இஸ்ரேலியர்களுடைய அடிமை வாழ்க்கை பற்றி சற்று விரிவாக நாம் பார்ப்பது, இரண்டு விதத்தில் எமக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கின்றேன்.
முதலாவது, இன்று ஒருவிதமான அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற ஈழத் தமிழர்களுக்கு, 'எங்களை விட ஒரு இனம் மிக மோசமாக அடிமை வாழ்க்கை அனுபவித்திருக்கின்றது" என்கின்ற செய்தி கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதால்.
அதுவும் இஸ்ரேலியர்களுடைய அடிமை வாழ்க்கை என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமானது.
ஒரு பின்னடைவு எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்றதும், அல்லது எங்களது எதிரியின் கரம் சற்று ஓங்கிவிட்டது என்றதும், அனைத்துமே முடிந்துவிட்டது என்று துவண்டுவிடும் மனப்பான்மையில் இருக்கும் எங்களுக்கு, ஒரு தோல்வி என்றால் என்ன, எதிரியிடம் அடிமைப்படுவதென்றால் என்ன என்கின்றதை உணர்த்துவதற்கு, அல்லது ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைவதற்கு, இஸ்ரேலியர்களுடைய நீண்ட அடிமை வாழ்க்கை பற்றி இச் சந்தர்பத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.( அதாவது ஒரு கோடு வரையப்பட்டுள்ளது. அந்தக் கோட்டை சிறிய கோடாக மாற்ற விரும்பினால், அந்தக் கோட்டுக்கு அருகே மற்றொரு பெரிய கோட்டினை வரைவது போன்ற ஒரு செயல் இது)
இரண்டாவது, இஸ்ரேலியர்களுடைய தொடர் அடிமை வாழ்கை பற்றி ஆராய்வது, விடுதலை வேண்டிப் போராடி வரும் ஈழத் தமிழருக்கு மற்றொரு வகையில் உற்சாகம் அளிப்பதாக அமையும் என்று நினைக்கின்றேன். அதாவது, எங்களை விட பல மடங்கு கொடுமையாக அடிமை வாழ்க்கையை அனுபவித்த இஸ்ரேலியர்கள் எப்படி ஒரு விடுதலையைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது, பல வழிகளிலும் எமக்கு உற்சாகம் அளிக்கின்ற விடயமாகவே இருக்கும்.
ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம். இஸ்ரேலியர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. எம்மைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்டுதான் அவர்களுக்கான விடிவு தற்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.
இன்று உலகின் போக்கையும், உலக ஒழுங்கையும் மாற்றிவிடக்கூடியதான வல்லமையை இஸ்ரேல் என்கின்ற சிறிய நாடு பெற்றிருக்கின்றதென்றால், அதன் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை, வைராக்கியம், கடின உழைப்பு, இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் பலம், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீரம், ஒற்றுமை - என்று பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.
பாபிலோனியர்களாலும், எகிப்தியராலும், ரோமர்களாலும், பிரித்தானியராலும், பேர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் இன்னும் பல இனக் குழுமங்களினாலும்; அடிமைகளாக்கப்பட்டு பலநூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்துவந்த யூதர்களால் தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்துள்ளது.
அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களிலும், அடிமைகளாக அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த தேசங்களிலும் அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது.
தங்களுக்கென்று ஒரு நாடு அமையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் வைராக்கியத்திலும் யூதர்களால் நீண்டகாலம் வாழ முடிந்தது.
இவையெல்லாம் ஒவ்வொரு ஈழத் தமிழினதும் அறிந்துகொள்ளவேண்டிய பாடங்கள்.
இதுபோன்ற பல காரணங்களுக்காக, இஸ்ரேலியர்களுடைய அடிமை வாழ்க்கை பற்றி சற்று விரிவாக ஆராய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.
ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதேயா ராஜ்யம் கி.மு. 586ம் ஆண்டு பபிலோனிரால் கைப்பற்றப்பட்டது.
கடவுளால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்து வரும் தங்களை யாருமே எதுவும் செய்துவிட முடியாது என்று பெருமையும், இறுமாப்பும் கொண்டிருந்த யூதர்களுக்கு, தமது தேசம் அன்னியரால் அடிமைப்படுத்தப்பட்டதானது, அவர்களால் ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது.
யூதர்களுடைய அடிமை வாழ்க்கை அதில் இருந்துதான் ஆரம்பமானது.
உண்மையிலேயே யூதர்கள் அதி புத்திசாலிகள்.
நல்ல யுத்த வீரர்கள்:
அவர்களை பாபிலோனியர்களால் எப்படி வெற்றிகொள்ள முடிந்தது?
மிகவும் பலமான ஜெருசலேம் கோட்டையை எவ்வாறு அவர்களால் கைப்பற்ற முடிந்தது?
ஜெருசலேம் கோட்டையை கட்டும்பொழுது, அந்தக் கோட்டையை எவராலும் கைப்பற்ற முடியாது என்று கூறித்தான் கட்டினார்கள்: அத்தனை பலமான கோட்டை அது.
அப்படிப் பலமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜெருசலேம் கோட்டையை பாபிலோனியர்களால் எவ்வாறு கைப்பற்ற முடிந்தது?
இவை பற்றிப் பார்ப்பதானால் முதலில் பாபிலோயர்கள் பற்றியும், அந்தக் காலகட்டத்தில் பாபிலோனியர்களின் அந்தஸ்து, செல்வாக்கு பற்றியும் பார்ப்பது அவசியம்.
இன்றைய ஈராக் தேசமும், அதனை அண்டிய தேசங்கள்தாம் அன்றைய பாபிலோன் சாம்ராஜ்யம்.
அந்தக் காலத்தில் அசீரிய சாம்ராஜயம் மற்றும் பாபிலோனிய சாம்ராஜ்யங்கள்தாம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மிகவும் பலம் மிக்க இராஜ்யங்களாக இருந்தன. அவற்றிற்கு அடுத்ததாக எகிப்து தேசமும் பலம் மிக்க ஒரு தேசமாக இருந்தது.
இந்த தேசங்களெல்லாம் கிட்டத்தட்ட இன்றைய காலத்து பிராந்திய வல்லரசுகள் போன்று செயற்பட்டுக்கொண்டிருந்தன.
அந்த வல்லரசு போட்டிக்குள் தெரியாத்தனமாக மாட்டுப்பட்டுக் கொண்டார்கள் யூதர்கள்.
அந்த நேரத்தில் யூதேயாவின் அரசனாக இருந்த யோசியா என்பவன், யூதர்களை யாருமே அசைக்கமுடியாது என்ற நினைப்பில் ஆரம்பித்த ஒரு சண்டைதான் , இஸ்ரேலை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வருடங்கள் நாடற்றவர்களாக மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது.
கொஞ்சம் நெருடலான விடயம்தான்.
யோசியா நினைத்திருந்தால் அந்த யுத்தத்தை தவிர்த்திருக்கலாம்.
ஆனால் யூதர்களுக்கு அந்த நேரத்தில் இருந்த – மிதமிஞ்சிய தற்துணிவு, யோசியா அரசனை அந்த சண்டையை வலிந்திழுக்கச் செய்திருந்தது.
அத்தோடு, அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிராந்தியத்தில் நிலவி வந்த பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிகளையும், யோசியா அரசன் கவனத்தில் எடுக்கத் தவறியிருந்தான்.
இவை அனைத்தும், ஒரு நீண்ட இருண்ட வாழ்க்கைக்கு யூதர்களை கொண்டுபோய்ச் சேர்த்திருந்தது.
யூதர்கள் அனுபவித்த அந்த இருண்ட வாழ்க்கை என்பது, இரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு சோகமான வரலாறு.
அந்த வரலாறு பற்றி அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்…
nirajdavid@bluewin.ch
படங்கள்: இஸ்ரேலியர்களுடைய அடிமை வாழ்வின் சில பதிவுகள்

Ingen kommentarer:
Legg inn en kommentar