இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை 60 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது என்று சொல்லப்படுகின்ற காலத்திலிருந்து தமிழ் மக்களுடைய உரிமையை வென்றெடுப்பதற்காகத் தமிழ்த் தலைவர்கள், பேச்சுக்களையும் பல்வேறு போராட்டங்களையும் நடத்திவந்திருக்கின்றார்கள்.
போராட்டங்கள் என்றால் ஆயுதம் ஏந்திய போராட்டமல்ல. அகிம்சை வழியிலான, சத்திய வழியிலான தன்னையே வருத்துகின்ற போராட்டங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் இவற்றை நடத்தியிருக்கின்றார்கள். மக்களை இணைத்து மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றார்கள். பேச்சுக்களின் மூலம் சில உடன்பாடுகளும் அவ்வப்போது காணப்பட்டன. பண்டாசெல்வா ஒப்பந்தம், டட்லிசெல்வா ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடப்பட்டன. ஆனால் எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் கூட இனவாதிகளின் அச்சுறுத்தல்களால் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்தான் உண்டு. அகிம்சை வழியிலான, சத்திய வழியிலான போராட்டங்கள் எல்லாம் ஆயுதமுனையில் அடக்கப்பட்ட வரலாறுகள்தான் உண்டு.
கல்வியில் கூட கைவைத்தார்கள் ஜனநாயக வழியிலான, சட்டரீதியான போராட்டங்களையே ஆயுதம் தாங்கிய குண்டர்களை ஏவி அடக்கிய சிங்கள அரசு, தமிழனின் அழிக்கப்பட முடி யாத கல்வியிலும் கைவைத்தது. தமிழனின் சொந்த மண்ணையே அபகரிக்க முனைப்புக்காட்டியது. விவசாயக்குடியேற்றங்கள் என்று கிழக்கு மாகாணத்தில் கல்லோயா, கந்தளாய் போன்ற இடங்க ளில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களைக்குடியேற்றியது. தரப்படுத்தல் என்ற தடைக்கல்லைப் போட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை நாசம் செய்தது.சோல்பரி அரசமைப்பின் மூலம் தமிழனுக்கு இருந்த அற்பசொற்ப சலுகையான 29ஆவது பிரிவை 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம் இல்லாது ஒழித்தது சிறீமா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு. 1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசமைப் புக்குத் தந்தை செல்வாவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் சிங்கள இனவாதிகளால் நிராகரிக்கப்பட்டன. 1956, 1958, 1977, 1983 ஆகிய காலப்பகுதிகளில் சிங்கள இனவெறியர்களால் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டார்கள். பச்சிளம் பாலகர்களை கொதிக்கும் தாரில் கதறக் கதற தூக்கிப் போட்டார்கள். தமிழனின் சொத்துக்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. உடுத்த ஆடையுடன் என்றல்ல, கிழிந்த கந்தல் உடையுடன் யாழ்ப்பாணத்துக்கு அடித்து விரட்டப்பட்டார்கள்.1974ஆம் ஆண்டு யாழ். மண்ணில் தமிழன் தமிழுக்கு விழா எடுத்து மகிழ்ந்திருந்த நேரத்தில் சீருடையை அணியாதவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி பண்பாட்டுப் படுகொலை புரிந்தார்கள். 10 தமிழர்களின் இன்னுயிர்களைப் பறித்தார்கள். 1981ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் ஆறு வாக்குப் பெட்டிகளை அபகரித்துச் சென்றவர்கள். அழகாக இருந்த யாழ். நகரையே எரித்துச் சுடுகாடாக்கினார்கள். தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாகத் திகழ்ந்த யாழ். நூல் நிலையத்தையே எரித்துச் சாம்பல் மேடாக்கினார்கள். ஆயுதம் ஏந்துவதற்கு ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்? இத்தனை அநியாயங்களையும் தாங்கிய தமிழ் நெஞ்சங்கள் இனியும் பொறுத்திருந்தால் தமிழன் இருப்புக்கே ஆபத்து என்ற நிலையில்தான் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.ஆயுதப் போராட்டம் நடைபெற்ற 30 வருட காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பிரேமதாஸ, சந்திரிகா, ரணில், மஹிந்த ராஜபக்ஷ ஆகிய தலைவர்கள் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தினர். தமிழனை ஏமாற்ற வேண்டும் என்ற எத்தனிப்புடனும் சர்வதேசத்துக்கு ஓர் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்ட வேண்டும் என்ற ஏளனமான போக்குடனும் தான் சிங்களத் தலைமைகள் பேச்சுக்களை நடத்தினர்களே தவிர இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள அரசுகள் பேச்சுக்களை நடத்தவில்லை. இதனைச் சிங்கள அரசுகளின் கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாக அவதானிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள். கடந்த 60 வருடகால இனப்பிரச்சினை வரலாற்றில் அகிம்சை வழியிலான போராட்டங்கள் நடைபெற்ற 30 வருடகாலத்தில் சிங்கள அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன்பின்னர் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. - பிரபாகரனுடன் நேரடியாகப் பேசிப் பிரசனைக்குத் தீர்வுகாண்பேன்.
- சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன்.
- 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்களைப் பகிர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்பனவே அந்த வாக்குறுதிகள்.
ஆனால் பிரபாகரனைக் கொன்றுவிட்டோம் என்று பெருமைப்பட்டு அறிவித்தார்கள். அதற்காக இன்று வரை வெற்றிக்கொண்டாட்டங்களையும் நடத்தினார்கள். ஜனாதிபதி செய்தது என்ன?
மூன்று வருடங்களாக சர்வகட்சி மாநாட்டை நடத்தியவர்கள் சமர்ப்பித்த அறிக்கையை ஜனாதிபதி இன்றுவரை வெளியிடவே இல்லை. இந்த அறிக்கைக்கு என்ன நடந்தது? இந்த அறிக்கை வெளியிடப்படாமைக்குக் காரணம் என்ன? 13ஆவது திருத்தத்துக்கும் மேலாக என்றால் அதில் சொல்லப்பட்ட அதிகாரங்களையும்விட மேலும் அதிகாரங்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் "சொன்னதைச் செய்வேன்; செய்வதையே சொல்வேன்'' என்று வேலணையில் முழங்கிய ஜனாதிபதி அவர்கள் செய்தது என்ன? 13ஆவது திருத்தத்தில் சொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் இவற்றைக் கொடுக்க வேமாட்டேன் என்பதுதான். ஆக மொத்தத்தில் இவர் கொடுத்த வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டன.சட்டத்தில், அதுவும் அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்ட அதிகாரங்களையே கொடுக்கமாட்டேன் என்று மறுக்கும் ஜனாதிபதி எதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கிறார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு இவருக்கு கண்டிப்பாகத் தேவை. ஏன் என்றால் தமிழ்மக்களையும் சர்வ தேசத்தையும் ஏமாற்றுவதற்கு வேறு வழி இல்லை.ஒரே நாடு, ஒரே இனம் என்று ஜனாதிபதி அவ்வப்போது சொல்லி வருகிறார். அதனால்தானோ இன அழிப்பும் நிலப்பறிப்பும்? போர் நடைபெற்ற காலத்திலும், ஏன் இன்றுவரையும் கூட எத்தனை படுகொலைகள்?, எத்தனை பாலியல் வல் லுறவுகள்? எத்தனை எத்தனை மனித உரிமை மீறல்கள்?.புங்குடுதீவில் தர்சினி என்ற இளம் யுவதி பாலியல் வல்லுறவின் பின் கல்லுடன் கட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டார். திருகோணமலையில் கடற்கரையில் விளையாடிய மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.மன்னாரில் இளம் தாயை கதறக் கதறப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அந்த இளம் தாயையும் அவரது பிஞ்சுப் பாலகøனையும் அவரது கணவனையும் ஈவிரக்கமின்றிப் படுகொலை புரிந்து உடல்களைக் கட்டித் தொங்க விட்டுக் களிநடனம்புரிந்தார்கள். வேலணையில் மருத்துவமாது தர்சிகாவைப் பாலியல் வல்லுறவு செய்து படுகொலையும் புரிந்தவர்கள் தூக்குப் போட்டுத் தொங்கவிட்டார்கள். சாவகச்சேரியில் பாடசாலை மாணவன் கபில்நாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மிருசுவிலில் தமது சொந்த வீடுகளைப் பார்க்கச் சென்ற எட்டுப் பேரை (ஐந்து வயதுச் சிறுவன் உட்பட) படுகொலை செய்து மலசலக் கூடக்குழியில் புதைத்தார்கள். பிறந்த நாளுக்குச் சென்றுவிட்டு ஓட்டோவில் வீடுதிரும்பிய அப்பாவித் தமிழர்களை நெல்லியடி யில் வைத்து துடிக்க பதைக்க சுட்டுக் கொன்றார்கள். உரும்பிராயில் வேலாயுதம் ரஜனி என்ற இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தவர்கள் கொலை செய்து மலசலகூட குழியில் போட்டு மூடினார்கள். இவ்வாறாகச் செய்யப்பட்ட எண்ணிலடங்காப் படுகொலைகளில் இவை ஒரு சில மட்டுமே. இவற்றுக்கெல்லாம் முடி சூட்டுவதுபோல புலிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று கூறி வன்னி மண்ணில் தமிழனின் இரத்த ஆற்றை ஒடவிட்டார்கள். இறந்தவர்கள் எண்ணிக்கை 40,000 ஆக இருக்கும் என்கிறது ஐ.நா. நிபுணர் குழு. ஒரு லட்சத்துக்கும் மேல் என்கின்றன மனித உரிமை அமைப்புக்கள்.குறிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக இருக்கலாம். அங்கே சென்று பாதுகாப்பாக இருங்கள் என்று மக்களை அந்த இடத்துக்கு வரவழைத்த அரசு கொத்துக் குண்டுகளைக் கொட்டிக் பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படு கொலை புரிந்தது என்று ஆதாரப்படுத்துகிறது ஐ.நா. நிபுணர் குழு. மூன்று லட்சம் மக்களை முள்கம்பி வேலிக்குள் தடுத்து வைத்து நாயிலும் கேவலமாக நடத்தினர். இன்று சர்வதேசத்தின் நெருக்குதலால் மீள்குடியமர்வு என்ற போர்வையில் மக்களைத் தறப்பாள் கொட்டகைக் குள் தவிக்க விட்டு சகல வசதிகளுடனும் அவர்களை மீளக்குடியேற்றம் செய்திருக்கின்றோம் என்று வெளி உலகுக்குக் காட்டுகின்றனர்.அந்த மக்கள் இன்று உண்ண உணவோ உடுக்கத் துணியோ இன்றி மழையிலும் வெள்ளத்திலும் காற்றிலும் பயங்கர விசப்பூச்சிகள் மத்தியில் அல்லாடுகின்றனர். யுத்தம் முடிந்தது இன்று இரண்டு வருடங்களுக்கும் மேலாகின்றது. இன்னும் ஏன் இராணுவத்தை எம் மண்ணில் வைத்திருக்கின்றார்கள்? ஓர் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்காகவா இராணுவ நிலைகள் இருக்க வேண்டும் என்று வாதம் புரிகின்றார்கள். தமிழர்கள் ஆயுதம் தூக்கியமைக்கான காரணத்தை நன் கறிந்து அதற்கான பரிகாரத்தை தேடினால் பயங் கரவாதம் ஏன் தலை தூக்குகிறது?
அதியசயம் பேசும் அரசு தமிழனை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் சிங்கள அரசுக்கு இருக்கும் வரையில் தீர்வும் இல்லை. இந்த நிலையில், தமிழனுக்கு இத்தனை அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்த பின்பும் படு பாதகமான இழிசெயலை செய்த பின்பும் ஒரு தமிழ் மகனுக்கும் ஒரு சிறுகாயம் கூட ஏற்படாமல் பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என்று உலக அதிசயம் பேசுகிறார்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகள் எத்தனை?, பிள்ளைகளை இழந்த பெற்றோர் எத்தனை?, கணவனை இழந்த விதவைகள் எத்தனை?, மனைவியை இழந்த கணவன்மார் எத்தனை?, எத்தனை குடுப்பங்கள் பூண்டோடு அழிந்தன?. எண்ணிக்கை பார்க்க மறுக்கிறது அரசு; அதனால் நீங்கள் எண்ணிப் பாருங்கள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் வாடும் இளைஞர்கள், யுவதிகள் தமது இளமைக் காலத்தையே பாறிகொடுத்து வாடுகின்றார்கள். தமது பிள்ளைகளை இன்று விடுவார்கள்; நாளை விடுவார்கள் என்று பெற்றோர்களும், தமது கணவன்மாரை எப்பொழுது விடுவார்கள் என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மனைவிமாரும் கண்ணீருடன் வாழும் வாழ்வு நிலை சொல்லில் அடங்காது. இத்தனை அக்கிரமங்களை செய்யும் அரசுக் கும் அரசின் அமைச்சர்களுக்கும் தன் மானத்தை இழந்த எம்மவர்கள் சிலர் கோடா ரிக்காம்புகளாக நின்று அவர்களுக்குக் குடை, கொடி, ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். தமிழன் தன் சொந்த மண்ணிலேயே இராணுவ நெருக்குவாரங்களுக்குள் சிக்கித் தவிக்கின் றான். முழத்துக்கு முழம் திரும்பிய திசையெல்லாம் பாதுகாப்புப் படையினர். இத் தனைக்கும் மத்தியில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுகள். இந்த நிலையில் வடக்கின் வசந்தம் என்றும் நிம்மதியான வாழ்வு என்றும் பசப்பு வார்த்தை காட்டி தெருவீதி யில் வலம் வருகின்றார்கள். எதற்கு இந்த ஆரவாரம்? நாடாளுமன்றத் தேர்தலுக்கு இல்லாத முக்கியம் ஏன் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர் தலுக்கு? காரணத்தோடுதான் காய்நகர்த்து கின்றார்கள். ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கையும், சனல்4 தொலைக்காட்சியின் ஸ்ரீலங்காவின் கொலைக்களமும் இலங்கை அரசை கிலி கொள்ள வைத்திருக்கின்றன. சர்வதேசமும் இலங்கை அரசை நோக்கி கை நீட்டுகின்றது.போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு தமிழ் மக்களின் உதவி இந்த அரசுக்குத் தேவை. அதனால்தான் உள்ளூராட் சித் தேர்தலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்காக அத்தனை அமைச்சர்களும் யாழ்ப்பாணத்தில் முகாமிடுகின்றனர்.இந்தவேளையில் நாம் இன்னொரு விடயத் தையும் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைத்தீவின் சகல சிங்களக்கட்சிக ளும் தமிழனின் உரிமையை பறிப்பதில் போட்டு போட்டுக்கொண்டு செயல்பட்டன; செயல்படுகின்றன. "புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் இனித் தீர்வுத் திட்டமே தேவையில்லை'' என்று தமி ழர்களை அலட்சியப்படுத்தியவர் ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. சட்டிகள் வெவ்வேறானாலும் கள் ஒன்றுதான். எமது மண் மீட்கப்படவேண்டுமானால், இராணுவ நெருக்குவார மின்றி நாம் வாழ வேண்டுமானால், எமது இளைஞர், யுவதிகள் ஒழுக்க நெறியோடு வாழவேண்டுமானால் எமது சந்ததி காப்பாற்றப்பட வேண்டுமானால் "மானமுள்ள தமிழனே மனம்விட்டுச் சிந்தி, மறு பேச்சில்லாமல் தமிழன் வாழ வாக்குக்குடு'' |
Ingen kommentarer:
Legg inn en kommentar