விண்ணைத்தாண்டிய
விஞ்ஞான உலகில் ஈழத்தமிழன் இரத்தமும் அவன் சிந்திய கண்ணீரும் கொஞ்சமல்ல!
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வன்முறைகள் அங்கே!! இன்றும் தலைதூக்கி
ஆடுகின்றது
வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தை துரத்துவதைப்போல்
அடைக்கலம் கேட்டு வந்த விஜனனும் அவனது கூடமும் இன்று இலங்கைத்தீவு
முழுவதுமே தமது என்று சொந்தம் கொண்டாடுவது மட்டுமல்லாது பல்லாயிரம்
வருடங்கள் பூர்வீககமாக வாழுகின்ற தமிழர்களை வந்தேறு குடிகளாய் வர்ணணை
செய்கின்றது.
அது மட்டுமல்லாது உலக அரங்கில் ஈழத்தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து தனது படுகொலகளுக்கு நியாயம் சொல்கின்றது சிங்கள பௌத்த பேரினவாதம்
ஆனால் எத்தனையோ "புரட்சியாளர்களையும்" எத்தனையோ 'விடுதலைப் போராட்டங்களையும்' சந்தித்த உலகம் "சிங்கள பௌத்த" பேரினவாதத்தின் போலியான பரப்புரைகளை நம்பி எங்களை "பயங்கரவாதிகளாகவே" பார்க்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது.
பார்க்கின்ற பார்வையிலே "கள்ளுக்கும் பாலுக்கும்" உள்ள வேறுபாட்டை உணர முடியாது என்பதை இந்த நாகரீக உலகம் உணரமறுத்த காரணத்தினாலே இன்று லட்சக்கணக்காண தமிழர்களின் உறக்கமும் உயிரும் பறிபோனது.
ஒரு 'கட்டெறும்பினை' கூட கால்களால் நசுக்கும்போது அது கடிக்கத்தான் செய்கின்றது. ஒரு சிறிய எறும்பின் உணர்வுகளே! இவ்வாறு இருக்கும்போது ஆறறிவுகொண்ட மனிதர்களாகிய குறிப்பாக தமிழர்களாகிய எமது உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த உலகம் ஏன் இன்றைக்கும் உணர்ந்து கொள்ள மறுக்கின்றது.
பயங்கரவாதம் என்ற சொல்லின் வரைவிலக்கணம் என்ன?? மனித குலத்திற்கே கேடுவிளைவிக்கக்கூடிய "அணுகுண்டையும் "ஆட்லறியையும்" கண்டறிந்தவனை விஞ்ஞானி என்று சொன்னால் அதிலே வெந்து சாகின்றவனை எப்படி பயங்கரவாதி என்று கூற முடியும்??
உண்மையிலே இன்று எங்களை பயங்கரவாதி என்று யாரெல்லம் குறிப்பிடுகின்றார்களோ உண்மையில் அவர்கள் தான் உண்மையான பயங்கரவாதிகள், இதை ஆதாரபூர்வமாக நிரூபித்துக்காட்டவும் முடியும்.
அன்று ஒசாமா பில்லேடன் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத்தை தாக்கியதன் பிற்பாடு அமெரிக்காவின் பார்வை உலகத்தில் சுயநிர்நய உரிமைக்காக போராடுகின்ற அத்தனை போராட்டக் குழுக்கள் மீதும் பயங்கரவாதம் என்ற சேற்றினை பூசியே பார்க்கத் தொடங்கியது.
"நீதி நியாயம் எல்லாம் வல்லோர்கள் வகுத்ததன்றோ" ஆகவேதான் அமெரிக்க வல்லரசின் வாலாட்டும் நாய்களாக உலக நாடுகளும் ஈழத்தமிழனை ஓதுக்கித் தள்ளியது.
"தான் கள்ளன் பிறரை நம்பமாட்டான்" என்று ஒரு பழமொழி இருக்கின்றது. எனவேதான் உலகத்தில் பயங்கரவாதத்தை யாரெல்லாம் முதலில் அறிமுகம் செய்தார்களோ அவர்கள் ஈழத்தமிழனுக்கு பயங்கரவாதம் என்ற பட்டத்தை சூட்டி தாம் எல்லோருமே அகிம்சா வாதிகளாக அடையாளமிட்டுக்கொண்டனர்.
உதாரணமாக சொல்லப்போனால் அன்றுமுதல் இன்று வரை அகிம்சையின் அடையாளமாக உலக அரங்கிலே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது இந்தியா. இந்த இந்தியாவின் போலி முகத்தையே உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கின்றது.
ஆனால் அதன் நிஜமான முகத்தை அறிந்தவர்கள் ஈழத்தமிழர்கள் மாத்திரமே!! உண்மையில் இன்றைய இந்தியா அகிம்சை என்ற வார்த்தையினை உச்சரிப்பதற்கு கூட தகுதியான நாடா என்பது கேள்விக்குறியே. ஆராய்ந்து பார்க்கப்போனால் அகிம்சை என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு சர்வாதிகாரம் செய்யும் ஒரு நாடு இந்தியாவைப்போல் இன்று உலகில் இல்லை என்றே கூறிக் கொள்ளலாம்,
இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி(ஜீ) என்ற மனிதரைத்தான் அகிம்சையின் ஆசானாக சித்தரிக்கின்றார்கள். இவர் அசிம்சை ரீதியாக இந்திய விடுதலைக்காய் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்திலேயே அதே விடுதலைக்காய் போராடியவர் நேதாஜி. இவருடய விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார்.
அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு.
காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்பட்டார்.சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். விடுதலைக்காய் பெரும் புரட்சி இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபஸ் சந்திரபோஸ் நாடு கடத்த ஆங்கிலேயர்களால் உத்தரவு இடப்பட்டபோதுகூட அவர் பார்வையிலே நேதாஜி ஒரு வன்முறையாளனாகவே இனம்காணப்பட்டதால் அதை அவர் எதிர்க்கவில்லை.
அப்படிப்பட்ட காந்திகூட காங்கிரசின் மூத்த உறுப்பினர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பகத் சிங்கை தூக்கில் போடுவதற்கு கையெப்பமிட்டுள்ளார். அகிம்சாவாதம் பேசும் காந்தி பகத் சிங்கை தூக்கிலிடுவதற்காய் கையொப்பமிட எடுத்த பேனாவானது அந்த சில நொடிகள் பகத் சிங்கின் உயிரைக்குடிக்கும் ஆயுதமாகவே கருதப்படும்.
எனவே அகிம்சையின் அடையாளமாக சித்தரிக்கபடும் காந்தியையும் அந்த நொடிகள் பயங்கரவாதியாகவே வர்ணிக்கப்படவேண்டும். அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயரிலே பாரத தேசம் எங்கும் ஆட்சி நடைபெறுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று பயங்கரவாதம் என்று சொல்லும் இந்தியா அன்று அகிம்சைமுறையிலே திலீபன் போராடியபோது அதை கண்டுகொள்ளாது திலீபனின் உயிரை பறித்தது.
உண்மையில் இது இந்தியாவின் ஒரு வஞ்சகம் என்றும் சொல்லலாம். காரணம் அகிம்சைக்கே ஆசானக தன்னை அடையாளப்படுத்தும் இந்தியாவிடமே தீலீபனின் அகிம்சை ரீதியான போராட்டம் செயலிழந்து போனது என்றால் உலகத்தில் வேறு யாருக்கு எங்கள் நியாயத்தன்மை புரிந்துவிடப் போகின்றது.
இன்று பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஈழத்தில் தலைதூக்கும் அரச பயங்கரவாதத்தின் வழிகாட்டியாக எத்தனையோ வல்லரசுகள் திரைமறைவில் உள்ளன என்பதை ஒவ்வொரு தமிழர்களும் நங்கு அறிவார்கள்.
ஆனால் அன்று 1987 ஆம் ஆன்டு அகிம்சை முறையிலே இளமைத்துடிப்பும் நிறைய எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனாகிய திலீபன் போரடினார். அவரது அகிம்சையே அவரின் ஆயுதமாக மாறி அவரை கொன்றது.
அதே சமயம் 1988 முதுமையும் தளர்வும் மிக்க 10 பிள்ளைகளின் தாயாராகிய அன்னை பூபதி அவர்கள் இந்திய வல்லாதிக்கத்தினை வெளியேறும்படி அகிம்சை ரீதியாக உண்ணாவிரதம் இருந்தார்.
ஆனால் காந்தியின் தேசத்துக்கே காந்தியின் வழியில் செயற்பட பிடிக்கவில்லை. இறுதியில் அவருக்கும் அகிம்சையே எமனாகியது, பயங்கரவாதத்திற்கு எதிரான அகிம்சையும் பயங்கரவாதமாகவே கருதப்படும் என இச்சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு நல்லபாடம் ஒன்றை கற்றுத்தந்தது.
"ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு" என்று கூறிய இயேசுபிரானையே சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்த இந்த உலகில் அகிம்சை என்ற சொல்லே அர்த்தமற்றது.
கைகளில் இருக்கும் ஆயுதங்களை களைந்துவிட்டு அகிம்சைரீதியாக போராடும்படி எங்கள் வேகத்தடைகளாக நிற்கும் இந்தியாவும் சரி அமெரிக்கா உற்பட மேலைத்தேய நாடுகளும் சரி இன்று "அணுகுண்டுகளை பரீட்சிப்பதும் புதிது புதிதாக ஆயுதங்களையும்" வாங்கி குவிப்பதுமாக உள்ள நோக்கம் என்ன?
"தனக்கு தனக்கு என்றால் சுளகும் படக்கு படக்கு என்று அடிக்குமாம்" வெறும் ஆயிரக்கணக்கண அமெரிக்கர்களை கொலைசெய்த ஒசாமா பில்லேடனை பல வருடங்கள் கழித்து மோப்பம் பிடித்து பாகிஸ்தானிடம் அனுமதிகூட பெற்றுக்கொள்ளாது அமெரிக்கப் படைகள் பலியெடுத்தன. உண்மையில் பாரட்டப்படவேண்டிய விடயம்.
ஆனால் இலட்சக்கணக்காண மக்களை பலியெடுத்து கோடிக்கணக்கான எமது சொத்துக்களை சூறையாடி எம் சொந்த மண்ணை அபகரித்த இந்த சிங்கள பேரினவாதத்தை பழிதீர்த்து எமது மண்ணை மீட்க நாம் ஆயுதங்களை சுமந்த போது எங்களை பயங்கரவாதிகளாக கூறி அதே அமெரிக்காவும் அதன் ஊதுகுழல்களும் எமை தடைசெய்ததன் நோக்கம் என்ன???
ஆயுதத்தினால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியாது என்ற கூற்று தமிழர்களை பொறுத்தவரை பொய் என்றே கூறலாம். காரணம் மூன்று தசாப்தங்களாக போராடிய ஆயுதங்கள் இன்று உலகத்தில் எமக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. நாம் தட்டியபோது திறக்காத கதவுகள் எல்லாம் தானாக திறந்தன.
நாங்கள் அழைக்காத தலைகள் எல்லாம் எமை திரும்பி பார்த்தன, உண்மையில் பலம் உள்ளவனுக்குதான் இந்த உலகில் இடம் உண்டு என்பதை நாம் பலம் உள்ளவர்களானபோது உணர்ந்து கொண்டோம், வெற்றிக்குமேல் வெற்றி சூடியபோது இந்த கையாலாகாத உலகம் ஓடி வந்து சமரசம் செய்து சமாதானம் பேசியது.
இன்று பயங்கர்வாதிகள் என்று கொல்லப்பட்ட தளபதிகளுடன் கைகுலாவி ஆயுதம் பிடித்த அவர்கள் கைகளைலே 2002 ஆம் ஆண்டு பேனாவை கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதே தளபதிகளை போராளிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக்கி அவர்களை கொன்றது இந்த கொடிய உலகு.
இதையிட்டு ஒட்டுமொத்த மனிதகுலமே வெட்கி தலைகுனிய வேண்டும், இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாம். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்களாம் என்றெல்லாம் வெற்றி வேட்டுக்களை வானில் ஏவி வாய்கிழிய கூச்சலிட்டு கும்மாளம் போட்டர்கள்.
ஆனால் மழைவிட்டும் தூவானம் போகவில்ல என்பதை போல் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாய் அறிவிக்கப்பட்டும் இன்றும் அந்த அமைப்புக்கான தடையினை தகர்க்க உலகில் எந்த நாடும் தயாராக இல்லை என்பதை விட தைரியமாக இல்லை என்றே கூறலாம்.
இந்த பயங்கரவாத பட்டமும் விடுதலை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் விடுவதாக இல்லை, தன் இன விடுதலைக்காய் இந்த வஞ்சகமான உலகின் முன் அத்தனை தமிழனும் பயங்கரவாதிகளே!! இந்த பயங்கரவாதம் இன்னும் தொடரும் எனது விடுதலைக்காய் விழித்திருக்கும்.
நானும் எனதுஇனமும் பயங்கரவாதி என்று அழைக்கப்படுவதால் பெருமையடைகின்றோம். பயங்கரவாதிகள் வாழும் தேசத்தில் நாமும் பயங்கரவாதிகளே!! காரணம் விலங்குகள் வாழும் காட்டிலே மனிதர்களாய் வாழ்வது என்பது கடினம்.
எனவே பயங்கரவாதிகள் வாழும் இந்த உலகிலே நானும் என் இனமும் பயங்காரவாதிகளாக வாழ்வதை நினைத்து பெருமிதம் கொள்வோம். பயங்கரவாதி என்பது எம் போராடத்தின் வேகத்தடையாக இந்த சுயநலவாத உலகம் போட்டதே தவிர எங்களைப் பொறுத்தவரை அது எங்களின் வெற்றிக்கான படிகளே!!
-ஆதித்தன்

Ingen kommentarer:
Legg inn en kommentar