மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம் மண்ணில் எமக்காகப் பிறந்தது: 19170117 கண்டி இலங்கை.
பெற்றோர்கள்:
தந்தை மருதூர் கோபாலமேனன் (வழக்கறிஞர், நீதிபதி)
தாய்: அன்னை சத்தியபாமா
சகோதரர்கள்: இரண்டு சகோதரி, இரண்டு சகோதரன், மக்கள் திலகம் 05 ஆவது கடைசிப் பிள்ளை
மறைந்தவர்கள்: இரண்டு சகோதரி, ஒரு சகோதரன் தந்தை உட்பட நான்கு பேர் 1920
தமிழ் நாடு வருகை: 1921 இல் அன்னை சத்தியபாமா அண்ணன் திரு.சக்கரபாணி
குடியேறிய இடம்: கும்பகோணம்
படித்தபள்ளி: ஆணையடி
பயின்றகல்வி: 03ஆம் வகுப்பு
முதல் நாடகம்: மகாபாரதம் 1924 ஏற்றவேடம் நத்திரன், சம்பளம் 05 ரூபாய்
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பனி: உரிமையாளர் எம்.எஸ்.சச்சிதானந்த பிள்ளை
நடித்த தேசபக்தி நாடகங்கள்: கதர்பக்தி, கதிரின் வெற்றி, பதிபக்தி, தேசியக்கொடி, தேசபக்தி
பணியாற்றிய நாடக கம்பனிகள்: கிருஸ்ணன் நாடகக் கம்பனி, யுரைதூர் முகைதீன் நாடகக் கம்பனி, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பனி
கவர்ந்த தலைவர்: நேதாஜி, காந்திஜி
கவர்ந்தது: கதாராடை, தீண்டாமை, ஒழிப்பு, மதுவிலக்கு சுதந்திர கொள்கை
பின்பற்றியவை: கதாராடை அணிவது, கொள்கைகளை நேசிப்பது
சென்னை வருகை: 1932 சென்னை கவுனி அம்பாள் வீதி வாடகை வீடு
திரையுலகம் அறிமுகம் செய்தவர்: திரு கந்தசாமி முதலியார்
முதல் திரைக்காவியம்: சதிலீலாவதி(100 ரூபாய் சம்பளம்)
முதல் திருமணம்: 1941இல் திருமதி தங்கமணி என்ற பார்க்கவியை மணந் தார். மனைவி மரணம் 1942 இல் தங்கமணி மாரடைப்பால் மரணமடைந்தார்.
02 ஆவது திருமணம் 1944 இல் திருமதி சதானந்தவதியை திருமணம் செய்தார்
முதல் கதாநாயகன்: 1947 இல் இராஜகுமாரி அறிமுகம் செய்த நிறுவனம் ஜுபிடர் பிக்சர்ஸ்.
தாய் மரணம்: 1952 இல் அன்னை சத்தியபாமா அவர்கள் மறைந்தார்.
02ஆவது மனைவி மரணம் 1945 ஆம் ஆண்டு முதல் 1961 வரை காசநோயால் பாதிக்கப்பட்ட திருமதி சதானந்தவதி அவர்கள் 16 ஆண்டுகள் கழித்து மரணமடைந்தார்.
03 ஆவது மனைவி: வி.என்.ஜானகி அவர்களை 14.06.1962 இல் மணந்தார்.
அண்ணாவின் தி.மு.க: டி.வி . நாராயண சாமி மூலம் நட்புறவு ஏற்பட்டு 1953 இல் தி.மு.கவில் இணைந்தார்.
சொந்த நாடக கம்பனி: எம்.ஜி.ஆர். நாடக மன்றம்.
1952 இல் திருப்பு முனை செய்த திரைக்காவியங்கள்: நாடோடி மன்னன், திருடாதே, மர்மயோகி, மலைக்கள்ளன்.
மேல்சபை உறுப்பினர்: 1962 முதல் 1964 வரை இரண்டு வருடங்கள்.
சட்டமன்ற உறுப்பினர்: 1967 முதல் 1987 வரை (21 வருடங்கள்)
புதிய இயக்கம்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17.10.1972
முதல்வர் பதவி: 03 முறை 1977 முதல் 1987 வரை (11 வருடங்கள்)
திரைப்படங்கள் 1936 முதல் 1946 வரை சிறிய கதாபாத்திரங்கள் 20 திரைப்படங்கள் கலர்படங்கள் மொத்தம் 40. அலி பாபாவும் 4 0 திருடர்களும் முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை கதாநாயகன் 1947 முதல் 1978 வரை இராஐகுமாரி முதல் மதுரை மீ.சு.பாண்டியன் வரை
மரணத்தை வென்ற மக்கள் திலகம்
01.1959 இல் சீர்காழி அட்வக்கேட் அமரர் நாடகத்தின் போது காலில் முறிவு ஏற்பட்டது.
02.1967 இல் நடிகர் எம்.ஆர் இராதா அவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்
03.1984 இல் உடல் நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்
- மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் தெலுங்கு 62, இந்தி 06 மலையாளம் 02
- தி.மு.காவில் புரட்சி நடிகர் 1953 முதல் 1972 ஒக்ரோபர் வரை (19 வருடங்கள்)
- நாடகத்துறையில் தொடர்ந்து 1924 முதல் 1963 வரை 40 வருடங்கள்.
- திரையுலகில் பொன்மனச்செம்மல் 1936 முதல் 1978வரை 42 வருடங்கள்
- அரசியல் வானில் புரட்சித்தலைவர் 1932 முதல் 1987 வரை 55 வருடங்கள்
- ஈழத்தமிழர் இதயங்களில் 1917 முதல் 2011வரை 94 வருடங்கள்
மக்கள் மனங்களில் 24.12.1987 ஆங்கில வருடத்தில் முதல் ஜனவரி மாதம் பிறப்பு.
மக்கள் திலகம் கடைசி வாழ்க்கை இறுதி மாதம் மார்கழியில் இறப்பு இதுவும் ஒரு சாதனைதான். தமிழ் மாதத்தில் தைபிறந்தால் நல்வழி பிறப்பது போல் சாதனை தமிழ் மாதத்தில் பிறந்தால்,மார்கழியில் இறந்தால் மோட்சம் என்பதற்கு மார்கழி மாதத்து பூவாக மறைந்தார் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்தார்.
எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்
- சிறந்த நாடக மேடை நடிகர்
- எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
- உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
- எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
- சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
- திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
- எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
- அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
- நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
- ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
- திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
- சிறந்த கதாசிரியர், சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
- அண்ணா நாளிதழின் நிறுவுனர்
- சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
- பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
- நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
- 02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
- ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
- வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
- இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967 1979).
- 03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
- சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
- சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.
எம்.ஜி.ஆரின் எளிமையான வாழ்க்கை
- காலை உதயத்தின் தாயின் உபசரிப்பு.
- உடலின் வலிமைக்கு நித்தம் ஒரு உடற்பயிற்சி.
- தியான உணர்வில் தினமும் ஒரு தியானம்.
- காலை நேரப்பொழுது குளியலின் ஒரு புத்துணர்ச்சி.
- ஈர ஆடையுடன் தாயின் பிரார்த்தனையும் கடவுள் நம்பிக்கையும்.
- காலை தேநீர், பழைய சாதத்தின் நீராகாரம் பருகுதல்.
- காலை நேரத்து உணவு யாராவது ஒருவருடன் சாப்பிடுதல்.
- அறிவு நூல்களை படிப்பதற்கு வீட்டில் ஒரு நூலகம்.
- தண்ணீரில் தியானம் செய்வதற்கு நீச்சல் குளம்.
- வந்தவர்களை அன்புடன் வரவேற்று வாயாற உணவளித்தல்.
- முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூற அண்ணாவின் புனித அறை.
- வெளியே செல்லும் போது தாயை வணங்க தாய்க்கு ஒரு கோயில்.
- கடமை உணர்வோடு காவல்புரியும் காவலர்களுக்கு ஒரு வீடு.
- தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகைக்கு வரும் மக்களுக்கு உணவளிக்க ஒரு இடம்.
- செய்தித்தாள், நண்பர்கள் பேட்டி, புகைப்படம் எடுக்க வசதியான இடம்.
- தன்னை காணவரும் மக்களுக்கு பணிவிடைசெய்ய, மனுக்களை ஏற்றுக்கொள்ள தன் வீட்டில் தனி வசதி.
- புரட்சித் தலைவருக்குப் பிடித்தது
- கொடுப்பதில் சலிப்படையாதவர்.
- கொள்கை வழி பின்பற்றுபவர்.
- எதிரிகளை நண்பனாக நினைப்பவர்.
- நம்பினவர்க ளை வாழ வைக்கும் நல்லெண்ணம்.
- பெற்ற தாயை தெய்வமாக பூசிப்பவர்.
- சங்க இலக்கிய நூல்களை விரும்பிப் படிப்பவர்.
- பிறர் குற்றம் பொறுப்பது, திறமையான வர்களை பாராட்டும் தன்மை.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011











Ingen kommentarer:
Legg inn en kommentar