இந்தக் கட்டடத்துக்குள் நுழையும் போது எங்கோ ஒரு வதை முகாமுக்குள்
நுழைகிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிலம் முழுவதும்
மொய்த்துக் கிடக்கும் இலையான்கள் எமக்கு வழிவிடு வதற்காக எழுத்து, பறந்த
பின்னர் தமது இடம்தேடி மீண்டும் அமர்கின்றன. அவை ஒவ்வொன்றினதும் அளவே அங்கு
அவற்றுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக் கிடைக்கிறது என்பதை
உறுதிப்படுத்துகின்றது. பின்னணியில் கேட்கும் குழந்தைகளில் அழுகையும்
கதறலும் மனதை வதை செய்கிறது.
இந்தக்
கட்டடத்துக்குள் நுழையும் போது எங்கோ ஒரு வதை முகாமுக்குள் நுழைகிறோமோ
என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிலம் முழுவதும் மொய்த்துக்
கிடக்கும் இலையான்கள் எமக்கு வழிவிடு வதற்காக எழுத்து, பறந்த பின்னர் தமது
இடம்தேடி மீண்டும் அமர்கின்றன. அவை ஒவ்வொன்றினதும் அளவே அங்கு அவற்றுக்கு
எவ்வளவு ஊட்டச்சத்துக் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
பின்னணியில் கேட்கும் குழந்தைகளில் அழுகையும் கதறலும் மனதை வதை செய்கிறது.
கைதடி அரச சிறுவர் இல்லத்துக்குள்
நுழைகையில் அது இப்படித்தான் காட்சி தருகிறது. இங்கு பராமரிப்புக்காக
விடப்பட்ட 46 நாள் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி நோய்வாய்ப்பட்டு, போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந் துள்ளது. அந்தக்
குழந்தையின் தந்தையார் என்று அறிவதற்காக மரபணுச் சோதனை (டி.என்.ஏ)
செய்வதற்கு இரு நாள்கள் இருக்கையில் அந்தக் குந்தையின் சாவு நிகழ்ந்தது.
இது பற்றிய விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குழந்தை
பராமரிக்கப்பட்ட கைதடி அரச சிறுவர் இல்லத்தின் மோசமான நிலையும் ஊடக வெளிச்
சத்துக்குள் வந்துள்ளது.
கைதடி அரச சிறுவர் இல்லத்தில் வைத்துப்
பராமரிக்கப்பட்டுவரும் அநாதைக் குழந்தைகளுக்குப் போதிய சுகாதார வசதிகள்
ஏற்படுத்திக் கொடுக்கப் படவில்லை, குழந்தைகளைப் பராமரிப்பதற்குதேவை யானளவு
பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை, இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு
முரணானது. வடமாகாண மேலதிகாரிகளின் அலட்சியப் போக்கே இந்த நிலைக்குக்
காரணம்'' என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்
றோர்களை இழந்த குழந்தைகளே இந்த இல்லத்தில் அதிக எண்ணிக்கையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுதவிர குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்
தாயாராக இருக்கும் பட்சத்திலும் தனது குழந்தையைப் பராமரிக்க அவருக்கு
யாரும் இல்லை என்ற நிலையிலும் அத்தகைய குழந்தைகளும் இங்கு பராமரிக்கப்
படுகின்றன.
ஆளணி வசதி இல்லை
தற்போது இல்லத்தில் 30 குழந்தைகள்
உள்ளன. அனைத்தும் ஒரு வயதுக்குட்பட்டவை. மூன்று வயதுடைய விசேட தேவையுடைய
குழந்தை ஒன்றும் உள்ளது. சர்வதேச சட்ட விதிகளின்படி ஒரு பராமரிப்பாளர்
இரண்டு குழந்தை களையே பராமரிக்க முடியும். அதிகமானால் மூன்று குழந்தைகளை
ஒருவர் பராமரிக் கலாம். ஆனால் இந்த அரச இல்லத்தில் பத்துக் குழந்தை களை ஒரு
பராமரிப்பாளர் பராமரித்து வருகிறார். 30 குழந்தை களுக்கும் ஒரே சமயத்தில் 3
பணியாளர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்த ஆளணி வசதி அங்கு போதவே போதாது. ஒரு
பணியாளர் 10 குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே
மனிதாபிமானம் அற்ற செயல் என்கிறார் மருத்துவ நிபுணர் ஒருவர். அது உண்மை
என்பதை இல்லத்துக்கு நேரில் வருகை தரும் எவரும் கண்களால் பார்க்க முடியும்.
ஒரு பணி யாளர் ஒரு குழந்தைக்குப் பால் புகட்டி விட்டு வரிசை யாக மற்றக்
குழந்தைகளுக்கும் பால் புகட்டி எட்டாவது குழந்தையிடம் செல்வதற்கிடையில்
முதல் குழந்தை மற்றொரு தேவைக்காக அழ ஆரம்பிக்கிறது. இப்படியே ஓடி, ஓடிக்
கவனிக்க முடியாமல் பணியாளர்கள் விரைவி லேயே சோர்ந்து போய்விடு கிறார்கள்.
ஈக்களின் ஆக்கிரமிப்பு
குழந்தைகள் தனித் தனித் தொட்டில்களில்
போட்டப்பட்டுள்ளன. நுளம்பு, ஈக்களிலிருந்து பாதுகாக்க அவை நுளம்பு வலைகளால்
மூடப்பட் டுள்ளன. ஆனால் எங்கும் ஈக்களுக்குக் குறைவில்லை. ஒவ்வொரு தொட்
டிலிலும் அங்குள்ள மேசை, கதிரை களிலும் நிறைந்திருக் கும் ஈக்களினால் அந்த
மண்டபமே ஆக்கிரமிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.தொட்டில்கள் நுளம்பு வலைகளால்
மூடப்பட் டிருக்கின்ற போதும் அவற் றால் குழந்தைகளை ஈக்களின்
பெருமெடுப்பிலான தாக்குதலில் இருந்து காக்க முடியவில்லை.
குழந்தைகளுக்குப் பால் பருக்கும் பால்
போத்தல்கள் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. ஒரு குழந்தைக்கு ஒரே
பால்போத்தல் என்ற கொள்கை அங்கு இருக்கவில்லை. தாறுமாறாகவே
பயன்டுத்தப்படுகிறது. இருப்பவற்றில் முடிந்தவரை சுகாதாரம் பேண ஊழியர்கள்
முயற்சிக்கின்றார்கள்.
30 குழந்தைகளுக்கும் தனித்தனியே உடை
களும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அனைத்துக் குழந்தை களுக்கும்
அங்குள்ளஉடைகள் மாற்றி மாற்றி அணி விக்கப்படுகின்றன. தொற்று நோய்ப் பரம்பலை
இது அதிகமாக்கும் சாத்தியம் இருந்தா லும், இதுவரை அப்படி நடக்கவில்லை
என்கின்றார்கள். கழுவிய உடை கள் பாதுகாப்பான முறையில் உலர விடப்படவில்லை.
காயவிடப்பட்ட உடைகள் காற்றினால் ஆங்காங்கே அலைக்கழிக்கப்பட்ட பின்னர்
நிலத்தில் போட்டப் படு கின்றன. அப்படியே எடுத்து மண்ணைத் தட்டி விட்டு
அடுத்த தவணைக்காக அது காக்க வைக்கப் படுகின்றது.
கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு
"துன்பம் தான், துயரம் தான், ஆனாலும்
என்ன செய்ய? இருப்பதைக் கொண்டு தானே சமாளிக்க வேண்டி இருக்கிறது'' என்று
கையை விரிக்கிறார்கள் ஊழியர்கள். வசதிகளை யார் ஏற்படுத்தித் தரவேண்டும்
என்று கேட்டால் "அதிகாரிகள்" என்று சொல்லும் அவர்கள், அந்த அதிகாரிகளைச்
சொல்ல மறுக்கின்றார்கள்.
கழிவு நீர் உரிய முறையில் வெளியேற்றப்பட
வில்லை என்பது இல்லத்தின் மற்றொரு குறைபாடு உள்ளே நுழைந்தவுடன் கழிவுநீர்
தேங்கி நிற்பதனையே காணமுடிகிறது. அது மட்டுமன்றி சமையல் கழிவுப்
பொருள்களும் வளாகத்தினுள் வீசப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. அவற்றுக்கு
பூச்சியினங் களையே கொல்லும் சக்தி உண்டென்று அருகில் போய்ப் பார்த்தால்
தெரிகிறது. குழந்தைகளின் சுகா தாரம் இவற்றால் கெடாதா என்றால் ? அது பற்றி
யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அங்குள்ள கிணறு கம்பிவலையினால்
மூடப்பட்டுள் ளது. அது இற்று சிதிலமாகித் தொங்கும் நிலையிலும் ஒரு
குருவிக்கு வாழ்வு கொடுத்துள்ளது.கூடு இன்னும் கிணற்றினுள் தொங்கியபடியே
கிடக்கிறது. அந்தக் கிணற்றுத் தண்ணீர் தான் குழந்தைகளின் தேவைக்குப்
பயன்டுத்தப்படுகின்றது.
இல்லத்தில் உள்ள 30 குழந்தைகளையும்
பராமரிக்க இரண்டு பேர் மாத்திரமே நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள். 7 பேர்
ஒரு வருடத்துக்கும் மேலாகத் தற்காலிகமாகக் பராமரிப்பு பணியில்
சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறி
நேர்முகப் பரீட்சையும் வைக்கப்பட்டது; இன்று வரை நியமனம் வழங்கப்படவில்லை.
"ஏசி" இல்லாத இடத்துக்கு அதிகாரிகள் வருவதில்லை
இந்த 9 பேரும் 24 மணி நேரமும் சுழற்சி
முறையில் 3 பேர் வீதம் பராமரிப்பில் ஈடுபட வேண்டிய அவலம் தொடர்கிறது.
"ஏசி" இல்லாத இந்த இடத்துக்கு உயர் அதிகாரிகள் அடிக்கடி வராததால் அவலங்கள்
அதிகம் அவர்களை எட்டுவதில்லை. வெளி வேலைகளைக் கவனிக்க வென ஊழியர் ஒருவர்
மாத்திரம் நியமிக்கப்பட் டுள்ளார்.
சுகாதாரச் சீர்கேடுகளும்
வளப்பற்றாக்குறை களும் நிலவுகின்றபோதும் அங்கு செல்லும் பொது சுகாதாரப்
பரிசோதகர் இவற்றைச் சீர்செய்ய முயற்சி எடுத்திருக்கவில்லை. குழந்தைகளுக்கு
மருத்துவ வசதிகள் சீராகக் கிடைக்கவும் ஏற்பாடு கள் ஏதும் இல்லை.
அண்மையில் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த
குழந்தை ஒன்று சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் இறந்து விட்டது. இது சம்பந்த மான வழக்கு
யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள் ளப்பட்டது. அதன்போது அந்த இல்லத்துக்குச்
சென்று சுகாதார வசதிகள் உள்ளிட்ட விடயங் களைப் பார்வையிட்டு மன்றுக்கு
அறிக்கை சமர்ப் பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை
சட்டவைத்திய அதிகாரி உள் ளிட்ட குழந்தை வைத்திய நிபுணர்கள் குழு வொன்று
அண்மையில் கைதடி அரச சிறுவர் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று
பார்வையிட்டது. அதுபற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
குழந்தைகளுக்கு கிருமித்தொற்று
நிபுணர் குழு சென்றிருந்தபோது குழந்தை
ஒன்று நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததைக் கண்டறிந்தனர். அதற்கு முன்
அதுபற்றி யாரும் அங்கு அக்கறை எடுத்திருக்கவில்லை. பராமரிப்பாளர்
பற்றாக்குறையால் ஒவ்வொரு குழந்தையையும் நெருக்கமாகக் கண்காணிக்க
முடியவில்லை என்கிறார்கள் ஊழியர்கள். இருக்கும் பராமரிப்பாளர்களுக்கு
குழந்தைகளைப் பராமரிப்பது பற்றிய பயிற்சிகள் போதுமான தாக இல்லை என்பது
மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஒரு பராமரிப்பாளரின் கையைப் பரிசோதித்த
போது தொற்றுக்கிருமி காணப்பட்டது. குழந்தைகள் பராமரிக்கப்படும் மண்டபம்
உரிய முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்கவில்லை. தரை ஒட்டும் தன்மை யாகவே
காணப்படுகிறது' என்றார் நேரில் சென்று பார்த்த மருத்துவர் ஒருவர்.
"இந்த அலுவலகத்துக்குள் மின்பிறப்பாக்கி
வைக்கப்பட்டுள்ளது. மின் தடைப்படும்போது அது இயக்கப்பட அதன் சத்தம்,
வெளியிடும் புகை குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என அவர்
தொடர்கிறார்.
இந்த இல்லத்துக்கு அரசால் "ஹயஸ்" வாகனம்
ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் இன்றுவரை அது இல்லத்துக்கு
வந்து சேரவில்லை என்றும்கூட ஒரு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதனை
உறுதிப்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் எவரும் பதில் சொல்வதற்குத் தயாராக
இல்லை.
இல்லத்தில் குழந்தைகளின் நிலை குறித்து
நீதி மன்ற உத்தரவுக்கமைய அங்கு சென்று பார்வை யிட்ட யாழ்.போதனா வைத்தியசாலை
குழந்தை வைத்திய நிபுணர் திருமதி கீ.சத்தியதாஸ் இப்படி விவரிக்கிறார்.
"குழந்தைகளைப் பராமரிப்பதற்கு சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி தேவையான
பராமரிப்பாளர்கள் அங்கு நியமிக்கப்படவில்லை. ஒரு பராமரிப்பாளர் இரண்டு
குழந்தைகளை மிஞ்சி மிஞ்சி மூன்று குழந்தைளையே பராமரிக்க முடியும் ஆனால்
இங்கு ஒருவர் 10 குழந்தைகளைப் பராமரிக்கும் நிலை. அங்கு ஈக்கள்
மொய்திருந்ததைப் பார்த்த போது மிக அருவருப்பாக இருந்தது இல்லத்துக்குச்
சென்று அந்தக் குழந்தைகளைப் பார்வையிட்டு சிகிச்சையளிக்கும்படியோ அங்குள்ள
பராமரிப்பாளர்களுக்கு குழந்தைகளைப் பராமரிப்பது பற்றிய பயிற்சிகளை வழங்கும்
படியோ அதற்குப் பொறுப்பானவர்கள் வைத்தியசாலைத் தரப்பினரிடம் இதுவரை
கோரிக்கை முன்வைத்திருக்கவில்லை. அவர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில்
பராமரிப்புப் பறிறய பயிற்சிகளை வழங்கமுடியும்.
அங்குள்ள மூனறு வயதுக்குழந்தையொன்று
உரிய கவனிப்பின்றி மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றது. மன ஆற்றலை
வளப்படுத்துவதற்கான பயிற்சிகள் அந்தக் குழந்தைகளுக்கு
வழங்கப்பட்டிருக்கவில்லை.
இல்லத்திலிருந்து சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்து விட்டது. அந்தக் குழந்தை
பிறந்து 45 நாள்களாகியும் 100 கிராம் நிறை மட்டுமே அதிகரித்திருக்கிறது இது
பராமரிப்பின் குறைபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது''
என்கிறார். இந்த இல்லம் மாவட்ட
நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழேயே வருகிறது. அந்தத்
திணைக்கள வடமாகாண ஆணையாளர், மாவட்ட அதிகாரி ஆகியோரைத் தொடர்பு
கொண்டுகேட்டபோது கைவிரித்து விட்டார்கள். எங்கள் அதிகாரத்தில் ஊடகங்களுக்கு
நாங்கள் கருத்துத்தெரிவிக்கமுடியாது என்று கூறி விட்டார்கள்.வடமாகாண பிரதம
செயலாளர் ஆ.சிவசுவாமியுடன் தொடர்புகொண்டு இதுபற்றி உதயன் கேள்வி
எழுப்பியது. முதலில் தொடர்புகொண்டபோது விவரங்களைத் தொலைநகலில்
அனுப்புகின்றோம் என்றார். சில நாள்கள் கழித்துத் தொடர்பு கொண்டபோது இதில்
கருத்துத் தெரிவிக்க எதுவும் இல்லை என்றார்.
இந்த இல்லத்தில் இருந்த குழந்தையின்
இறப்புக்கான காரணம் தொடர்பாக போதனா வைத்தியசாலைச் சட்ட வைத்திய அதிகாரி
எஸ்.சிவரூபனுடன் தொடர்பு கொண்டுகேட்டபோது கருத்துத் தெரிவிக்க அவரும்
மறுத்துவிட்டார். இந்த குழந்தையை அச்சுவேலியைச் சேர்ந்த பெண் ஒருவர்
பெற்றெடுத்த பின்னர் அரச இல்லத்தில் ஒப்படைத்தார். குழந்தையின் தந்தையால்
ஏமாற்றப்பட்டதால் அதனை வளர்க்க அவர் விரும்பி இருக்க வில்லை. அதனால்தான்
குழந்தை அரச சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டது. அங்குள்ள ஒவ்வொரு
குழந்தைக்குப் பின்னாலும் இது போன்ற ஒரு கதையுண்டு. இந்தப் பிறப்புக்காக
அந்தக்க குழந்தைகள் ஏங்கவில்லை. பின்னர் அரச இல்லம் வரவேண்டும் என்று அவை
அடம் பிடிக்கவும் இல்லை. பின்னர் "ஏன் எங்களுக்கு இந்த நகர வாழ்க்கை''
என்று கேட்கின்றன குழந்தைகள். எந்த அதிகாரி இதற்குப் பதில் சொல்வார்?
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011
Ingen kommentarer:
Legg inn en kommentar