தெளித்து பயிர் வைத்து வாழ்ந்த அந்த வயல் வெளிகளில் நான் ஓடித்திரிந்தேன். அந்த காலகட்டங்களில் என்னுடைய தாய்கள், தந்தைகள், பாட்டன்கள், பாட்டிகள் அள்ளிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்களைத்தான் என் காதுகள் வழியே உள் நுழைந்து என் இதயம் நிறைய அது கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து சிறகடிக்கிற பறவைகள் தான் இன்று என் எழுத்துக்கள் , பாடல்கள், சிந்தனைகள் அனைத்தும் அந்த புன்செய்காடு, என் மூதாதையர்கள் போட்ட பிச்சை அல்லது பரிசு என்றுதான் சொல்லுவேன்.
 
கே: புதிதாக எழுத வருபவர்களுக்கும் புரிதலோடு எழுத வருபவர்களுக்கும் ஒரு தமிழ்ப் பாலமாய் விளங்குகின்ற  நீங்கள் கவிஞராகவிருந்து பாடலாசிரியராய் வளர்ந்த பயணம் பற்றி....
ப: என்னுடைய உழைக்கும் மக்களுடைய பாடல்களை உள்வாங்கி வைத்திருந்தேன். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வ.சு.ப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளைவரனார் போன்ற பழம் பெரும் பேராசிரியர்கள் எனக்கு அள்ளிக் கொடுத்த தமிழ் செம்மையோடும் நான்  சென்னைக்குச் சென்றேன். உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் முருகன் நடுகல் வீரனே என்கிற முனைவர் பட்டத்துக்கான ஆய்வாளனாகத்தான் அங்கே சென்றேன். ஆனால் திரைப்பட உலகில் இயக்குநர்கள் பாக்கியராஜ், பாரதிராஜா, பாலு மகேந்திரா ஆகியோரி டம் நான் ஏறக்குறைய 15 படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். அந்தக் கால கட்டத்தில் நான் திரைப்படங்களை இயக்கவேண்டும்  என்கிற உணர்வோடு தான் அந்தத் திரையுலகத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய ஆண் தாய் என்று சொல்லத்தக்க அளவுக்கு என் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் பாரதிராஜாவின் 16 வயதினிலே என்கிற திரைப்படம்தான் என் போன்றவர்களுக்கும் திரைப்பட இயக்குநர்களாக வரலாம். திரைக்கதை எழுதலாம், பாடல் எழுதலாம் என்கிற நம்பிக்கையை ஊட்டிய படம். அதுவரையிலும் திரைப்பட உலகம் என்பது தமிழர்களுக்கு ஒரு இரும்புக் கோட்டையின் சுவர் எப்போது திறக்கும், திறக்காது என்கிற அவ நம்பிக்கையி லேயே இருந்தது.   எம் ஆண் தாய்கள் இசை ஞானி இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதி ராஜா ஆகியோர். என் நண்பர்கள் என்னை திரைப்படத்துக்குப் பாடல் எழுது என்று சொன்ன போது நான் இயக்குநராக வரவேண்டும் என்பதற்காக மறுத்து வந்தேன். அந்தக் கால கட்டத்தில்தான் கிழக்குச் சீமையிலே என்கிற படத்தில் பாரதிராஜாவோடு இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த என் உணர்வுகளைக் கவனித்த அண்ணன் தயாரிப்பாளர் தாணு நான் சிறைச்சாலை என்கிற பிரியதர்ஷனின் படத்தை தமிழ் மொழியை எடுக்கிறேன். அதில் உரையாடல்கள், பாடல்கள் அறிவுமதி என்று போடப் போகிறேன். என்ன செல்லுகிறாய் என்று கேட்க நான் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட்டேன். சிறைச்சாலை என்கிற படத்தில் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்கள்தான் செம்பூவே பூவே, மன்னன் கூறைச் சேலை, சுட்டும் விழிச்சுடர் பார்வையில், ஆலோலங்கிளி தோப்பிலே, இது தாய் பிறந்த தேசம் என் கிற 5 பாடல்களும் உலகத்தமிழர்கள் அனைவரின் இல்லத்துக்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய செல்லப் பிள்ளை யாக என்னை அறிமுகம் செய்து வைத்தன.

கே: தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி பற்றி...
ப:திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருத்தியதாகத் தெரிய வில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கின்ற போது தமிழ் இன உணர்வுக்கும் உலகத்தில் எங்கே தமிழன் காயப் பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங் களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்குத் திரைப் படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. 
திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன மக்களுடைய கூத்துப் பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள் அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான் அந்த தமிழ்த் திரைத்துறை என்பது தமி ழர்களுக்கான திரைத்துறையாக இன்னும் முழுமையாக நடு வெற்றியைக் காட்டவில்லை. 

தமிழர் வாழ்வியல் திரைத்தறைக்குள் வரவேண்டும்

கே:திரைத்துறையில் பாடலாசிரியராக மிளிர்வது.....
ப:  மக்களுக்கு யார் எழுதிய பாடல் என்று தெரிவதற்கு ஊடகங்கள் இன்னும் உதவி செய்யாத ஒரு சோகம் இருக்கத் தான் செய்கிறது. இந்த ஊடகத்தின் வாயிலாகவும் அதனைப் பதிவு செய்கி றேன். இசையமைப்பாளர் பெயர்களைச் சொல்லுகிறார்கள். எந்த படம் என்று சொல்லுகிறார்கள். இதை எழுதியவர் யார் என்று மட்டும் சொல்வதில்லை. ஆனாலும் பாடலாசிரியர்கள் தளத்தில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என்று அதீதமாக தெரிந்து கொள்ளப்பட்ட முகங்களின் பெயர்களைத்தான் சொல்லுகிறோம். 

கே: விவசாயம் செய்கிறீர்களாமே? 
ப: 16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந் தேனோ எந்த மண்ணில் வளர்ந் தேனோ அங்கே இப்போது சென்றிருக்கி றேன். விவசாயக் குடும்பங்களின் பண் பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண் ணில் அந்தப் பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்து வருகிறது. இப்போது தான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.
 
 அடையாளம் இழக்கும்அவலநிலை 
 
நம்முடைய அடையாளங்களை இழந்து விட்டு நமது மொழியை இழந்து விட்டு, தமிழினம் தமிழன் என்று சொல் வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. அதனால் தான் மறுபடியும் எனது ஊருக்கு வந்தி ருக்கிறேன். அங்கே என்னுடைய மண் ணில் மண்புழுக்களே இல்லாத வயல் வெளிகளைப் பார்க்கிறேன். மறுபடியும் எனது மண்ணில் மண்புழுக்கள் நெளிய விடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக் கிறேன். அதைப் போலவே என்னுடைய மரபு சார்ந்த மரங்களை நட்டு வைத்தி ருகிறேன். செயற்கை உரம் போடாமல் இயற்கை உரத்திலேயே விளைகிற காய் கறிகளை இப்போது என் தோட்டத்தில் போய் நான் பறித்துத் சாப்பிடத் தொடங் கியிருக்கிறேன். மண்ணில் விதையை நட்டு முளை விட்டு அதிலிருந்து பசுமை பார்கிறவன் தான்எழுதுவதற்கே வாய்ப்புள்ளவன் என்கிற உணர்ச்சியை என் மண் தாய் தான் எனக்கு ஊட்டி வைத்திருக்கிறாள்.

கே: திரைப்படத் துறையிலிருந்து விலகக் காரணம் என்ன?
ப: திரைப்படத்துறையிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கி@றன். பாடல் எழுதியதிலிருந்து விலகி யிருக்கி @றன். இன்றைக்கு வெளிவருகிற பாடல் கள் அனைத்தும் பெண்களை உடல் ரீதியாக வர்ணிக்கச் செய்கிற பாடல்களாவே இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல் களை, உடல் உறுப்புகளை வர்ணிக்கிற பாடல்களை எழுதி விடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.

கே: உங்களுக்கு நிம்மதி என்று சொல்லுகிற விடயம் எது?
ப:  உலகம் எந்த வித அணு ஆயுத சோத னைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என் றைக்கு அவன் உணர்கிறானோ அன் றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூ கமே கருதுகிறது அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காயப்பட்டாலும்கூட அதற்கு மருத்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன். கே: கவிஞர்களுக்கு என்ன சொல்ல நினைக் கிறீர்கள்?

கே: திரை இசைப் பாடல்கள் எத்தனை எழுதியுள்ளீர்கள்?
ப: ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல் கள் எழுதியுள்ளேன். அனைத்துப் பாடல் களும் ஆங்கிலம் கலக்காமல் எழுதியது தான் எனது பெருமையாகும். நான் எழு திய பாடல்களில் தமிழ் நாடு அரசு விரு தினைப் பெற்ற பாடலானது சொல்லா மலே படத்தில் சொல்லாதே சொல்லச் சொல்லாதே என்ற பாடலாகும்.அடுத்த படியாக நான் எழுதிய பாடல் களில் பெயர் சொல்லும் அளவுக்குப் பிர சித்தி பெற்ற பாடல்களான இராமன் அப் துல்லா படத்தில் முத்தமிழே முத்தமிழே முத்துச் சத்தம் என்ற பாடலும், தேவதை படத்தில் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் என்ற பாடலும், சேது படத்தில் எங்கே öசல்லும் இந்தப் பாதை பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் பிரி வொன்றைச் சந்தித்தேன், முதன் முதல் நேற்று என்ற பாடலும், உதயா படத்தில் உதயா உதயா உளறுகிறேன் போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. நான் 13 கவிதைத் தொகுப்புக்களை எழு தியுள்ளேன. அவிழரும்பு, என் பிரிய வசத்தமே, நிரந்தர மனிதர்கள், அன்பான இராட்சகி, புல்லின் நுனியில் பனித் துளி, அணுத்திமிர் அடக்கு, ஆயுளின் அந்திவரை, கடைசி மழைத் துளி, நட் புக்காலம், மணிமுத்த ஆற்றங்கரையில், பாட்டாறாங் கவிதைகள், வலி, குப்பி கடித்த புலிப்பல் ஆகும். உலகின் எந்த நிலப்பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுமை டயவன் பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல் களத்தில் இறங்கி இயங்குபவன்.எனக்குள் அமெரிக்காவை திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரி யுமா? என்கிறது ஊத்தாவுக்குள் சிக்கிய விரால் மீன் உள் நுழைந்து துழாவும் கைக ளுக்கு அகப்படாமல் நழுவிப் போவதாய் நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். 
அம்மாவை விற்றுத்தானா பிள்ளைக ளுக்குச் சோறு போடவேண்டும்? என் கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக் கிறேன். பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். நடவுப்பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து வரிசைகட்டி ஏர் உழுத இடத்தில் இருந்து இன்று ஒற்றை உழு வண்டி பேரிரைச்சலில் உழுது கொண்டி ருக்கிறது. இந்தப் பேரிரச்சலுக்கு நடுவி லும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிøŒப் பாடல்கள். பாடல்களைக் பாடியபடியே உழுதவர்கள் இன்று பாடல் களைக் கேட்ட படியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடிய படியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள் பாடல்களைக் கேட்ட படியே பேருந்தினை ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற் றப்பட்டு விட்டார்கள். அள்ளி அள்ளி இல வசமாகத் தந்தவர்களின் மீது வாங்கிக் கொள்ளுங்கள் என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழ லாச்சே.

Ingen kommentarer:

Legg inn en kommentar