பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்!

வடக்கில் நிலை­கொண்­டுள்ள படை­யினர் தொடர்­பாக மீண்டும் ஒரு­முறை விவாதம் கிளம்­பி­யுள்­ளது.
தெல்­லிப்­ப­ழையில் கடந்­த­வாரம் நடந்த புற்­றுநோய் மருத்­து­வ­மனை திறப்பு விழாவில் உரை­யாற்­றிய முத­ல­மைச்சர் சீ.வி. விக்­னேஸ்­வரன், வடக்கில் படைக்­கு­றைப்பு மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்ற நாள் தொடக்கம் அவர், சந்­தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் படைக்­கு­றைப்பை வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறார்.
தெல்­லிப்­பழை புற்­றுநோய் மருத்­து­வ­மனைத் திறப்பு விழாவில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்­டதால், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு படைக்­கு­றைப்பை மிகவும் பவ்­வி­ய­மான முறையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
எதற்­காக வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை குறைக்க வேண்டும் என்­ப­தற்­கான கார­ணத்­தையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவின் முகம் கோணா­மலும் அவ­ருக்கு வெறுப்பை ஏற்­ப­டுத்­தாத வகை­யிலும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
இங்­கி­ருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான அளவில் இரா­ணு­வத்­தினர் வடக்கில் நிலை­கொண்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யது மிகை­யா­னதே.
ஏனென்றால், வடக்கின் ஒட்­டு­மொத்த மக்கள் தொகை கிட்­டத்­தட்ட பத்து இலட்சம் பேராகும்.
ஆனால், இலங்கை இரா­ணு­வத்தின் ஒட்­டு­மொத்த படை­ப­லமே இதில் நான்கில் ஒரு பங்கு தான்.
அவ்­வா­றி­ருக்க, இங்­குள்ள மக்கள் தொகைக்கு ஈடாக படை­யினர் இருப்­ப­தாக முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டது பெரிதும் மிகை­யா­னதே.
ஆனால், வடக்கில் தேவைக்கும் அதி­க­மா­ன­ளவு - ஏனைய இடங்­களைப் போலன்றி, படை­யினர் நிலை கொண்­டுள்­ளனர் என்­பது பொய்­யான கருத்­தல்ல.
வடக்கில் அதி­க­ளவில் நிலை­கொண்­டுள்ள படை­யி­னரால், பல பாத­க­மான விளை­வு­களை வடக்­கி­லுள்ள மக்கள் எதிர்­கொள்­கி­றார்கள் என்று முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டிய போதிலும், அதற்கு ஜனா­தி­பதி கொடுத்­தி­ருந்த பதில் வியப்­பா­னது.
நிச்­சயம், பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­களே இந்தப் பதிலைக் கேட்டு வியந்­தி­ருப்­பார்கள். ஏனென்றால், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச கொடுத்த பதில் அவ்­வா­றா­னது.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவே முப்­ப­டை­க­ளி­னதும் பிர­தம தள­பதி. ஆனால், அவரால் வடக்­கி­லுள்ள படை­யினர் தொடர்­பான புள்­ளி­வி­ப­ரங்­களை சரி­யாக கூற­மு­டி­ய­வில்லை.
முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னர் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, போர்க்­கா­லத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரை­யான படை­யினர் வடக்கில் நிலை கொண்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் தற்­போது அந்த எண்­ணிக்கை 12 ஆயி­ர­மாக குறைக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் கூறி­யி­ருந்தார்.
தற்­போது 12 ஆயிரம் படை­யினர் தான் வடக்கில் உள்­ளனர். நாட்டின் பாது­காப்­புக்­காக அனைத்து இடங்­க­ளிலும் அவர்கள் நிலை கொள்ள வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
இங்கே வடக்கில் என்று முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டது யாழ்ப்­பாணம், வன்­னியை உள்­ளி­டக்­கிய ஒட்­டு­மொத்த வடமாகா­ணத்­தையும் தான்.
ஆனால், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவும் சரி பாது­காப்பு அமைச்சும் சரி படை அதி­கா­ரி­களும் சரி படைக்­கு­றைப்பு தொடர்­பான கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்கும் போது வடக்கு என்றால் அதை யாழ்ப்­பாணக் குடா­நாட்டைச் சுட்­டிக்­காட்டித் தப்பிக் கொள்­வ­துண்டு.
இம்­மு­றையும் அதே மயக்­க­மான பதிலைத் தான் கொடுத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி.
ஆனால், ஒட்­டு­மொத்த வடக்கில் என்­றாலும் சரி யாழ்ப்­பாணக் குடா­நாட்டில் என்­றாலும் சரி 12 ஆயிரம் படை­யினர் தான் நிலை கொண்­டுள்­ளனர் என்றால் அதனை எவ­ராலும் நம்­ப­மு­டி­யாது.
போர் நடந்த காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரை­யான படை­யினர் வடக்கில் நிலை கொண்­டி­ருந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார் ஜனா­தி­பதி.
போர் நடந்த போது யாழ்.படைத் தலை­மை­ய­கத்தின் கீழ் 51, 52, 53, 55 என நான்கு டிவி­ஷன்கள் தான் யாழ்ப்­பா­ணத்தில் நிலை கொண்­டி­ருந்­தன.
நான்கு டிவி­ஷன்­களில் 60 ஆயிரம் படை­யினர் நிலை கொண்­டி­ருந்­தி­ருக்க வாய்ப்பே இருக்­காது.
2009 டிசம்­பரில் தான் யாழ். படை­களின் கட்­டளைத் தள­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற போது 45 ஆயிரம் படை­யினர் யாழ்ப்­பா­ணத்தில் நிலை கொண்­டி­ருந்­த­தாக முன்னாள் யாழ். கட்­டளைத் தள­பதி பல­முறை கூறி­யி­ருக்­கிறார்.
எனவே, போர்க்­கா­லத்தில் 70 ஆயிரம் வரை­யான படை­யினர் நிலை­கொண்­டி­ருந்­த­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்­டது யாழ்ப்­பா­ணத்­தையா? அல்­லது ஒட்டு மொத்த வடக்கு மாகா­ணத்­தை­யுமா என்ற கேள்வி எழு­கி­றது.
போரின் உச்­சக்­கட்­டத்தில் ஒட்­டு­மொத்த வடக்­கிலும் 21, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 68 என்று 17 டிவி­ஷன்கள் நிலை கொண்­டி­ருந்­தன.
எனவே, 17 டிவி­ஷன்­க­ளிலும் 70 ஆயிரம் வரை­யான படை­யி­ன­ரையே கொண்­டி­ருக்கும் அள­வுக்கு இலங்கை இரா­ணுவம் பல­வீ­ன­மான நிலையில் இருந்­தி­ருக்­க­வில்லை.
அது போலவே, வடக்கில் தற்­போது 12 ஆயிரம் படை­யி­னரே உள்­ள­தாக குறிப்­பிட்ட கணக்கும் கேள்­விகள் நிறைந்த ஒன்று.
யாழ்ப்­பா­ணத்தில் 12 ஆயிரம் படை­யினர் நிலை­கொண்­டுள்­ள­தாக அவர் கூறி­யி­ருந்தால் கூட அதற்கும் உண்­மைக்கும் இடை­யி­லான இடைவெளி மிகப்­பெ­ரி­ய­தா­கவே இருக்கும்.
ஏனென்றால், யாழ். படைத் தலை­மை­ய­கத்தின் கீழ் தற்­போது 51, 52, 55 என மூன்று டிவி­ஷன்கள் உள்­ளன.
இவற்றில், மொத்தம் 9 பிரி­கேட்­களும் 39 பற்­றா­லி­யன்­களும் இருப்­ப­தாக பாது­காப்புச் செயலர் கோத்­தபாய ராஜபக்ச கடந்த 8ஆம் திகதி மிரு­சுவில் 52வது டிவிஷன் தலை­மை­யகத் திறப்பு விழாவில் உரை­யாற்­றிய போது கூறி­யி­ருந்தார்.
மூன்று டிவி­ஷன்­களில் மொத்தம் 12 ஆயிரம் படை­யி­னரே உள்­ளனர் என்றால், ஒரு பிரி­கேட்டில் 1300 படை­யி­னரே உள்­ளனர் என்றால் ஒரு பற்­றா­லி­யனில் 300 படை­யி­னரே உள்­ளனர் என்றால் அதை யாராலும் நம்­ப­மு­டி­யாது.
இலங்கை இரா­ணு­வத்தின் பற்­றா­லி­யன்­களில் 600 தொடக்கம் 800 வரை­யான படை­யினர் இருப்­பதே வழக்கம். அந்த வகையில் பார்த்தால் யாழ். குடா­நாட்­டி­லேயே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச குறிப்­பிட்ட எண்­ணிக்­கையை விடவும் இரண்டு மடங்கு படை­யினர் நிலை­கொண்­டி­ருக்க வேண்டும்.
இந்­த­நி­லையில் ஒட்­டு­மொத்த வடக்­கிலும் 12 ஆயிரம் படை­யினர் நிலை­கொண்­டி­ருக்­கின்­றனர் என்று எந்­த­வ­கை­யிலும் கூற­மு­டி­யாது.
ஏனென்றால், வடக்கில் யாழ்ப்­பாணம் தவிர வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்று மூன்று படைத் தலைமையகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் 31ற்கும் 39ற்கும் இடைப்பட்ட பற்றாலியன்கள் உள்ளன.
இந்தளவு படைப்பிரிவுகளிலும் 12 ஆயிரம் படையினர் தான் உள்ளனர் என்று கணக்கு காட்டினால் அதை யார் தான் நம்புவார்.
வடக்கில் அதிகளவு படையினரை வைத்திருக்க விரும்பும் அரசாங்கம், தவறான புள்ளிவிபரங்களின் மூலம் அதை நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது என்பதை தெளிவாகவே உணர முடிகிறது.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்ற பழமொழி அரசாங்கத்துக்கு நினைவில் இல்லை போலும்.
சத்­ரியன்
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar