அப்போது அவன் முன்னால் துள்ளியோடியது ஒரு அழகிய மான். மானைத் துரத்தத் தொடங்கிய தீசன், இன்னும் நீண்டதொலைவு காட்டுக்குள் வந்துவிட்டான். திடீரென மான் மறைந்து, அந்த இடத்தில் ஒரு மாமரம் தோன்றியது. அது மறைந்த இடத்துக்கு அருகில் உள்ள குன்றில் மஹிந்த தேரரை தேவநம்பியதீசன் காண நேர்ந்தது. அவர் அசோகச் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் பௌத்த மதக் கருத்துக்களை தேவநம்பிய தீசனுக்குப் போதித்தார். அவன் பௌத்த மதத்தைத் தழுவினான். அன்று முதல் இலங்கையில் புத்தரின் போதனைகளால் உருவான பௌத்த மதம் தழைக்கத் தொடங்கியது. தேவநம்பிய தீசனுக்கு மான் வடிவில் புத்தபெருமானே மஹிந்தரின் இடத்தைக் காட்டினார். அவ்வாறு புத்தர் மானாகத் தோன்றிய இடமே மான்குளம். இப்போது மாங்குளம் என மருவிவிட்டது.
என்ன தலை சுற்றுகிறதா? மான்கள் அதிகமாக இருந்ததால் அல்லவா மாங்குளம் என்ற பெயர் வந்தது. (அதிகளவான மாமரங்கள் இங்கு இருந்ததாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு.) அப்படியிருக்கையில் இதென்ன புதுக்கதை? மானாகப் புத்தரும், அவரின் போதனைகளோடு மஹிந்ததேரரும் இங்கே எப்போது வந்தார்கள்? எனப் பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எண்ணக்கூடும். இனி எழுதப் படப்போகும் புதிய மகாவம்சத்தில். இவ்வாறுதான் இதுவரை இல்லாத கிளைக்கதை ஆதாரங்களோடு வரலாறு புனையப்படப்போகிறது. மாங்கன்றுகள் சுழ்ந்துள்ள இடமொன்றில் புதிதாக முளைத்து வரும் பௌத்த விகாரையைக் காணும் போதெல்லாம் வரலாறு இப்படித்தான் புனையப்படப் போகின்றது என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவே செய்யும். இப்போது விகாரைகள் மட்டுமல்லாது பௌத்த மதம் சார்ந்த அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர் பெரு மதத்தினர்.
தமிழ்பௌத்த சங்கம், யாழ். பல்கலைக்கழக பௌத்த மாணவர் சங்கம்(இது இன்னும் உத்தியோக பூர்வமாகச் செயற்படா விட்டாலும், இந்த வருடம் வெசாக் பண்டி கைக் கொண்டாட்டங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டது) என்பவற்றின் வரிசையில் இப்போது புதிதாகப் பிறந்துள்ளது இந்துபௌத்த கலாசாரப் பேரவை.
கடந்த திங்கட்கிழமை கந்தர்மடத்தில் இப்பேரவையின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர், வந்தவர்கள் எல்லாம் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். எத்தனையோ கலாசார மண்டபங்கள் இருக்கக் கூடிய வகையில் கலாசார மேம்பாட்டுக்காக அமைக்கப் பட்ட அமைப்பொன்றின் கருத்தாடல் நிகழ்வு தனியார் விடுதியில் நடைபெறும் முரண்நகை இங்கு நிகழ்ந் தேறியது. இது குறித்த அமைப்பின் வியாபார உள் நோக் கங்களையே வெளிப்படுத்துவதாக அமைந்தது. கருத்தாடல் நிகழ்வில் இந்து மதம் மீதும், யாழ்ப்பாண மக்கள் மீதும் பாசமழை பொழிந்தார் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரர் . இத்தனைக்கும் கடும் பௌத்த சிந்தனைப் போக்காளர் அவர். நாடாளுமன்ற உறுப்பினரான அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாதிக ஹெல உறுமய தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையே எப்போதும் வெளியிட்டு வருகின்ற ஓர் அமைப்பு. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பௌத்த சங்கத்துக்கு இந்த அத்துரலியரத்ன தேரரே தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கருத்துரை வழங்கிய பௌத்த மதம் சார்ந்தவர் களின் குரல்களில் ஒருவித வெற்றியின் சாயல் படர்ந்திருக்க, இந்து மதம் சார்ந்தவர்களின் குரல்களில் ஒருவித சந்தேகமும், பயமும் ஒட்டியிருந்ததை எல்லோரும் அவதானித்தனர். யாழ்ப்பாணத்துக்குப் பெருந்தொகையான புத்தர் சிலைகள் எடுத்துவரப்படுகின்ற செயலால் இங்குள்ள தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறு சிலைகள் எடுத்து வரப்படுவதன் உள்நோக்கம் யாழ்ப்பாணத்தை எதிர்காலத்தில் பௌத்தமயமாக்குவதற்கான முயற்சியாக இருக்குமோ என்ற எண்ணமே அவர்களின் இந்த அச்சத்துக்குக் காரணம். அகில இலங்கை இந்துமதக் குருமார் ஒன்றியத் தலைவரான ஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள் யாழ். மக்களின் அடிமனதில் இருக்கும் அச்சத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் போட்டுடைக்கத் தவறவில்லை. ஆனால் இது குறித்து மறந்துங்கூட மூச்சுக் காட்டாமல் நைசாகக் கழன்றுவிட்டார்கள் பேரவை அமைப்பாளர்கள். இதற்குப் பதில் சொன்னால் அது பௌத்தத்தின் பெயரால் இங்கு நடைபெறும் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் காட்டிக் கொடுத்து விடும் என்பது வந்தவர்களுக்குத் தெரியும்.
கருத்துரையின் நிறைவில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் எனக் கூறப்பட்டதை நம்பி, யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் ஒருவர் ஏன் இந்துபௌத்த கலாசாரப் பேரவை என்று தனியே அமைக்க வேண்டும். இதில் இஸ்லாம் கலாசாரங்களை சேர்க்காமல் விடுவது தவறல்லவா? என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார். அவ்வளவுதான் தாமதம். இந்தக் கேள்விக்கு அத்துரலியரத்ன தேரர் பதில் சொல்ல வாயெடுக்க முன்னரே பேரவையின் அமைவுக்கு மூலகாரணமான தமிழர் பொங்கியெழுந்தார்.முந்தி முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில இருந்து கலைக்கேக்க உதுகளைக் கேட்டிருக்கலாமே? அப்ப அதை எதிர்த்து ஒரு அறிக்கை கூட உங்களால விட முடியேலை. இப்ப கதைக்க வாறியளோ? இப்பிடித் தேவையில்லாமல் கதைச்சு இந்தப்பேரவை அமைக்கிறதைக் குழப்பப் பாக்கிறியளோ? என்று சுடுதண்ணீர் குடித்த குரலில் கூறினார்.(நல்லகாலம், அந்த விரிவுரையாளர் கிறிஸ்தவ மதத்தையும் இதில் இணைப்பது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தால் அவரின் கொதி இன்னும் கூடியிருக்குமோ என்னவோ?) இவ்வாறு ஒரு ஆரோக்கியமான கேள்விக்குக் கூடக் கொதித்தெழும்பிய இவர்களைப் போன்றவர்கள்தான், இந்துபௌத்த இணைப்பின் மூலம் அமைதியான சுழலை இங்கு ஏற்படுத்தப்பாடுபடப்போகிறார்களாம். இதை நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?இந்துபௌத்த கலாசாரப் பேரவை அமைக்கப்படவில்லையென்று இங்கு யார் அழுதார்கள்? ஏதோ இவ்வாறான அமைப்புகளுக்காகவே தமிழ்மக்கள் தவமிருந்ததாகவும் ஏதோ மனமிரங்கி இப்போது இந்தப் பேரவையை அமைப்பதற்கான வரத்தை தந்திருப்பது போலவுமே பேரவையை அமைத்தவர்கள் கருத்துச் சொல்லியிருந்தனர்.
இலங்கையில் தமிழ்சிங்கள இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் தொடர்வதற்கு மிகமுக்கியமான காரணம் பௌத்த பேரின மதத்தின் ஆணவத்தனமான செயற்பாடுகளே. பண்டா செல்வா ஒப்பந்தத்தைப் பண்டாரநாயக்கா கிழித்தெறிவதற்கு முக்கிய காரணமே பௌத்தபிக்குகளின் எதிர்ப்புத்தான். அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்கு மானால் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தைத் தமது விடுதலைக்கான வழியாகத் தெரிவுசெய்யும் நிலை வந்திருக்காது. இத்தனை அழிவுகளைத் தமிழ் மக்கள் சந்திக்கவேண்டியு மிருந்திருக்காது. பௌத்தம் அன்பைப் போதிப்பதாகக் கூறப்பட்டாலும், அது இலங்கையின் அதிகாரபீடத்தில் மிக நீண்டகாலமாக ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் மதம். எனவே தன்னுடைய இருப்பை விசாலித்துக் கொள்வதற்கே பௌத்தம் அப்போதிருந்து முயன்று வந்திருக்கிறது. போரில் தாம் வென்ற இடங்களில் எல்லாம் அரச மரங்களை வளர்த்து, புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் படையினர் அமைத்து வந்தனர். எனவே தம் இருப்பைப் பலப்படுத்த உதவும் போரைப் பௌத்தபீடங்கள் கண்மூடியபடி ஆதரித்தே வந்தன. இதனால் நடப்பது இனங்களுக்கிடையிலான போரா? அல்லது பௌத்த மதம் தன்னுடைய எல்லையை விரிவுபடுத்துவதற்காக நடத்துகின்ற யுத்தமா? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் சமாதானத்தின் கீற்றுகள் தென்படுகின்ற போதெல்லாம் பௌத்தம் தன் அகன்ற வாயால் அவற்றை விழுங்கவே முற்பட்டது. இதனாலேயே அமைதி இலங்கையில் சாத்திய மற்றதாக இருந்தது.
இலங்கையில் தமிழ்சிங்கள இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் தொடர்வதற்கு மிகமுக்கியமான காரணம் பௌத்த பேரின மதத்தின் ஆணவத்தனமான செயற்பாடுகளே. பண்டா செல்வா ஒப்பந்தத்தைப் பண்டாரநாயக்கா கிழித்தெறிவதற்கு முக்கிய காரணமே பௌத்தபிக்குகளின் எதிர்ப்புத்தான். அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்கு மானால் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தைத் தமது விடுதலைக்கான வழியாகத் தெரிவுசெய்யும் நிலை வந்திருக்காது. இத்தனை அழிவுகளைத் தமிழ் மக்கள் சந்திக்கவேண்டியு மிருந்திருக்காது. பௌத்தம் அன்பைப் போதிப்பதாகக் கூறப்பட்டாலும், அது இலங்கையின் அதிகாரபீடத்தில் மிக நீண்டகாலமாக ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் மதம். எனவே தன்னுடைய இருப்பை விசாலித்துக் கொள்வதற்கே பௌத்தம் அப்போதிருந்து முயன்று வந்திருக்கிறது. போரில் தாம் வென்ற இடங்களில் எல்லாம் அரச மரங்களை வளர்த்து, புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் படையினர் அமைத்து வந்தனர். எனவே தம் இருப்பைப் பலப்படுத்த உதவும் போரைப் பௌத்தபீடங்கள் கண்மூடியபடி ஆதரித்தே வந்தன. இதனால் நடப்பது இனங்களுக்கிடையிலான போரா? அல்லது பௌத்த மதம் தன்னுடைய எல்லையை விரிவுபடுத்துவதற்காக நடத்துகின்ற யுத்தமா? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் சமாதானத்தின் கீற்றுகள் தென்படுகின்ற போதெல்லாம் பௌத்தம் தன் அகன்ற வாயால் அவற்றை விழுங்கவே முற்பட்டது. இதனாலேயே அமைதி இலங்கையில் சாத்திய மற்றதாக இருந்தது.
இப்போது போர் முடிவுற்றபின்னர் யாழ்ப்பாணத் தில் அபிவிருத்தித்திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர அதற்கு எதிர்மாறாகப் பௌத்த மதத்தின் காலூன்றல் தீவிரமடைந்துள்ளது. சாத்தியமான எல்லாக் கதவுகளின் இடுக்குகளின் வழியாகவும் நுழைவதற்கு அது முயன்று கொண்டிருக்கிறது.நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம், பௌத்த எச்சங்கள் இருப்பதாக வலிந்து நிறுவப்பட்ட கந்தரோடையில் மீளவும் தொடங்கியிருக்கும் அகழ்வாய்வு, வீட்டில் விகாரை கட்டினால் நிதியுதவி வழங்கல், பெருமளவான புத்தர் சிலைகள் இரகசியமாகக் கொண்டு வரப்படுதல் என்னும் செயற்பாடுகளும், தமிழ்ப் பௌத்த சங்கம், யாழ்.பல்கலைக் கழகத்தில் பௌத்த மாணவர் சங்கத்தை அமைக்க முயற்சித்தல், இந்துபௌத்த கலாசாரப் பேரவை உருவாக்கம் என்பனவெல்லாம் பௌத்தத்தின் வருகையை யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கச் செய்யும் முனைப்புகள் தான். இந்துபௌத்த சங்கத்தின் உருவாக்கம் எவ்விதத்திலும் இங்கு கலாசார மேம்பாட்டையோ அல்லது அமைதி நிலையையோ ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அதை அமைத்தவர்கள் தமது விசு வாசத்தை ஆட்சியாளர்களுக்கு இதன் மூலம் காட்டி, தனிப்பட்ட ஆதாயங்களைப் பெறலாம்.மற்றும்படி பௌத்தம் தன்னுடைய இலக்கில் வெல்வதற்கே இந்தச் சங்கங்கள் உதவப்போகின்றன. ஏனெனில் ஏதோ ஒரு உருமறைப்புடன் உள் நுழைந்த பின்னர் தன்னுடைய நோக்கங்களை அடைவதற்கே பௌத்தம் முனையும். பௌத்தம் என்பது மிகப்பெரிய மீன். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்கள் மீன்குஞ்_கள்தான். ஒருபோதும் மீன் குஞ்சுகள் பெரியமீனை விழுங்கியது கிடையாது. ஆனால் பெரிய மீனுக்கு சிறிய மீன்களை விழுங்குவது ஒரு பெரிய விடயமேயல்ல. சிறியமீனுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு பொதுக் கலாசாரத்தை உரு வாக்குவதனூடாக நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்கப் போவதாகக் கூறி ஆசை காட்டி பெரியமீன் உள் நுழைந்து விட்டது. எப்போது சின்னமீனை அது விழுங்கப் போகிறது என்பது மட்டும்தான் தெரியாத விடயமே தவிர அது விழுங்கப்போவது நிச்சயமான ஒன்றுதான்.
அரசுக்கு வால் பிடிக்கின்ற மாற்றுக்கருத்தாளன் எனத் தன்னைத்தானே பீற்றிக் கொள்கிற புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எழுத்தாளர்(?) சகன் என்பவர் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வாறு கூறினார்.பௌத்தம் தான் அழகிய அமைதியான சமத்துவமான மதம். எல்லோரும் பௌத்தர்களாக மாறினால் எந்தப் பிரச்சினையும் வராது. இதைச்சொல்லும்போது வெறியில் அவர் கண்கள் சொருகியிருந்தன. பௌத்த மதம் தன்னுடைய ஆசையை அவரைப் போன்ற எடுபிடிகளின் குரல்களினூடாக வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் குரல்கள் இப்போது உண்மையாகவே கண்முன்னால் நிஜமாகப்போகின்றதோ என்ற பயம் மட்டுமே எம்மைச் சுற்றி வியாபிக்கத் தொடங்கியுள்ளது. நாம் விழித்தெழாவிட்டால் காலையில் இருந்து மாலை வரை தமிழர் பகுதி எங்கும் பிரித் ஒலிகள் கேட்கத் தொடங்கும் காலம் விரைவில் வந்துவிடலாம்.
Ingen kommentarer:
Legg inn en kommentar