ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்துக்கான உட்கட்சிப் போராட்டம் கடந்த வாரம் தீவிர மடைந்திருக்க காணப்பட்டது. இந்தக் குளறுபடிகளுக்கு மத்தி யில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் மீது எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சி நடத்தவேண்டிய போராட்டம் பலமிழந்துபோய்க் கொண்டி ருக்கிறது. கொழும்பு நாடாளு மன்ற உறுப்பினர் மோகன்லால் கிரேறோவைத் தன் பக்கம் அரசு இழுத்துக்கொண்டதன் பிறகும் அந்தக் கட்சி பாடம் படித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஜக்கிய
தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்துக்கான உட்கட்சிப் போராட்டம் கடந்த வாரம்
தீவிர மடைந்திருக்க காணப்பட்டது. இந்தக் குளறுபடிகளுக்கு மத்தி யில் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் மீது எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சி
நடத்தவேண்டிய போராட்டம் பலமிழந்துபோய்க் கொண்டி ருக்கிறது. கொழும்பு நாடாளு
மன்ற உறுப்பினர் மோகன்லால் கிரேறோவைத் தன் பக்கம் அரசு இழுத்துக்கொண்டதன்
பிறகும் அந்தக் கட்சி பாடம் படித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்சியின்
பிரதித் தலைவர் கரு ஜயசூரியாவை கட்சித்தலைமையை ஏற்று நடத்துமாறு ஹோட்டல்
ரேணுகாவில் இடம் பெற்ற ஒரு நிகழ்வில் இன்னொரு பிரதித் தலைவரான சஜித்
பிரேமதாசா கேட்டுக் கொண்டிருந்தார்.ஐ.தே.கட்சி அமைப்பு விதி களின் கீழ்
அப்படியான ஒரு பதவியை எவருக்கும் வழங்கக் கூடிய அதிகாரம் பிரேமதாசா வுக்கு
இல்லாது போனாலும் அந்த விடயம் சர்ச்சைகளை உருவாக்கத் தவறவில்லை பொதுமக்கள்
கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தது.அப்போது லண்டனிலிருந்த கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க ஆத்திரத்துக்குள்ளாகி அவசரமாக நாடு திரும்பினார்.
அதன்பிறகு ஜயசூரிய மீது அழுத்தங்கள் அதிகரிக்கலாயின. ஜயசூரிய
வெளியிட்டிருந்த மிகக்கவனமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தலைவராகப்
பொறுப்பேற்கும்படி கட்சிக குள்ளிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம்
தெரிவித்திருந தமை உண்மைதான் என்று குறிப்பிட்டிருந்ததுடன் பின்
வாங்கிக்கொண்டார்.
இரண்டு அடி முன்வைத்தால் மூன்றடி
பின்வாங்கி விட்டார் அவர். அதன் பின்னர் ஜயசூரிய தரப்பினருக்கும் பிரேமதாசா
பிரிவினருக்குமிடையில் முரண்பாடுகள் முற்றிவருவது தெரியவந்தது.கடந்த மாதம்
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்காவை தமக்குப் பதிலாக
பணியாற்ற ரணில் விக்கிரமசிங்கா நியமித்தபோது ஜயசூரியாவுக்கு மேலும் ஒரு
பலமான அடிவிழுந்தது. சர்வ தேச ஜனநாயக யூனியன் மகா நாட்டில் கலந்துகொள்ள
ரணில் புறப்பட்டுச் சென்றார். அது கன்னத்தில் விழுந்த பெரிய அறையாக
இருந்தபோதிலும் மேலும் பல அவமானங்கள் கட்சியில் காத்திருந்ததாக ஜய சூரிய
தமது சகாக்களிடம் கூறியிருந்தார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் முதல்
நாள் உரை நிகழ்த்த தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை, நேரமும் வெட்டிக்
குறைக்கபட்டிருந்தது என்று கூறியுள்ளார் அவர். அமரதுங்க தம்மை மோசமாக
நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை
மறுத்துள்ள அமரதுங்க அவருக்கு வழங்கப்பட்ட நேரம் முழுவதும் அவர் கேட்டுக்
கொண்டபடியே வழங்கப்பட் டது என்றார். குறிக் கப்பட்ட நேரம் தான் எமக்கி
ருந்தது. அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட வேண்டியிருந்தது தலைமைத்து
வத்துக்கும் அதற் கும் எதுவிதத் தொடர்புமில்லை என்றார் அவர். பொதுவில்
ஜயசூரிய பெரும்பாலும் சபையில் இருப்பதில்லை என்றார்.
எதுவானாலும் இரண்டாவது நிலையில்
செயற்பட்டு வந்துள்ள ஜயசூரிய இப்போது அமரதுங்காவுக்கு அடுத்த நிலைக்கு
தள்ளப்பட்டுவிட் டார் என்பது தெளிவாகின்றது.இப்பொழுது ஜயசூரியா பிரரேமதாசா
தரப்புக்களுக் கிடையில் புதிய இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. திரைக்குப்
பின்னால் நடந்தேறியுள்ள பல விடயங்களுக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள்
சம்பந்தப் பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
மீண்டும் ஜயசூரியாவை தலைமைப் பதவியை
ஏற்று நடத்துமாறு பிரேமதாசா அவரை கேட்டுக்கொள்வது என்றும் இணக்கம்
காணப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலையில் நடந்தேறியுள்ள நாடகத் தின் மீள்
மேடையேற்றமே. ஆனால் இந்த முறை ஜயசூரியா பின் வாங்கமாட்டார் என்பதே
உறுதிமொழி. ஜயசூரியா தமது தகுதி மற்றும் கட்சியின் செயற்பாடுகள்
தலைமைத்துவப் போட்டி கள் பற்றியெல்லாம் நீண்ட அறிக்கைகள் விடுத்துள்ள நிலை
யில் ரணில் விக்கிரமசிங்க தமது சார்பில் நாடாளுமன்றில் செயற்படுவதற்காக
நியமிக் கப்பட்டுள்ள ஜோன் அமர துங்க தம் தரப்பின் ஓர் அறிக்கையை
வெளியிட்டிருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:
ஜயசூரியாவுக்குதார்மீகத் தகுதியில்லை
கரு ஜெயசூரிய 16 உறுப்பினர்களுடன் அரசு
பக்கம் கட்சி மாறியதன் பின்னர் ஐ.தே. கவின் தலைமைப் பதவிக்கு
போட்டியிடுவதற்கான தார்மிகத் தகுதியை இழந்துவிட்டார். ஒரு சிரேஷ்ட
உறுப்பினர் என்ற முறையில் ஜயசூரியாவை விட அதிக தகுதிகள் எனக்கு இருந்த
போதிலும் குறுக்குவழிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. தலைமைத்துவம் மாற
வேண்டும் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்
கொள்கின்றோம். ஆனால் இப்போது கட்சித் தலைமைக்கு மிகவும் பொருத்த மான மனிதர்
ரணில் விக்கிரமசிங்காவே. மக்கள் விரும்பாதவிடத்தில் கட்சி
தோல்வியுற்றுவிடும். 1977 இல் அரசுக்கு எதிராக மக்கள் செயற்பட்டார்கள்.
கட்சி செல்வாக்கை இழந்தது. ஒரு அரசு செல்வாக்கை இழக்கும் வரை அதனை
தோற்கடிக்க முடியாது. இந்த அரசு இன்னமும் செல்வாக்கை இழக்கவில்லை.
ஏனென்றால் இராணுவ வெற்றியில் அவர்கள் தங்கியுள்ளார்கள். அந்த செல்வாக்கு
இன்னமும் நிலைத்து இருக்கின்றது. கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு
எதிராக செயற்படுவார்களானால் கட்சி வெற்றி பெறுவதை எதிர்பார்க்க முடியாது.
காமினி திஸநாயக்க, லலித் அத்துலத் முதலி, ஜி.எம். பிரரேமச்சந்திர
முதலியவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து ஐ.தே.கவை முதல் தடவையாக
நாசமாக்கினார்கள் 2007 இல் கருஜெய சூரிய 16 உறுப்பினர்களுடன் அரசுடன்
சேர்ந்துகொண்டு கட்சியை இரண்டாம் முறையாக நாசம் செய்தார். அரசை தோற்கடிப்
பதற்கு கிடைத்திருந்த நல்ல தொருதருணம் ஜயசூரிய வால் இழக்கப்பட்டது.
ஜயசூரியா மீண்டும் வெறுங்கையுடன்
கட்சிக்குத் திரும்பிவர விரும்பியபோது பெரும்பாலான சிரேஷ்ட தலைவர்கள் அதனை
விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் தலையிட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று
நடவடிக்கை எடுக் கப்படாமல் தடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின்
பிரதித் தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப் பட்டுள்ளது. அவருக்கு
வழக்கப்பட்ட உதவியை மறந்துவிட்டு இன்று தலைமைப் பதவிக்கு போட்டியிடத்
துணிகிறார்.மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டபோது கட்சிக்குமாறாக இனி ஒரு
போதும் செயற்பட மாட்டேன் என்று ரணில் விக் கிரமசிங்கவுக்கு உறுதி வழங்கி
யிருந்தார். 1960 இல் நான் கட்சிக்கு வந்தேன் 1985 இல் கூட தலைமைப்
பதவிக்கு போட்டி யிட எனக்கு கட்சி அனுமதி வழங்கவில்லை. ஆனால் நான் கட்சியை
விட்டுவிலகி ஓட வில்லை. தலைமையின் தீர்மா னத்தை நான் மதித்து நடந்து
கொண்டேன்.அமரதுங்காவின் இந்த அறிக்கையைக் கண்டித்து ஐ.தே. கவின் மொனராகல
உறுப்பினர் றஞ்சித் மத்தும பண்டார கடும் தொனியில் கருத்துவெளியிட்டி
ருக்கிறார்.அமரதுங்க அரசுக்காக பேசு கிறாரா அல்லது ஐ.தே.கவுக் காக
பேசுகிறாராவென்று தெரிய வில்லை என்கிறார் அவர்.
கடந்த வருடத்தில் தான் அவர்
கூறியிருந்தார் தமது ஆதரவாளர் கள் அரசுடன் இணைந்துகொள் ளும்படி
கூறுகிறார்கள் என்று அவருக்கு இப்போது அப்படி கூறுபவைகளை வெளியிடு வதற்கு
தார்மிக உரிமை கிடை யாது. அவர்களின் கருத்துகளுக் கெல்லாம் அதிக பிரசாரம்
வழங்கியவை அரச ஊடகங் கள் தான். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள்
யார் என்று தெரிய வில்லை என்றார் அவர். அமரதுங்க தனது ஒரு காலை அரசு
பக்கமும் மறு காலை ஐ.தே.க பக்கமும் வைத் துக்கொண்டி கிறார் என்றார் அவர்.
ஆரம்பத்தில் சஜித் பிரேம தாசாவின்
கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கட்சியின் தலை மைப் பதவிக்கு போட்டியிட முற்
பட்டமை மூலம் ஜயசூரியா தவறி ழைத்துவிட்டார். அது ஒரு பக்கம். இன்னொன்று
விக்கிரம சிங்க தம் சார்பில் நாடாளுமன் றில் பிரதிநிதித்து வம் செய்யும்
உரிமையை ஜயசூரியாவுக்கு வழங்க மறுத்து விட்டமை. இது தான் இப்போது
ஐ.தே.கட்சிக்குள் வெளிப்படையாக நடக்கத்தொடங்கியுள்ள குத்து வெட்டுகளுக்கு
காரணம்.
விக்கிரமசிங்க கட்சியின் செயற்
குழுவிலும் நாடாளு மன்றக் குழுவிலும் பெரும் பான்மை உறுப்பினர்களின் ஆதரவை
பெற்றிருக்கிறார் என்று கட்சி உறுப்பினர்கள் கூறுகிறார்கள். எனவே கட்சி
தேர்தல் ஒன்று நடைபெற்றால் அவரே வெற்றி பெறுவார் என்கிறார்கள் அவர் கள்.
அது நடைபெறுமானால் ஜயசூரியவின் அரசியல் எதிர் காலம், ஏதும் புதிய அணுகு
முறை ஏற்பட்டாலன்றி சூனியமாகி விடும் என்பது திண்ணம். ஜயசூரிய
வெற்றிபெறுவாரா னால் பிரேமதாசா குழுவினரு டன் இணங்கிப் போவது என்பது பெரும்
காரியமாக விருக்கும் பிரேமதாசா ஐ.தே. கவின் அடுத்த தலைமைப் பதவியில்
கண்வைத் துக் கொண்டிருப்பவர். அவரும் அவரது ஆதரவாளர்களும் தங்களுக்கென்ற
தனிதிட்டத் துடன் செயற்பட்டுவருபவர் கள். கட்சியை எப்படி நடத்து
வதுயாருக்கு பதவிபோக வேண் டும் என் பதில் கருத்தாக இருப் பவர்கள்.இந்த
சூழ்நிலையில் ஐ.தே. க. நாட்டின் மிக பிரதான எதிர்க் கட்சியாக எவ்வாறு
நிலைத்து நிற்கப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011
Ingen kommentarer:
Legg inn en kommentar