ஒஸாமாவுக்கு ஒரு சட்டம் - ரமேஷிக்கு ஒரு சட்டமா?

 essay
சர்வதேச நாடுகளால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; அடிப்படையற்றவை. இறுதிச் சண்டையில் இடம்பெற்ற பொதுமக்கள் உயிரிழப்பு மிகவும் குறைவானவை; இதற்கான ஆதாரங்களை இப்போது நாம் சேகரித்து வருகிறோம். இதனை நிரூபித்துக் காட்டுவோம். எமது ஆதாரங்கள் குறித்து விரைவில் சர்வதேசத்திற்கு அறிவிப்போம்.



இவ்வாறு தகவல் வெளியிட்டார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. உதயனின் சகோதரப் பத்திரிகையான சுடர்ஒளிக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கிய அவர்,  பொதுமக்களைக் கொலை செய்வது அரசினதோ அல்லது இராணுவத்தினதோ கொள்கை அல்ல என்றார்.
 
கேள்வி: இலங்கை மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உங்களின் நிலைப்பாடுதான் என்ன?
 
பதில்:போரின் போது சிவிலியன்களைக்கொன்றதாகத்தானே இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.சண்டையின் போது புலிகள் இயக்கத்தினர் சிவிலியன்களைக் கேடயமாக வைத்திருந்த படியால் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையினர் காயமடைந்தோ அல்லது உயிரிழந்தோ இருக்கலாம் என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.
 
உலகத்தில் இப்படி சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் பெருமளவிலான சிவிலியன்களை வேண்டுமென்றே கொன்றோம் என்பது தான் எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. நாங்கள் இப்போதைக்கும் சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.
 
நாம் மட்டுமல்ல யுனிசெவ் மற்றும் அமைப்புக்கள் நடத்திய கண்காணிப்பின் பிரகாரம் அப்படியான பெருந் தொகையான உயிரிழப்புக்கள் இடம் பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதை நிரூபிக்க இன்னும் ஆழமாக நாம் செல்லலாம்.
 
சிவிலியன்களை பெயரடிப்படையில் எம்மால் தேடிப் பார்க்க முடியும். இதை ஓரிரு நாள்களில் செய்ய முடியாது. சனத் தொகை புள்ளிவிபரத்திணைக்களத்தினூடாக நாம் சில வேலைகளை செய்திருக்கிறோம்.
 
சண்டை இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கிருந்த சனத்தொகை என்ன?, அதில் இறந்தவர்கள் யார்?, வெளிநாடு சென்றவர் யார்? போன்றவற்றை நாங்கள் பெற்றுள்ளோம். பெற்றதுடன் காணாமற் போனவர்கள் யார் என்பதை பெயர் ரீதியாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
 
காணாமற் போனவர்கள் எப் படி காணாமற் போனார்கள்? என்பதையும் காண விழைகிறோம். 2005 ஆம் ஆண்டிலிருந்து  மூன்றரை வருடகாலம் இராணுவத்தில் சுமார் மூவாயிரம் பேர் இறந்துள்ளனர். 25 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் 
 
ஊனமுற்றுள்ளனர். இதிலிருந்தே சண்டை யின் தாற்பரியம் தெரிகிறது. எப்படியான கடுஞ்சண்டை என்று இதன் மூலமே தெரிகிறது. இப்படியான சண்டையில் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இறந்திருக்க வேண்டும் அப்படியொரு எண்ணிக்கையானோர் இறந்திருப்பார்கள் அல்லவா?
 
அப்படியாயின் காணாமற் போனவர்கள் என நாம் பட்டியலிட்டிருப்பவர்களில் சண்டையில் இறந்தோரும் இருந்திருக்க வேண்டும் அல்லவா?
 
இந்த அடிப்படை யில் நாம் செய்த ஆய்வுகளை நோக்கினால் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது மிகக்குறைந்த வீதத்தில் தான் இருக்கிறது.
 
இதை திட்டமிட்ட கொலைகள் என்றோ, போர்க்குற்றங்கள் என்றோ பொதுவில் கூற முடியாது. இவற்றில் ஓரிரு தவறான சம்பவங்கள் இருக்கக் கூடும். 
 
சமூகத்தில் எல்லா இடங்களிலும் இருப்பது போல் உளவியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ளவர்களால் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். 
 
அப்படியானவை குறித்து சில தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இப்படி வேறு தகவல்கள் இருந்தால் எம்மிடம் தாருங்கள். எம்மிடம் தராமல் வேறு எவரிடமும் கொடுப்பதில் பயனில்லை. அப்படியாயின் நாம் அவற்றைத் தேடி தவறு செய்தவர்களுக்கு தண்டனையை வழங்குவோம்.
 
இவை போர் குற்றங்கள் அல்ல. பொதுவாக கொள்கைகள் அடிப்படையில் நடந்தவை அல்ல இவை. இராணுவத்தினதோ, அரசினதோ கொள்கைகள் அல்ல 
 
இவை அப்படியான கொள்கைகள் என்று எவராலும் ஒப்புவிக்க முடியாது. இப்படியான உறுதிப்பாடு எமக்கு இருக்குமாயின் ஏன் வெளிநாடு ஒன்று இதைத் தேடுவதற்கு அனுமதிக்க வில்லை என சிலர் எம்மிடம் கேள்வி எழுப்பலாம்.
 
ஏன் வெளிநாடு அல்லது குழு ஒன்று இங்கு வரவேண்டும் என்பதுதான் எனது தர்க்கம். எமக்கு இவற்றைத் தெளிவாக சுட்டிக்காட்ட முடியும். நாங்கள் தகவல்கள் தருகிறோம். நீங்கள் ஆராய்ந்து சொல்லுங்கள் என்று தான் நாம் கூறுகின்றோம்.
 
நாம் அரசு என்ற அடிப்படையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஐ.நாவுக்கும் நாம் பல விடயங்களை தெளிவுப் படுத்தியுள்ளோம். தகவல்களையும் வழங்கியுள்ளோம். 
 
ஏற்கனவே நாம் இவற்றை நன்கு ஆராய்ந்து புத்தக மொன்றை வெளியிட்டுள்ளோம். யுனிசெவ் என்ற ஐ.நா. அமைப்பும் சுட்டிக் காட்டியுள்ளது. 
 
இவற்றை ஏன் ஆராயமாட்டேன் என்கிறீர்கள்? இதை செய்ய வேண்டாம்? யாரும் தெரியாத ஒரு நபர். யாரோ சொல்லும் ஒரு கதையைக் கேட்டு அறிக்கை எழுதுவது முக்கியமல்ல.
 
அரசு, பாதுகாப்பமைச்சு என்ற ரீதியில் நாம் தொழில்சார் முயற்சியொன்றை எடுத்துள்ளோம். ஏனென்றால் நாம் பயமில்லை. நான் முன்னர் குறிப்பிட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு சிங்களவர் கூட கலந்து கொள்ளவில்லை. நூற்றுக்கு நூறு வீதமான தமிழர்களே இந்தக் கணக்கெடுப்பை நடத்தினர்.
 
வடக்கில் வாழும் அரச ஊழியர்கள் தான் அவர்கள். ஆசிரியர்மார், கிராமசேவையாளர்கள் தான் பங்குபற்றினர். இராணுவமோ, அரசின் வேறு எவருமோ இதில் பங்கு பெறவில்லை. அவர்கள் சேகரித்த தகவல்கள் எம்மிடம் உள்ளன. இன்னொரு விடயமும் உண்டு.
 
சட்ட விரோதமான முறையில் வெளிநாடு சென்றவர்கள் பற்றி எம் எல்லோருக்கும் தெரியும். படகுகளில் சென்றவர்கள் இந்தியாவில், கிறிஸ்மஸ் தீவில், ஆஸ்திரேலியாவில், கனடாவில் இருக்கின்றனர். இவர்கள் குறித்தான தகவல்களை ஏன் எம்மிடம் தருவதில்லை? இவற்றைக் காட்டுவதற்கு எம்மிடம் விவரங்களைத்தர முன்வரவேண்டும்.
 
இன்று கனடாவில் சிலர் நீதிமன்றத்திற்குச்சென்று இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று நீதிமன்றங்களில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுபவர்கள் கனடாவில் இருக்கின்றனர். இதற்கான சாட்சிகள் எம்மிடம் உள்ளன.
 
இந்த நாடுகள், பெயர்களைத் தருமாயின், இதோ இவர்கள் இந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்று எம்மால் கூறி நிரூபிக்க முடியும். விஞ்ஞான ரீதியில் நாம் நிரூபிக்க வேண்டுமாயின் இந்த உலக நாடுகள் நூற்றுக்கு நூறுவீதம் எமக்கு உதவ வேண்டும்.
 
ஆனால், இந்த நாடுகளோ பெயர் விவரங்களை தர மறுக்கின்றன. அப்படிச்செய்து விட்டு குற்றஞ்சுமத்துகின்றன. எம்முடன் ஒத்துழைக்காமல் குற்றஞ்சாட்டுவது தவறு. 
 
கொள்கை அளவில் எமக்குப்பயங்கரவாதிகளை ஒழிப்பது தான் முதல் நோக்கம். நாம் அவர்களுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை.
 
அதற்கான தேவையும் எமக்கில்லை. ஒஸாமா பின்லேடனுக்கும் தான் இது நடந்தது.  அமெரிக்க ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருக்க ஒஸாமாவைச்சுட்டார்கள்.ஒஸாமாவின் மனைவியைச் சுட்டார்கள். ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருந்தார்.
 
இருவரும் நிராயுதபாணிகளாக இருந்தனர். நாம் ஒஸாமாவைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே. இவ்வளவு கொலைகளைச்செய்தவர்கள் இதனால் தான் செய்தோம் என்றனர். அப்படியாயின் எங்களுக்கு ஒரு சட்டமா? முன்னாள் புலித்தளபதி ரமேஷ் பற்றி எங்களிடம் கேள்வி கேட்கின்றனர். காத்தான் குடியில் மதவழிபாட்டு நிலையத்தில் மக்களைக் கொன்றவர்தான் இவர்.
 
600 பொலிஸார் சரணடைந்தபோது அவர்களைக் கொன்றவர் இவர். பிக்குமாரைக் கொன்றது, எல்லைக்கிராமங்களுக்குச் சென்று மக்களைக்கொன்றதும் இவர்தான். இவர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர். இப்படிச் செய்த நபரின் மரணம் குறித்து கேள்வி கேட்கின்றனர்.
 
இந்த இரண்டிற்குமிடையில் வித்தியாசம் என்ன? ரமேஷ் என்றால் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கருணா அம்மான் ரமேஷைப்பற்றி நன்றாகக் கூறக்கூடியவர்.
 
ரமேஷின் மனைவியும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.ரமேஷ் சார்பில் நட்டஈடு கேட்க ரமேஷின் மனைவிக்கு இருக்கும் உரிமை என்ன? அப்பாவி மக்கள் எத்தனை பேரைக்கொன்றனர். கொழும்பில் குண்டுவெடிப்புகளால் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் எந்த இனமாக இருந்தாலென்ன, உதாரணத்திற்கு கோட்டையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் எத்தனை அப்பாவித்தமிழ்ப் பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.
 
அவர்களுக்கு எப்படி நட்டஈடு கொடுப்பது? அப்பாவி மக்களைக் கொன்றவர்களுக்காக நட்டஈடு கேட்க உரிமை உள்ளதா? இவற்றிற்குப்பதில் வேண்டும். இவற்றைத்தான் பேச வேண்டும். மறைமுகமாக இவற்றைப்பேச வேண்டாம்.
 
ஒஸாமாவிற்கு ஒருவகையாகவும், ரமேஷிற்கு வேறுவகையாகவும் ஏன் பேசுகிறீர்கள்? ஒஸாமா அமெரிக்காவில் சிவிலியன்களைக் கொலை செய்வதைப்போல ரமேஷûம் இங்கு சிவிலியன்களைக் கொன்றிருக்கிறார். இவற்றைத் தான் பார்க்கவேண்டும்.
 
இங்குள்ள ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து புத்தகமொன்றை எழுதுவாராயின் அதை மையமாகக்கொண்டு எம்மீது குற்றங்களைச்சுமத்துவது தவறு.
 
நாம் எமது கணக்கெடுப்பை சிறந்த முறையில் நடத்தியிருக்கிறோம். இதற்கு எதிரான அல்லது இதற்கு முரணான எந்தவொரு ஆதாரத்தையும் முன் வைக்க முடியுமாவென்று நான் சவால் விடுக்க விரும்புகின்றேன். கணக்கெடுப்பைச் செய்து பெயர் விவரங்களுடன் நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இத்தனைபேர் இறந்தனர், இவர்கள்தான் இறந்தனர் என்று நிரூபிக்கின்றோம்.
 
இது நாம் திரட்டிய தகவல்கள் அல்ல. சனத்தொகை புள்ளிவிவரத் திணைக்களத்தின் தமிழ் உத்தியோ கத்தர்கள் மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று திரட்டிய பெயர் விவரங்கள்தான் இவை. கணக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. அதனை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
 
ஏனெனில், எனது மகன் புலிகளிடமிருந்து இறந்தார் என்று எவரும் பகிரங்கமாகச் சொல்ல முன் வருவதில்லை. மரணித்தார்கள் ஆனால், எப்படி மரணித்தார்கள் என்பது தெரியாதென சிலர் கூறகின்றனர். சிலர் விபத்தில் இறந்ததாகக் கூறுகின்றனர்.
 
புலிகள் இயக்கத்திற்குச் சென்றதால் இன்னார் உயிரிழந்தாரென அந்தக் கணக்கெடுப்பில் எவருமே சொல்லவில்லை. ஆனால், அப்படி இடம் பெறுவதற்கு வழியில்லை என்பது எமக்குத் தெரியுமல்லவா? புலிகள் கடுமையாகச் சண்டையிட்டனர். 
 
இல்லாவிடின் இராணுவத்தில் ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டு 25ஆயிரம் பேர் காயமடைந்தது எப்படி? இராணுவம் கல், மரங்களுடன் சண்டையிட்டதா? ரோபோக்களுடன் சண்டையிட்டதா? இல்லையே. சண்டையிட்டு உயிரிழந்தவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். 
 
இவற்றை ஒப்பிட்டுப்பார்த்தவுடன் எம்மால் தெளிவாகக் கூற முடியும். நான் வேண்டிய ஒருவருக்கு, வேண்டிய எந்தவொருவருக்கும் சவால் விடுக்க விரும்புகிறேன். இதற்கு எதிராக நீங்கள் வந்து உங்களது பொய்களை கூறுங்கள் பார்க்கலாம்.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar