காட்டிக் கொடுத்த போட்டிகளும் தொடரும் பேட்டிகளும்!- பூநகரான்

தமிழ்த் தாய் பல தனயர்களைப் பெற்றிருக்கிறாள்- அவர்கள் அமிழாது காலத்தை வென்று வரலாறாகி விட்டனர்.
இராவணன், கட்டப் பொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன் எனத் தொடர்ந்த அந்த வரிசையில் தமிழத் தாயின் இறுதி மகனாக உறுதியோடு இறுதிவரை இருந்தவர் பிரபாகரன்.
ஆனாலும் தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக தொடர்ந்த போட்டிகளும், வெளியில் வெடித்த போட்டிகளும், கன்னித்தமிழன் வன்னி அரசையும், தலைவரையும், மாவீரத் தியாகங்களையும் வீழ்த்தி விட்டன.
தலைவர் மக்களோடு மக்களாக முள்ளிவாயக்காலிற்குள் தான் நிற்கிறார் என்ற தகவல் சாதகமானதா? பாதகம் ஆனதா? இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு அவருடன் இருந்தவன் தான்.
பின் வரிசை மாவீரர்களிற்கு இருந்த தியாகத்தில் ஒரு துளியேனும் இந்த போட்டியாளர்களிடம் இருந்திருந்தால் இப்படி கோட்டை இடிந்து போயிருக்காது.
போட்டிகள் தான் தமிழர் கோட்டைகளை இடித்து வந்திருக்கின்றன. அவை இப்போது தொடரும் பேட்டிகளின் வாயிலான வெளிவருகின்றன.
போனால் வராததும் பெறுமதியற்றதும் உயிர் ஒன்றே.
அதைக் கொடுத்த ஒவ்வொரு மாவீரரும் மனமுருகி வணங்கப்பட வேண்டியவர்களே.
உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்.
நிலத்தில் நீங்கள் துயின்ற இல்லங்கள் இல்லை.
இங்கே ஆயிரம் பிரிவுகள்...... எங்கே போகும் நம் கால்கள்?
உலகம் அறியாத தியாகம் கலகமென உரைக்கப்பட்ட தீ யாகம்.
தமிழர்க்கு பலத்தை கொடுத்த வகிபாகம் - வெற்றித் திலகமிட்டு துலங்குவது எந்நாளோ?
அலகலகாய் ஆகுதியானீரே! வலுத் தர வலிந்து மடிந்தீரே
நலிவடைந்த நாம் பொலிவடையும் போது களிப்புடனே கட்டிடுவோம் நீவிர் துயில இல்லம் - நீங்கள் மறைக்கப்பட்டவர்களே ஒழிய வரலாற்றில் மறையப் போவபவர்கள் அல்ல
நம்மவர் மறந்தாலும் மாற்றான் நினைக்க வைப்பான்
உங்கள் தேவையையும் சேவையையும் மில்லர் தொடக்கம் முத்துக்குமார் முருகதாசன் வரையில் அத்தனை தெய்வங்களிற்கும் நம் புனித வணக்கங்கள்
இராவணன் பண்டார வன்னியன் சங்கிலியன் கட்ட பொம்மன் வரிசையில் வரலாற்றில் வாழப் போவபவர் பிரபாகரன்
தமிழர் நெஞ்சங்களிலும் உற்றவர் இதயங்களிலும் இலக்கியங்களின் நினைவுகளிலும் அடித் தொண்டர் தொடக்கம் முடித் தலைவன் வரை அழியாது வாழ்வீர் மாவீரரே!
ஓம் சாந்தி! சாந்தி!! சாநதி!!!
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar