இலங்கை அரசின் பல­வீ­ன­மான பக்­கங்­களைத் துல்­லி­ய­மாக கணித்து வைத்­தி­ருக்கும் சீனா


அம்­பாந்­தோட்­டையில் கால் பதித்த சீனா, கொழும்­பிலும் தனது அக­லக்­காலைப் பரப்­பி­யுள்­ளது. வரு­ட­மொன்­றிக்கு 2.4 மில்­லியன் கொள்­க­லன்­களை கையா­ளக்­கூ­டிய வகையில் கொழும்­புத் ­து­றை­மு­கத்தில் பாரிய கொள்­கலன் மைய­மொன்­றினை சீன அரசின் நிறு­வ­ன­மான ' சைனா மேர்சண்ட் ஹோல்டிங் இன்டர்நெசனல்' நிர்­மா­ணித்­துள்­ளது.
500 மில்­லியன் டொலர் முத­லீட்டில் 2011 டிசெம்­பரில் ஆரம்­பிக்­கப்­பட்ட இம் மையத்தின் 85% பங்கு சீன நிறு­வ­னத்­திற்கு சொந்தம். மீத­முள்ள 15% பங்கு இலங்கை துறை­முக அதி­கார சபைக்கு என்று தீர்மானிக்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த திங்­க­ளன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இம் மையம் திறந்து வைக்­கப்­பட்­டது.
இவை­த­விர, இதற்கு அரு­கா­மையில் பிறி­தொரு கொள்­கலன் மையத்­தி­னையும் துறை­முக அதி­கார சபை நிர்­மா­ணித்­துக்­ கொண்­டி­ருக்­கி­றது. அனே­க­மாக இக் கொள்­கலன் மையம் அடுத்த வருட ஆரம்­பத்தில் செயற்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது
கிழக்கு ஆசி­யா­விற்கும், ஐரோப்பா, மத்­திய கிழக்கு மற்றும் ஆபி­ரிக்­கா­விற்­கு­மி­டையே கேந்­திர முக்­கி­யத்­து­வ­மிக்க மையப்­புள்­ளியில் நிலை­கொண்­டுள்ள இக் கொள்­கலன் துறை­முகம், சீனாவின் கடல் போக்கு­வ­ரத்துப் பாதையில் ஒரு முத்­தாக அமையும்.
ஏற்­க­னவே, சென்ற ஜன­வ­ரியில், பாகிஸ்­தானின் குவடோர் துறை­மு­கத்தைக் கையேற்கும் ஒப்­பந்­த­மொன்­றிற்­கான அத்­தி­வாரம் இடப்­பட்டு விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.  பாகிஸ்­தானின் பலு­சிஸ்தான் மாகாணத்திலுள்ள இந்த குவடோர் துறை­முக அபி­வி­ருத்தி நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு சீன அரசே முத­லீடு செய்­தது. பின்னர் அத் துறை­முகம் சிங்­கப்பூர் நிறு­வ­ன­மொன்­றினால் தற்­போது நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது.
மேற்­கு­லகப் புவிசார் அர­ச­றி­வி­ய­லா­ளர்­களால் முன்­வைக்­கப்­பட்ட ' இந்­தி­யாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் முத்­து­மாலை வியூகம்', என்­கிற மூலோ­பாயக் கருத்­து­ரு­வத்தின் அடுத்த படி­நி­லையை, துறைமுகங்­களை கையேற்க முற்­படும் சீனாவின் நகர்­வு­க­ளி­லி­ருந்து பார்க்க வேண்டும்.
வளர்ந்து வரும் ஆசிய நாடு­க­ளோடு ஒப்­பி­டும்­போது, மொத்த உள்ளூர் உற்­பத்தி குறை­வா­க­வுள்ள நாடு­க­ளில் தான் சீனாவின் முத­லீ­டுகள் பில்­லியன் டொலர் கணக்கில் இருக்­கின்­றது.
வெளிப்­பார்­வைக்குப் பூதா­க­ர­மா­கத்­ தெ­ரி­வது துறை­முக அபி­வி­ருத்­திக்­கான முத­லீடு மட்­டுமே. ஆனால், உள்ளூர் உட்­கட்­டு­மான அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளிலும், மின்­சார உற்­பத்­தி­யிலும், கன­ரக தொழிற்­சாலை ( திருக்­கோ­ண­மலை) நிர்­மா­ணிப்­பிலும், சீனாவின் முத­லீ­டுகள் காத்­தி­ர­மான பங்­கினை வகிக்­கின்­றன.
மலாக்கா நீரி­ணைக்கு அண்­மித்த நாடு­களில், 'கிழக்கு நோக்­கிய பார்வை' (Look East) என்­கிற புதிய வியூ­கத்­துடன், அமெ­ரிக்க ஆத­ர­வுடன் நுழையும் இந்­தி­யாவின் மூலோ­பாய நகர்­வினை சம­நி­லைப்­ப­டுத்தும் வகையில், இந்­து­ ச­முத்­திரப் பிராந்­தி­யத்தில் கன­தி­யான முத­லீட்டு ஆதிக்­கத்தை முன்­னெ­டுக்க சீனா முற்­ப­டு­வது போல் தெரி­கி­றது.
2005லி­ருந்து இற்­றை­வரை, 3.7 பில்­லியன் டொலர்­களை இலங்­கையில் சீனா முத­லீடு செய்­துள்­ளது. கூடு­த­லான நிதி­யினை சீனாவின் அரச நிறு­வ­ன­மான 'எக்ஸிம்' வங்கி வழங்­கி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
அம்­பாந்­தோட்டைத் துறை­முகம், இரண்­டா­வது சர்­வ­தேச விமான நிலையம் ( மத்­தள), மற்றும் இலங்­கையின் முத­லா­வது நான்கு பாதைகள் கொண்ட அதி­வேக நெடுஞ்­சாலை என்­பன எக்ஸிம் வங்­கியின் உப­யத்தில் கட்­டப்­பட்­ட­வையே.
இலங்­கையின் சரிந்­து­வரும் பொரு­ளா­தார நிலை­மை­யி­னையும், அதன் எதிர்­கால இயங்­கு­நிலை எந்­தப்­புள்­ளியில் தேக்­க­ம­டையும் என்­ப­தையும், மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதிய­மைச்சின் செய­லாளர் ஜய­சுந்­த­ரவை விட, சீன வெளி­யு­றவுக் கொள்­கை­வ­குப்­பா­ளர்கள் கவ­ன­மாகக் கணித்து வைத்­துள்­ளார்கள்.
அதா­வது, சர்­வ­தேச தேயிலைச் சந்­தையில் ஏற்­பட்­டுள்ள கடும் போட்டி, ஐரோப்­பாவின் பொரு­ளா­தார மந்த நிலை­யினால் உல்­லா­சப்­ப­யணத் துறையில் ஏற்­படும் சரிவு, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லுகை இழப்பினால் ஆடை ஏற்­று­ம­தியில் ஏற்­பட்ட முடக்­கமும் தொழி­சா­லை­களின் மூடு­வி­ழாக்­களும், ஈரான் மீதான அமெ­ரிக்­காவின் எண்­ணெய்த்­த­டையால் உரு­வாகும் எரி­பொருள் பற்­றாக்­குறை, வங்­கு­ரோத்து நிலை­மையில் தள்­ளாடும் அரச நிறு­வ­னங்கள், மத்­திய கிழக்கில் பர­வ­லாக ஏற்­பட்­டுள்ள அர­சு­க­ளுக்கு எதி­ரான மக்கள் கிளர்ச்­சி­யினால் அங்கு பணி­பு­ரியும் குடி­மக்­களால் வரும் வரு­வாயில் வீழ்ச்சி என்­கிற, திறை­சே­ரியின் வருவாய் ஊற்­றுக்­களை ஆழ­மாகப் பாதிக்கும் பல விட­யங்­களை, சீனா தனது சொந்த ஆய்­விற்கு உட்­ப­டுத்­தி­யி­ருக்கும்.
அண்­மையில் வெளி­யா­கிய, சீனாவின் நீல நூலில் சொல்­லப்­ப­டாத விவ­கா­ரங்­க­ளாக இவை இருக்­கு­மென நம்­பலாம். இத­ன­டிப்­ப­டையில், தனது எதிர்­கால பிராந்­திய நலன்­சார்ந்த துறை­களில், முத­லீ­டு­களை அதி­க­ளவில் குவிக்கும் யுக்­தியை சீனா பிர­யோ­கிப்­பது போலுள்­ளது.
துறை­முக அபி­வி­ருத்தி ஊடாக வரும் மாற்­றங்கள், மற்­ற­வர்கள் தம்மில் தங்கி நிற்கும் சூழலை உரு­வாக்கும் என்று இலங்கை நம்­பு­வதை சீனா கவ­னத்தில் கொள்ளும்.
வெளி­நாட்டு நேரடி முத­லீடு, துறை­மு­கங்­களைக் கடந்து உள்ளே நுழை­யா­விட்­டாலும், துறை­மு­கத்­திலும் அதனை அண்டி உரு­வாக்­கப்­படும் சுதந்­திர வர்த்­தக வல­யங்­க­ளிலும் வந்து குவி­யு­மென்று மஹிந்த அரசு எதிர்­பார்க்­கின்­றது.
உதா­ர­ண­மாக, 2 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­மிக்க தனியார் முத­லீ­டு­களை கவர்ந்­தி­ழுப்­ப­தற்கு, துறை­முக அபி­வி­ருத்தி பெரிதும் உத­வி­யி­ருப்­ப­தாக, இலங்கை துறை­முக அதி­கார சபையின் தலைவர் பிரியத் விக்­கி­ரம அண்­மையில் தெரி­வித்த கருத்து, இந்த எதிர்­பார்ப்­பினை உறுதி செய்­கின்­றது.
இத­ன­டிப்­ப­டையில், கடந்த வாரம் சுதந்­திரத் துறை­மு­கங்­க­ளாக அம்­பாந்­தோட்­டையும், கொழும்பும் அரசால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டதை புரிந்து கொள்­ளலாம்.
ஒரு சட்ட மூலத்தின் பிர­காரம் ( Financial Act No.12 of 2012), இவை சுதந்­திர துறை முகங்­க­ளாக அறி­விக்­கப்­பட்­ட­தோடு, கட்­டு­நா­யக்க மற்றும் கொக்­கல ஏற்­று­மதி வலயம், மத்­தள ராஜபக்ச சர்­வ­தேச விமான நிலையம் என்­பன வரி அற­வி­டப்­ப­டாத சரக்­கு­களை தேக்கி வைக்கும் (கிடங்கு) இடங்­க­ளாக ( bonded area) மாற்­றப்­பட்­டுள்­ளன.
இப்­ப­கு­தி­களில் முத­லீடு செய்­ப­வர்கள், தொழிற்­சா­லை­களை அமைப்­ப­வர்கள், அங்கு உற்­பத்­தி­யாகும் பொருட்­களை மீள் ஏற்­று­மதி செய்­யலாம். ஆனால், இப்­பொ­ருட்­களை, நாட்டின் உள்ளூர் சந்­தையில் விற்பனை செய்ய முடி­யாது என்­கிற நிபந்­த­னையும் உண்டு.
இலங்­கை­யுடன் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையில் (FTA)  கைசாத்­திட்ட இந்­தியா, பாகிஸ்தான் போன்ற நாடு­களும், ஆசிய பசுபிக் வர்த்­தக உடன்­பாட்டில் இணைந்­த­வர்­களும், இச் சலு­கை­களை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்­கிறார் நிதி­ய­மைச்சின் வர்த்­தகம் மற்றும் முத­லீட்டு கொள்­கை­க­ளுக்­கான பணிப்பாளர் நாயகம் சமன் ஏக்கநாயக்க.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தோடும் இவ்வகையான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்ள, இலங்கை பலகாலமாக முயற்சித்து வருவதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனாலும் ஒன்றியத்துடன் உடனான நீண்ட உரையாடல்களின் பின்னர், இந்தியாவானது இதேவிதமான வர்த்தக உடன்பாடு ஒன்றினை விரைவில் மேற்கொள்ளப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆகவே விரிந்த பார்வையூடாக இந்த மாறுதல்களை அவதானித்தால், திறைசேரியில் அபரிமிதமாக குவிந்திருக்கும் டொலர்களின் சொந்தக்காரராகிய ஆசியாவின் பொருண்மிய ஜாம்பவான் சீனா, இலங்கை அரசின் பலவீனமான பக்கங்களைத் துல்லியமாக கணித்து வைத்திருக்கும் அதேவேளை, அந்தப் பலவீனங்களைத் தனதாக்கிக் கொள்ளும் நகர்வினை விரைவுபடுத்துகிறது என்பதை மறுக்க முடியாதுள்ளது.
இதயச்சந்திரன்
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar