தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்குள் யார் ஊடுருவியிருக்கிறார்கள்???

முதலில் தமிழீழ கட்டமைப்புகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள், குறிப்பாக நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இருந்திராதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அது பொதுசன அமைப்புகளாகவோ அல்லது இயக்க பிரிவுகளாகவோ இருக்கட்டும் எந்தவொரு கட்டமைப்பினதும் நிர்வாக செயற்பாடுகள் குறித்து அதற்குள் இருக்க கூடிய பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் விவாதிக்கும் அளவிற்கு இருந்ததில்லை. அப்படி ஊடகங்களினூடாக பிரச்சாரப்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
நிர்வாக முகாமைத்துவ மட்டத்தில் அல்லது பணியாளர்கள் மட்டத்தில் ஏதேனும் பிரச்சினை எழுப்பப்பட்டால் தனித்தனி அறிக்கைகள் மற்றும் கூட்டறிக்கைகளினூடாக அவற்றை பொறுப்பாளர்களிடத்தில் வெளிப்படுத்தலாம். அதன் பின் அவை ஆராயப்பட்டு சம்மந்தப்பட்டவர்களை ஓரே நேரத்தில் நேரடியாகவே விசாரித்து அவை அந்த இடத்திலேயே சரிப்படுத்தப்படும். இதுதான் வழமை.
அல்லது தனிப்பட்ட சில குண இயல்புகளை மாற்றவே முடியாது என்று நினைத்தால் பொறுப்பாளர்களால் பிறிதொரு அலுவலகத்திற்கு இடம் மாற்றப்படுவார்கள். (இது தண்டனை அல்ல. வேலைகளை இலகுபடுத்துவதற்கு இந்த முகாமைத்துவ முறை பின்பற்றப்பட்டது).
இது தான் தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பு. தமிழீழ நிர்வாக அலகுகளில் இருந்து ஒரு காகிதம் கூட வெளியில் வரமுடியாத இறுக்கமான கட்டமைப்பு பேணப்பட்டது. அதற்கு பணியாளர்களும் உண்மையாகவே உழைத்திருந்தார்கள்.
இனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு தனம் அவர்களிடம் கேள்விக்கு வருகிறேன்.
1) அதிர்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அலுவலக ஊடகமா? அப்படியாயின் இதை எப்போது அறிவித்திருந்தீர்கள்??
இல்லை எனின் அடுத்த கேள்விக்கு வாருங்கள்.
2) 2009 இறுதி அல்லது 2010 காலப்பகுதி என்று நினைக்கிறேன்.பிரித்தானியாவில்  மாவீரர் நாள் ஒழுங்குபடுத்தலில் உங்களுக்கும் இன்னொரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட சில மோதல்களால் யாரோ கணக்கு வளக்குகளை கேட்டதாகவும்… அது சம்மந்தமான கட்டுரை அதிர்வு பிரசுரித்திருந்தது.
அதில் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு பற்றியதான தரவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த ஆவணங்கள் அதிர்விற்கு எப்படி போனது??? உங்கள் நிர்வாக மட்டத்தில் நடக்கும் பிரச்சினைகளை அதிர்விற்கு தெரியப்படுத்தும் உளவாளி யார்?? அல்லது நீங்களாகவே அதிர்விற்கு செய்தி அனுப்புகிறீர்களா??

3) விடுதலைப்புலிகள் கட்டமைப்பில் ஒழுக்கம் என்பது மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒன்று.. ஆனால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் ரவுடிக் கும்பல்கள் இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே!!! “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” பெயரில் அல்லது “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” விற்காக மக்களுடன் ரவுடித்தனம் செய்யும் கும்பல் பற்றி நீங்கள் விசாரணைகள் அல்லது நடவடிக்கைகள் ஏதும் ஏன் எடுக்கவில்லை?
இந்த கேள்விகளுக்கு சரியான பதில் வரும்பட்சத்தில் புலம்பெயர் தமிழர் மட்டத்தில் எழுந்திருக்க கூடிய பெரும் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுவிடும் என்றே நினைக்கிறேன்.
அது போக தமிழீழ மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!!!
அதிர்வு ஊடகம் ஏறத்தாள முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பிறகு உருவான ஒரு ஊடகம். விடுதலைப்புலிகளின் நேரடி நிர்வாக கண்காணிப்பில் இருந்த சில ஊடகங்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பிறகு தமது செயற்பாட்டை நிறுத்திவிட்டன. முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பிறகு பல இணையங்கள் உருவாகியிருக்கின்றன.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்… இறுதிக்கட்ட இன அழிப்பு போரில் படுகொலை செய்யப்ட்ட மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் மக்களின் தரவுகளை விடுதலைப்புலிகள் பல மட்டங்களில் ஆவணப்படுத்தி செய்தி இணையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த அவலத்தை பார்த்து புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டுபண்ணியது. வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தார்கள். ஆனால் அதே நேரம் “கலகம்” என்று நினைக்கிறேன்… அப்படியாரு இணையம் விடுதலைப்புலிகளால் இத்தனை ராணுவம் கொல்லப்படுகிறது.. விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதலை செய்கிறார்கள் என்பது போன்றதான தகவல்களை மட்டுமே வெளியிட்டு எழுச்சி கொண்ட மக்களை சோர்வடைய செய்து வெறுமனே பார்வையாளர்களாக மாற்றுவதற்கு பெரும் எடுப்பில் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியடைந்து. மக்கள் பிரித்தானியா உள்ளிட்ட பல தேங்களில் ஒன்றுபட்டு அநீதிக்கெதிராக போராடினார்கள்.
அப்படிப்பட்ட ஒரு இணையம் தான் இந்த அதிர்வும். 2010ம் ஆண்டு விநாயகம் இறந்துவிட்டதாக ஜெயராஜ் என்பவர் கட்டுரை எழுதியிருந்த பொழுது “ஜெயராஜ்சுக்கு ஒண்டும் தெரியாது.. இந்த விநாயகம் உயிரோடு இருக்கிறார்.. அவர் இப்பொழு இந்தியாவில் இருக்கிறார் என்று விநாயகம் அண்ணை பற்றி அவரது இயக்க செயற்பாடுகள் பற்றி அவருடைய புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது அதிர்வு.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாக மடடத்தில் இருக்கும் யாருடனும் அல்லது திரு தனத்திடம் நேரடியாகவோ தொடர்பு வைத்திருக்கும் அதிர்வு கண்ணன் தப்பித்திருக்கும் சில விடுதலைப்புலிகளின் தளபதிகள் பற்றிய தகவல்களை எடுத்து அது குறித்து விபரமாக (சிலவற்றை இயற்றியடித்தும்) வெளிட்டுவருகிறது.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் தனக்கு அனுப்பியதாக சில கடிதங்களையும் சில ஆவணங்களையும் அதிர்வு வெளியிட்டிருந்தது.
புலம்பெயர்ந்து நீண்டகாலமாக போராட்டத்துடன் நேரடி தொடர்பற்றிருக்கும் மக்களுக்கு இவை பெரும் புதினமாகவும் அதிர்வு என்பது பெரும் ஊடகமாகவும் தெரியலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் யாரும் எந்த ஆவணத்தையும் ஊடகங்களிற்கோ அல்லது சம்மந்தப்படாதவரிடமோ கொடுப்பதோ காட்டுவதோ கிடையாது. அது பெற்ற தாயாக கூட இருக்கலாம்.
அது போக சங்கீதன் குறித்த பல தகவல்களையும் புகைப்படத்துடன் அதிர்வு வெளியட்டது.
அழுதால் துரோகி!!
சங்கீதன் GTV நிகழ்ச்சி ஒன்றில் அழுததாகவும் போராளிகள் கண்ணீர்வடிக்க மாட்டார்கள் என்றும்.. அவர் கண்ணீர்வடித்ததால் சங்கீதன் சிறிலங்கா அரசின் ஆள் என்றும் கூறியிருந்தது அதிர்வு
குறிப்பு : கணக்கு வழக்கு சம்மந்தப்பட்ட செய்தி, விநாயகம் அண்ணை தொடர்பான ஆரம்பச் செய்தி, சங்கீதன் தொடர்பான செய்தி உள்ளிட்ட பல செய்திகள் மற்றும் 2010,2009 செய்திகளை அதிர்வு தனது தளத்தில் இருந்து நீக்கியிருக்கிறது.
இது வரை செயற்பட்டுவரும் புலம்பெயர் கட்டமைப்புகளின் நிர்வாகம் இறுக்கமாக தொடர்ந்து இலக்கு நோக்கி இயங்கி வந்திருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது. நிர்வாக நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு வெளியாகி மக்கள் குழப்பம் அடைந்திருக்க தேவையில்லை.
துரோகி பட்டம் கெபாடுப்பதற்கு எந்த ஊடகத்திற்கும் உரிமை கிடையாது. அந்ததந்த நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்து யாருடன் இயங்குகிறார்கள்.. அவர்களின் தொடர்புகள் என்ன… என்பது பற்றி எழுதலாம். மக்கள் அவர்கள் பற்றி விழிப்படைவார்கள். மாறாக விளம்பர நோக்கத்திற்காக ஊடகம் என்ற பெயரில் உளவுத்துறைகள் நடாத்தும் குழுக்கள் பற்றி மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.

அதிர்வு பற்றி மேலதிக தகவல்கள்

1. இந்திய அரசின் அநியாயங்களை சுட்டிக் காட்டி தமிழீழ மக்களுக்காக தமிழகத்தில் நடாத்தப்படும் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன

2. ராஜபக்ஷவிற்கெதிராக நடாத்தப்பட்ட உலக அளவிலான போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

3. வன்னிக்குள் மற்றும் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசினால் செய்யப்பட்டுவரும் நிலப்பறிப்பு நிர்வாகப்பறிப்பு கலாச்சார சீரழிப்பு பற்றிய தகவல்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.

4. வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட போராளிகளின் நிலை குறித்த செய்திகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

5. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வு மற்றும் அதன் பின் நடந்த சிங்கள அரசின் இனவெறித்தாக்குதல் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி நிறைய இருக்கின்றது. தன்னிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் சில இருக்கின்றன ஆனால் அதை அனுப்புவதற்கு பணம் தேவை என்று விளம்பரம் போட்டு பணம் சேகரித்த ஊடகம்தான் அதிர்வு என்பதை மறந்துவிடாதீர்கள்.
வாசகர்களுக்கு அறிவிக்காமல் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் திருத்தங்கள் செய்வது அல்லது முழுமையாக நீக்குவது என்பது ஊடகம் கிடையாது. அவர்களின் நோக்கம் வேறு.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எப்படி அதிர்விற்கு அவர்களின் நிர்வாக செயற்பாட்டு செய்திகள் போகின்றன என்பது குறிது தெளிவுபடுத்த வேண்டும். அதே போல் புலம்பெயர் உணர்வாளர்கள் ஒன்று திரளவேண்டும்.
தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு முட்டுக்கட்டடையாக இருக்கும் அதிர்வு போன்ற இந்திய சிறிலங்கா உளவு அமைப்புகளை அடித்துவிரட்டுவோம்.
தாமே தயாரித்து ஒலி ஒளி பதிவுகளை வெளியிடுவது… இயக்க ஆவணங்கள் என்று பொய்யாக செய்திகள் வெளியிடுவது.. இயக்க ஆவணங்களை தவறாக பயன்டுத்தி மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவது போன்றவை மன்னிக்க முடியாத குற்றம். இவற்றை புலம்பெயர் தமிழரக்ள் எப்படிக் கையாளப்போகிறார்கள்??

ஆதி
01-12-12

(நன்றி-Nerudal) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar