களுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை வியாழன் மாலை சமர்ப்பித்திருக்கிறது. இந்த பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா
சமர்ப்பிக்க இருக்கிறது என்றும் வன்னியில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற
போர்க்குற்றங்கள், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தால்
மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள், மற்றும் மனித உரிமை மீறல்களை
விசாரிப்பதற்கு ஐ.நா.சர்வதேச விசாரணை குழுவை நியமிக்க வேண்டும் என கோரும்
பிரேரணையை அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில்
சமர்ப்பிக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இலங்கைக்கு எதிரான பிரேரரணை ஒன்று
ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்ற மகுடத்துடன்
ஊடகங்கள் செய்திகளையும் வெளியிட்டு வந்தன.
அதற்கு மேலாக அமெரிக்காவும், இந்தியாவும்
தமிழர்களுக்கு பெரிதாக வெட்டி சாய்க்க போகின்றன என தமிழ் தலைவர்கள் இலங்கை
தொடக்கம் ஜெனிவா நகர் வரை மேடை மேடையாக பேசி வந்தனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவால்
கொண்டுவரப்பட்டது கூட இலங்கைக்கு எதிரான பிரேரணை என இன்றுவரை சிலர் புலம்பி
வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணையும் சரி, இம்முறை
அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணையும் சரி இலங்கைக்கு எதிரான பிரேரணை
அல்ல.
அமெரிக்கா கொண்டுவருவது இலங்கைக்கு எதிரான
பிரேரணை என இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட அனைத்து தமிழ் ஊடகங்களும்
வெட்டி முழங்க நீ மட்டும் என்ன மேதவித்தனம் பேசுகிறாய் என நீங்கள் என்மீது
போர்க்கொடி தூக்கலாம்.
அப்படியானால் ஏன் இதை சிறிலங்கா எதிர்க்கிறது என நீங்கள் கேட்கலாம். சிறிலங்காவும் சிறிலங்காவின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதை எதிர்ப்பதற்கு இரு காரணங்கள் உண்டு
அப்படியானால் ஏன் இதை சிறிலங்கா எதிர்க்கிறது என நீங்கள் கேட்கலாம். சிறிலங்காவும் சிறிலங்காவின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதை எதிர்ப்பதற்கு இரு காரணங்கள் உண்டு
முதலாவது காரணம் தமது உள்நாட்டு
விடயங்களில் யாரும் தலையிட கூடாது, கேள்வி கேட்க கூடாது என்ற இறுமாப்பு
சிறிலங்காவுக்கு. அடுத்தது தங்களின் நடவடிக்கைகள் பற்றியோ அல்லது அதனை
கேள்விக்குட்படுத்துவதோ தமக்கு அவமானம் என சிறிலங்கா கருதுகிறது.
இதனால் தான் சிறிலங்கா இந்த பிரேரணைகளை
எதிர்க்கிறதே தவிர மற்றும் படி இந்த பிரேரணையில் இலங்கையை பாதிக்கின்ற
வகையிலோ அல்லது சிறிலங்கா செய்த குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச
விசாரணையை கோரும் வகையிலோ எந்த கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை சர்வதேச
போர் குற்ற நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா கோரும் என
நினைப்பதை போன்ற முட்டாள் தனம் வேறு ஒன்றும் கிடையாது. ஏனென்றால்
அமெரிக்காவும் இந்தியாவும் தான் போரை முன்னின்று நடத்தி விடுதலைப்புலிகளை
அழித்து முடித்தன.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து போரை
முடிவுக்கு கொண்டுவருவதற்கு இந்தியா எப்படி திட்டங்களை வகுத்து தமிழ்
மக்களை அழித்து துவசம் செய்தது என்பதை ஓரளவுக்காவது அறிய வேண்டுமாக
இருந்தால் கோத்தா வோர் என்ற நூலை படித்தால் புரிந்து கொள்ள முடியும்.
மகிந்த ராசபக்ச அரசாங்கம் எப்படி இந்திய அரசாங்கத்துடன் இணைந்து இந்த போரை
வெற்றி கொண்டது என்பதை சிறிலங்காவே சொல்லியிருக்கிறது.
எனவே தான் நான் சொல்கிறேன். அமெரிக்கா ஒரு
போதும் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கு சர்வதேச
விசாரணையை கோராது. அப்படி கோருவதற்கு படுகொலையின் பங்காளியான இந்தியா
விடப்போவதும் இல்லை.
இக்கட்டுரை வெளியாகியிருக்கும் சமகாலத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்திருக்கிறது என்றே செய்திகளும் கட்டுரைகளும் தமிழ் ஊடகங்களில் வெளிவரும் என்பதும் எனக்கு தெரியும்.
ஏனெனில் தமிழ் மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருப்பதற்கே ஊடகங்களும் அரசியல் தலைமைகளும் விரும்புகின்றன.
இக்கட்டுரை வெளியாகியிருக்கும் சமகாலத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்திருக்கிறது என்றே செய்திகளும் கட்டுரைகளும் தமிழ் ஊடகங்களில் வெளிவரும் என்பதும் எனக்கு தெரியும்.
ஏனெனில் தமிழ் மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருப்பதற்கே ஊடகங்களும் அரசியல் தலைமைகளும் விரும்புகின்றன.
இறுதிப்போரில் வன்னியில் சிக்கியிருந்த
தமிழ் மக்களை காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்புகிறது, எல்லோரையும்
வெளிநாடு ஒன்றிற்கு ஏற்றிச்செல்லப்போகிறார்கள் என்ற கற்பனைகள் பரப்பட்ட
வரலாற்றையும் நாம் அறிவோம்.
அதே போன்ற ஒரு பிரமையை தான் இந்த அமெரிக்க பிரேரணை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
அதே போன்ற ஒரு பிரமையை தான் இந்த அமெரிக்க பிரேரணை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கா இம்மாதம் 7ஆம் திகதி ஐ.நா.மனித
உரிமை பேரவை உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பான பிரேரணை நகல் ஒன்றை
வழங்கியிருந்தது. அந்த நகலில் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என
வலியுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரேரணை நகலில் முக்கியமாக 6விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஒன்று இலங்கையில் நல்லிணக்கப்பாட்டைத்
தோற்றுவிப்பதற்கும் பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை மேற்கொள்வதற்கும்
மனித உரிமைகள் ஆணைக்குழு ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் வழங்க
முன்வந்துள்ளமையை வரவேற்கின்றோம்.
சட்டத்துறை மாற்றத்தை அணுகுவதற்கு ஏதுவாக
திரட்சியான உள்ளகப் பங்களிப்போடு உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை ஒன்று
உருவாக்கப்படவேண்டுமென்ற மேற்படி ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும்,
முடிவுகளையும் வரவேற்கின்றோம்.
இரண்டாவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை நாம் வலியுறுத்துகின்றோம் என முன்னர்
வெளியிடப்பட்ட நகலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது திருத்தப்பட்டு 12ஆம்
திகதி வெளியிட்ட நகலில் வலியுறுத்துகிறோம் என்பது நீக்கப்பட்டு ஐ.நா.மனித
உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசு
நடைமுறைப்படுத்துவதை வரவேற்கிறோம் என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக கற்றுக்கொண்ட பாடங்களுக்கும்
நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளைத் துரிதமாகவும்
காத்திரமாகவும் நடைமுறைப்படுத்துமாறு நாம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை
அரசுக்கு மீளவும் வலியுறுத்துகின்றோம் என முன்னர் வெளியிட்ட நகலில்
குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்
பிரேரணையில் அது மாற்றப்பட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதை வரவேற்கிறோம் என
மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவும் சிறிலங்காவின் நட்பு
நாடுகளும், கொடுத்த அழுத்தம் காரணமாகவும், சிறிலங்கா பின்கதவால்
அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுக்களின் விளைவாகவும் இந்த பிரேரணையில்
வற்புறுத்துகிறோம் என்ற சொல் நீக்கப்பட்டு வரவேற்கிறோம் என பல இடங்களில்
மாற்றப்பட்டிருக்கிறது.
கடந்த முறை அமெரிக்கா கொண்டுவந்து
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், இம்முறை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்
தீர்மானத்திற்கும் பாரிய வேறுபாடு கிடையாது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்
வெளியிட்ட அறிக்கையை வரவேற்கிறோம் என்ற விடயமும், 24ஆவது கூட்டத்தொடரில்
இலங்கையின் மனித உரிமை முன்னேற்றம் குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும், 25ஆவது கூட்டத்தொடரில் இது
தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதும் மட்டும் தான் இம்முறை
சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் உள்ள புதிய விடயங்களாகும். ஏனைய
விடயங்கள் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துவதை வரவேற்கிறோம் என்பதும் நீதித்துறை, மற்றும் ஊடகத்துறை
சுதந்திரமாக இயங்குவதை வரவேற்கிறோம் என்பதும் தான்.
கடந்த ஒரு வருடத்திற்கு முதல்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த வேண்டும், இராணுவ நெருக்கடிகள் நீக்கப்பட்டு பொது
நிர்வாகம் தலையீடு அற்றவகையில் செயற்பட வேண்டும், ஊடக சுதந்திரம்
நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பின்னர் கடந்த ஒரு வருடகாலத்தில் வடக்கு கிழக்கை இராணுவ மயப்படுத்துவதை
அரசாங்கம்துரிதப்படுத்தியிருக்கிறது. திருமண வீடு தொடக்கம் அனைத்திலும்
இராணுவ பிரசன்னம் அதிகரித்து வந்திருக்கிறது. நிரந்தர இராணுவ முகாம்களை
அமைப்பதற்கும் இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதற்கும் பொதுமக்களின்
காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மேலாக வடக்கை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் முகமாகவும் சிங்கள மயப்படுத்தும் முகமாகவும் பாலர் பாடசாலைகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு இராணுவத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இதற்கு மேலாக வடக்கை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் முகமாகவும் சிங்கள மயப்படுத்தும் முகமாகவும் பாலர் பாடசாலைகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு இராணுவத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமை பற்றி பல
நாடுகள் பேசிக்கொண்டிருக்கும் போது கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்
உள்ள 260 பாலர் பாடசாலைகளை இராணுவம் கையேற்றிருக்கிறது. பாலர் பாடசாலை
ஆசிரியர்கள் குடிமக்கள் பாதுகாப்பு படையின் கீழ்
கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குடிமக்கள் பாதுகாப்பு படையினரின்
சீருடை அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த பாலர் பாடசாலைகள் ஆசிரியர்கள்,
தினமும் நண்பகல் 12 மணி வரை பாலர் பாடசாலைகளில் பணியாற்ற வேண்டும் என்றும்,
அதன் பின்னர், குடிமக்கள் பாதுகாப்பு படைப் பிரிவினால் வழங்கப்படும் பணியை
ஆற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மாதத்தில் முதலாவது, மூன்றாவது
திங்கட்கிழமைகளில் குடிமக்கள் பாதுகாப்புப் படைப்பிரிவின் பணியகங்களில்
ஒப்பமிட வேண்டும் என்றும் ஒருமுறை கையெழுத்திடத் தவறினால் மாத ஊதியத்தில்
4500 ரூபாவை இழக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்புப்
படைப்பிரிவின் 430வது படையணியின் தலைமையகமே, வன்னியிலுள்ள முன்பள்ளிகளை
தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்தப் படையணியின் கட்டளை அதிகாரி கேணல்
டபிள்யூ. டபிள்யூ. ரத்னபிரிய மற்றும் துணை கட்டளை அதிகாரி மேஜர் ரஞ்சித்
மல்லவராச்சி ஆகியோர் இந்த பணிகளுக்கு பொறுப்பாக
நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தை இராணுவ மயப்படுத்தி தமிழரின் அடுத்த
தலைமுறையை சிங்கள, பௌத்த பேரினவாதத் தலைமைக்கு கீழ்ப்படியத்தக்கவாறு
முன்பள்ளிச் சிறார்களை வழி நடத்துவதே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின்
திட்டமாகும்.
கடந்த ஒரு வருடகாலத்தில் உதயன், யாழ்
தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர்கள் தாக்கப்பட்டு பத்திரிகைகள்
எரிக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு
தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே சர்வதேசம் கொண்டுவரும் தீர்மானத்திற்கு பணிந்து சிறிலங்கா தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளையும் தமிழர் பிரதேசங்களை இராணுவ சிங்கள மயப்படுத்துவதை கைவிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது.
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் சிறிலங்கா வழிக்கு வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
எனவே சர்வதேசம் கொண்டுவரும் தீர்மானத்திற்கு பணிந்து சிறிலங்கா தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளையும் தமிழர் பிரதேசங்களை இராணுவ சிங்கள மயப்படுத்துவதை கைவிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது.
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் சிறிலங்கா வழிக்கு வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
இதற்கு ஒரே வழி தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த வேண்டும்.
தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை முற்றாக நிராகரித்து தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.
அரசாங்கத்துடன் தொங்கி கொண்டிருக்கும்
டக்ளசிற்கும் பிள்ளையானுக்கும் அரச ஆதரவு கும்பல்களுக்கும் பின்னால் தமிழ்
மக்கள் செல்லும் நிலை நீடித்தால் வடக்கு கிழக்கை சிங்கள இராணுவ
மயப்படுத்துவது அதிகரித்தே செல்லும்.
விடுதலை என்பது சர்வதேசம் பெற்றுத்தருவதல்ல, விடுதலை ஆயுதப்போராட்டத்தினால் மட்டும் கிடைத்து விடுவதும் இல்லை. தளத்தில் இருக்கின்ற மக்கள் பொது எதிரியை ஐனநாயக ரீதியில் எதிர்த்து நின்று தோற்கடிக்கின்ற போது கிடைப்பதுதான் உண்மையான விடுதலை.
விடுதலை என்பது சர்வதேசம் பெற்றுத்தருவதல்ல, விடுதலை ஆயுதப்போராட்டத்தினால் மட்டும் கிடைத்து விடுவதும் இல்லை. தளத்தில் இருக்கின்ற மக்கள் பொது எதிரியை ஐனநாயக ரீதியில் எதிர்த்து நின்று தோற்கடிக்கின்ற போது கிடைப்பதுதான் உண்மையான விடுதலை.
தமிழகத்தில் இன்று மாணவர்கள் மத்தியில்
ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியை போல இலங்கையின் தமிழர் தாயகத்திலும் பொது
எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆயுதம் தேவையில்லை, மன உறுதி ஒன்று இருந்தால் போதும். பொது எதிரியையும் பொது எதிரிக்கு குடைபிடிக்கும் கூட்டங்களையும் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க முடியும்.
(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012அதற்கு ஆயுதம் தேவையில்லை, மன உறுதி ஒன்று இருந்தால் போதும். பொது எதிரியையும் பொது எதிரிக்கு குடைபிடிக்கும் கூட்டங்களையும் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க முடியும்.
Ingen kommentarer:
Legg inn en kommentar