இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட விடயத்தில் கூட இந்த இணையத்தளங்கள் மிகமுக்கிய பங்காற்றியிருந்தன. பத்திரிகைகள் மற்றும் இலங்கையில் இருந்து இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் அச்சுறுத்தலின் காரணமாக வெளியிடமுடியாமல் இருந்த பல சங்கதிகள் இவற்றின் ஊடாகவே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டன.
கடந்த
வருடத்தின் தொடக்கப் பகுதியில் இலங்கையில் இருந்து தரவேற்றப்படும்
லங்காஈநியூஸ், லங்காநியூஸ்வெப் ஆகிய இரண்டு இணையத்தளங்களும் இலங்கை அரசால்
தடைசெய்யப்பட்டன.
நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்தும்
செய்திகளை வெளியிட்டமை மற்றும் பாதுகாப்புக்குக் களங்கம் கற்பிக்கும்
வகையில் செய்திகளை பரப்பியமை போன்ற காரணங்களுக்காகவே தடை செய்யப்பட்டதாக
அப்போது கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நாட்டில் நடைபெறும்
மனிதஉரிமை மீறல்களையும், ஆள்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான
செய்திகளையும் சுடச்சுட இந்த இணையத் தளங்கள் வழங்கியமையினாலேயே தமக்கு இந்த
நிலை ஏற்பட்டதாக குறித்த இணைய ஊடகங்களின் அமைப்பாளர்கள் வாதிட்டனர்.
அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாகவே தெரிகின்றது.
இலங்கை அரசின் பொய் முகத்தைக்
கிழிக்கும் பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும், அவர்கள் சார்ந்த ஊடக
நிறுவனங்களையும் பல்வேறு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட இலங்கை அரசு, தமது எல்லையையும்
மீறிச் செயற்படும் இணைய ஊடகங்கள் மீது தன் அடுத்த கவனத்தைக் குவித்தது.
இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பிலான அனைத்துச் செய்திகளையும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் நில
ஆக்கிரமிப்பு, சிங்களமயமாக்கம், பண்பாட்டு சிதைப்பு போன்றவற்றை இந்த இணைய
ஊடகங்களே சர்வதேசத்துக்கு கொண்டு சென்றன. இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித
உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்குக் கூட இந்த இணைத்தளங்கள்
மிகமுக்கிய பங்காற்றியிருந்தன.
பத்திரிகைகள் மற்றும் இலங்கையில்
இருந்து இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் அச்சுறுத்தலின் காரணமாக
வெளியிடமுடியாமல் இருந்த பல சங்கதிகள் இவற்றின் ஊடாகவே வெளிச்சத்துக்கு
கொண்டுவரப்பட்டன. ஆகவே இதனை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இலங்கை
அரசுக்கும், பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களுக்கும் அவசியமாய் உணரப்பட்டது.
கடந்த வருடத்தின் தொடக்கப்பகுதியில்
மேற்குறித்த இரண்டு தீவிர அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிடும்
இணையத்தளங்கள் உள்ளடங்கலாக 29 இணையத்தளங்களை இலங்கை அரசு தடைசெய்து தனது
பணியைத் தொடங்கியது. தொடர்ச்சியாக இலங்கையின் செய்தி வெளியிடும் அனைத்து
இணையத்தளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற புதிய நடைமுறை யொன்றை
அறிமுகப்படுத்தியது.
பதிவு செய்யப்படாத இணையங்கள்
இடைநிறுத்தம் செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது
அந்த விடயம் நடைமுறைக்கு வந்திருப்பதைப் போன்ற செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் தமிழ் பரப்பில் இருந்து
அரசியல் சார் செய்திகளை வெளியிடும் சில இணையத்தளங்களை இலங்கையில் பார்க்க
முடியாத நிலை ஏற்பட்டது. முக்கியமாக அந்தக் காலப் பகுதியில் நில
அபகரிப்புக்கு எதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக
முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதனை உடனடியாக புலம்பெயர் தளத்துக்கும்
சர்வதேசத்துக்கும் கொண்டுசெல்லும் நிலைமையைத் தவிர்ப்பதற்காக இலங்கையில்
இருந்து செயற்படும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல்,
இலங்கையில் நடைபெறும் தமிழர் விரோத செயற்பாடுகளை இந்த இணையத்தளங்கள்
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்வதனால் அவர்களின் இலங்கைக்கு
எதிரான மனோநிலை மேலும் மேலும் அதிகரித்தே செல்கின்றது.
அண்மையில் கூட மஹிந்த ராஜபக்ஷ லண்டன்
சென்றிருந்த போது அவருக்கு அங்கு புலம் பெயர் தமிழர்களால் காட்டப்பட்ட
எதிர்ப்பும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட அவமானமும் உடனடியாகவே பெரும்
பாலான தமிழ் இணையத்தளங்களில் காட்சியாக்கப்பட்டிருந்தன.
அங்கு நிகழ்ந்த அவமானத்தை அடிநிலைக்
கிராமத்தில் இருக்கும் பாமரன் கூட பார்த்தறியும் நிலையை இணையங்கள்
உருவாக்கி விட்டிருந்தன. எனவே தான் பெரும்பாலான தமிழ் இணையங்கள் இப்போது
இலங்கையில் தமது மூச்சை நிறுத்த வேண்டிய இக்கட்டு நிலையை
அடைந்திருக்கின்றன.
தமிழ் இணையங்களின் நிலை இப்படி
இருக்கையில், இலங்கை அரசின் கடும் போக்குத் தனத்தை சர்வதேசத்தின்
முன்னிலையில் உடைக்கும் எதிர்கட்சிகளின் இணையத்தளங்களும்
முடக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியின் செய்திகளையும்,
இலங்கை அரசு மேற்கொள்ளும் அடாவடித்தனங்களையும் வெளியிடும் சிறீலங்காமிரர்,
லங்கா எக்ஸ் நியூஸ் போன்ற இணையத்தளங்களின் அலுவலகங்கள் குற்றப் புலனாய்வுத்
துறையினால் முற்றுகையிடப்பட்டு அங்கு பணியாற்றிய ஊடகவியலாளர்களும்
பணியாளர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த இணையத்தளம் சார்
அரசியல்வாதிகளும், பொதுநலன் விரும்பிகளும் இது பற்றித் தமது எதிர்ப்பை
வெளியிட்டு வருகின்ற போதிலும், லங்காஈநியூஸ், லங்காநியூஸ்வெப் போன்ற
செய்தித் தளங்களுக்கு ஏற்பட்ட நிலை தான் இவற்றிற்கும் எற்படபோகிறது
என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த தடைகளும் கைதுகளும்
நடந்தவுடனேயே ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. ஜனநாயக
சமூகத்தில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமானதென்பதுடன் அச்சுறுத்தல் மற்றும்
துன்புறுத்தல் இன்றி ஊடகவியலாளர்கள் தங்களது நியாயமான பணியை
முன்னெடுக்ககூடியதாக இருக்க வேண்டும். சுதந்திரமான ஊடகத்துறை மீது
அச்சுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவித நடவடிக்கையையோ அல்லது
கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதோ ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்
சாசனங்களுக்கு முரணானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கும் ஐ.நாவின் மனித
உரிமைகள் சபைக்கும் ஏற்கனவே குடுமிபிடிச்சண்டை கடந்த ஆண்டில் இருந்து
நடைபெற்று வருகின்றது. இலங்கை மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த
காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு தமிழ் மக்களுக்கு
நியாயமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஐ.நா
மனிதஉரிமைகள் சபை இந்த அரசுக்கு வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இப்போது இலங்கை
அரசுக்கு மேலும் ஒரு சிக்கலும் எழுந்திருக்கின்றது. இந்தவிடயம் ஐரோப்பிய
ஒன்றியத்தினால் மனிதஉரிமைகள் சபைக்கு பரிந்துரைக்கப்படலாம். அது
நடைபெறாவிட்டாலும் இலங்கையில் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருக்கும்
பணியாளர்கள் இந்த விடயத்தை மனித உரிமைகள் சபைக்கு கொண்டுசெல்வர்.
ஆகவே நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு
ஏற்பட இருக்கின்ற அபாயத்தின் கனதி இப்போதிருந்தே அதிகரிக்கத்
தொடங்கியிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் வெளியில்
செல்லுகின்றன என்பதற்காக தடைசெய்யப்பட்ட இணையங்கள் இலங்கையில் மட்டும்தான்
செயலிழந்து இருக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் அவை வழமைபோலவே
இயங்குகின்றன. ஆகவே எத்தகைய சூழ்ச்சி செய்தாலும் இந்த ஆபத்தை இலங்கை
அரசினால் தவிர்க்க இயலாது. அவை இனி வழங்கப் போகின்ற செய்திகள் நவம்பர்
மாதத்தை மிகவும் இறுக்கமானதாக மாற்றப்போகின்றது.
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar