ஏணியும் பாம்பும்

 essay
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக இன்று நாட்டு மக்கள் பெரும் சிரமங்களுடன் வாழ்க்கையை செலுத்த நேர்ந்துள்ளது. அவர்களது அன்றாட அத்தியாவசியப் பாவனைப் பொருள்கள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாக இன்று நாட்டு மக்கள் பெரும் சிரமங்களுடன் வாழ்க்கையை செலுத்த நேர்ந்துள்ளது. அவர்களது அன்றாட அத்தியாவசியப் பாவனைப் பொருள்கள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
 இந்த நிலைமை நீடித்தால் அரசின் வீழ்ச்சிக்கு அதிக காலம் ஆகப் போவதில்லை. எதிர்வரும் நவம்பர் மாதமளவில் ஜனாதிபதி மஹிந்தவை ஆட்சியினின்றும் வீழ்த்தி, எம்மால் அரசைக் கைப்பற்ற இயலும் என அண்மைக் காலமாக எதிர்க்கட்சியினர் நம்பி வருகின்றனர்.
 
ஆயினும், அண்மையில் உலகப்பிரசித்தி பெற்ற, அமெரிக்காவின் முன்னனி நிறுவனமொன்றான "ஹோல்அப்' நிறுவனம், ஆசியாவின் பிரபலமான அரசியல் தலைவர்கள் குறித்து மேற்கொண்ட பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பொன்றின் முடிவுகளின் படி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இன்றைய அரசை இந்த நாட்டின் பொதுமக்களில் 91 சதவீதத்தினர் ஆதரிப்பதாகவும், ஆசியாவின் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது இடத்தில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
 
 இதன் மூலம், அத்தியாவசிய பாவனைப் பொருள்களின் விலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றை முன் வைத்து இன்றைய அரசைப் பதவியிலிருந்து அகற்றி விடலாம் என்ற எதிர்கட்சியினரின் நம்பிக்கை அத்தனை இலகுவில் கைகூட வாய்ப்பில்லை. அரசு மீதான மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களுடன், சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலை குறித்தும், அரசை விமர்சித்து அதன் மூலம் அரசியல் இலாபமீட்டும் எதிர்கட்சியினரின் நோக்கமும் நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்புக்கு உரியதொன்றாக அமையவில்லை.
 
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ஏற்று ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அவரால் நாட்டின் பெரும்பாலான பொதுமக்களது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருப்பது புதுமையான தொன்றே. எந்தவொரு அரசுத் தலைவரும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இரண்டோ மூன்றோ ஆண்டுகள் கழிந்ததும், பொது மக்களது ஆதரவை இழக்க நேர்வது வழமையானதொன்றே.
 
இதற்கு உதாரணம் வேறெங்கும் தேட வேண்டியமில்லை. இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றில் இதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. 1977 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து மடங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் அரசமைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, 1982 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தமது தொடர்ச்சியான செல்வாக்கை உறுதிப்படுத்திக் காட்டினார். 
 
ஆயினும் 1983 கறுப்பு ஜூலை கலவரத்தையடுத்து அவரது மக்கள் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.
 
1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாசவுக்கும், இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே பல வித ஒற்றுமை உள்ளது. பிரேமதாசவைப் போன்று மஹிந்த ராஜபக்ஷவும் அரசியலில் கீழ் நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறிய ஒருவரே. பிரேமதாச அரச தலைவரான வேளையில் பத்தாண்டுகள் கால ஐ.தே.கவின் ஆட்சியின் பழைய பழிபாவங்களைச் சுமந்து கொண்டே பதவியில் அமர்ந்தார்.
 
 அதே போன்று மஹிந்த ராஜபக்ஷ அரச தலைவராகப் பதவி ஏற்ற வேளை ஒன்பது ஆண்டுகள் கால சுதந்திரக் கட்சி ஆட்சியின் பழைய பழிபாவங்களைச் சுமந்து கொண்டே பதவியில் அமர்ந்தார்.
 
பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் காலமே பிரேமதாசவால் நேரான வழியில் நாட்டை நிர்வகிக்க முடிந்தது. 1991 ஆம் ஆண்டில் தமக்கெதிராக அந்த வேளையில் லலித் அத்துலக் முதலி மற்றும் காமினி திஸநாயக்கா ஆகியோரால் தமக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன் 
 
பிரேமதாசவின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. அதன் பின்னரான இரண்டாண்டுகள் காலம் வரை மட்டுமே பிரேமதாசவால் பதவியில் நீடித்திருக்க முடிந்தது.
 
1994 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்ற சந்திரிகா, 1999 ஆம் ஆண்டிலும் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். விடுதலைப் புலிகளது தாக்குதல் காரணமாக படுகாயமுற்றதால் பொது மக்கள் மத்தியில் உருவான அனுதாப அலையே சந்திரிக்காவின் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வழி செய்தது. ஆயினும் அதன் பின்னர் நீண்டகாலமாக பதவி வகிக்க சந்திரிகாவுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று பதவியைத் தொடர்ந்த போதிலும், ஓராண்டு காலம் முடிவடையும் முன்னர் சந்திரிகா அரசு கவிழ்க்கப்பட நேர்ந்தது.
 
இவை யாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் இன்று எதிர்க்கட்சியினர் இன்றைய மஹிந்த அரசை எதிர்வரும் நவம்பர் மாதத்துள் தம்மால் கவிழ்த்துவிட இயலும் என்று நம்புகின்றனர் போலும்.
 
இன்று பொருள்கள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் என்பவை தொடர்பாக அரசு மீது தொடர்ச்சியாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி விமர்சித்து வரும் நிலையில், ஒன்பது ஆண்டுகள் கால சுதந்திரக்கட்சி ஆட்சியின் பழிபாவங்களுக்கு மத்தியில் தன் செல்வாக்கை மக்களிடம் தக்கவைத்திருப்பது அவரின் சாதனையே.
 
விடுதலைப் புலிகள் இயங்கும் வரை, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் எவ்வித பிரச்சினையுமின்றி தமது அதிகாரத்தைத் தக்க வைக்க இயலும் என முன்னர் ஒரு கருத்து இருந்தது. 
 
ஆயினும் மஹிந்த விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விடுவதில் தீவிரம் காட்டினார். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த போதிலும், அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு சிறிதளவும் குறைந்து போய்விடவில்லை.
 
ஆயினும் போரை வென்றெடுத்த ஜனாதிபதியுடன் குறிப்பிடத்தக்க அளவு அர்ப்பணிப்புச் செய்த இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டில் சிறைக்கு அனுப்பியதன் மூலம் ஜனாதிபதியின் வெள்ளை உடையில் சிறிதளவு கறை படிந்தது. 
 
ஜனாதிபதியின் தீவிர ஆதரவாளர்களில் பலர், இராணுவத்தளபதி சிறைக்கனுப்பப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி மீது அதிருப்தி அடைந்திருந்தனர்.
 
சிறைவாசம் அனுபவித்த சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்ததன் மூலம் தமது வெள்ளை உடுப்பில் பதிந்திருந்த கறையை ஜனாதிபதி போக்கிக் கொண்டுள்ளார். அரசில் அங்கம் வகிக்கும் சிலர் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாதுள்ளனர். சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் அவரதும் எதிர்க்கட்சிகளினதும் மதிப்பு அதிகரிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். 
 
சிறையிலிருந்து விடுக்கப்பட்டாலும் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை கிடையாது. அவர் தேர்தலெதிலும் போட்டியிட முடியாது. உண்மையில் அவருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு அரசில் அங்கம் வகிக்கும் அந்த அதிருப்தியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை. சரத் பொன்சேகாவை மன்னிப்பளித்து விடுவித்ததன் மூலம் தமக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளவர் மஹிந்த ராஜபக்ஷவே தவிர சரத் பொன்சேகா அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
 
 அவர்கள் சரத் பொன்சேகாவுக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி குறை கூறி வருவதற்கான அடிப்படைக் காரணம் அதுவேயாகும்.
சரத் பொன்சேகாவைத் தொடர்ந்தும் சிறையில் இருக்கச் செய்வதன் மூலம் அதற்கான பழியை அரசு மீது சுமத்தி உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியினரின் குறிக்கோளாக இருந்து வந்துள்ளது.
 
எதிர்க்கட்சியினரின் இத்தகைய போக்கு உண்மையில் ஒரு "லூடோ' விளையாட்டுப் போன்றதே. தாயக் கட்டை காட்டும் எண்ணுக்கேற்ப இருக்கும் இடத்திலிருந்து ஏணி மூலம் உயரச் செல்லும் வாய்ப்பும், இருக்கும் இடத்திலிருந்து பாம்பு மூலம் கீழிறங்கும் வாய்ப்பும் இந்த விளையாட்டின் இயல்பு. இன்று மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சியினருடன் விளையாடுவதும் இந்த "ஏணியும் பாம்பும்' விளையாட்டே. ஆனால் மஹிந்தருக்கு அதிஷ்டவசமாக தாயக்கட்டை எண் மூலம் ஏணியில் உயரச் செல்லும் வாய்ப்பும் எதிர்க்கட்சியினருக்கு கிட்டும் எண் மூலம் பாம்பின் தலையிலிருந்து வால் மூலம் கீழிறங்கும் வாய்ப்பும் கிட்டுவதுதான் பரிதாபம். 
 
சரத் பொன்சேகாவின் விடுதலை உணர்த்துவதும் இதனையே. சரத் பொன்சேகா மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறித்து சர்வதேசமும் அமெரிக்காவும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் கவலை வெளியிட்டு வருகின்றன. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனே, அரசு சரத் பொன்சேகாவை விடுவித்ததற்காக பாராட்டியுள்ளார்.
 
முன்னர் விடுதலைப் புலிகளதும் உத்தியோகபூர்வ குரலாகச் செயற்பட்ட "தமிழ் நெற்' இணையத்தளமே இலங்கைக்கு எதிராக உருவாகியிருந்த சர்வதேச எதிர்ப்புணர்வை, சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுவித்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமயோசிதமாக வேறு பக்கத்துக்குத் திசை திருப்பி விட்டுள்ளார் என விமர்சித்துள்ளது.
 
இதிலிருந்து புலப்படுவதென்ன? நாற்கோணங்களிலிருந்தும் தீர்க்கமாக அலசி ஆராய்ந்து பார்த்து மிக நுணுக்கமாக கணக்கிட்டு, காலநேர வர்த்தமானங்களைக் கணித்து மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்தர். 
 
சிறையிலிருந்து பொன்சேகா விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இன்று எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களை நோக்கும்போது மஹிந்தரின் அரசியல் சாணக்கியம் தெட்டத் தெளிவாகப் புலப்படுகிறது.
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar