கி.மு. 627ம் ஆண்டு நெபோலா என்கின்ற அரசன் புதிய பாபிலோனை(தற்போதைய ஈராக்) உருவாக்கினான். மிகவும் பலம் மிக்க ஒரு இராஜ்யமாக உருவாக்கப்பட்ட பாபிலோன் இராஜ்யம் அயல் தேசங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு, ஈடு இணையற்ற ஒரு இராஜயமாகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் கனவினைத் தனதாகக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் யூத இராஜ்யமானது (தற்போதைய இஸ்ரேல் தேசம்) யோசியா என்கின்ற அரசனின் ஆழுகையின் கீழ் ஒரு பலம்மிக்க சுதந்திர நாடாகவே இருந்தது.
யூதேயாவிற்கும் எகிப்துக்கும் இடையில் வழமையான முறுகல். இஸ்ரேல் அரசனான யோசியா கொஞ்சம் அவசரப்பட்டு எகிப்து மீது படையெடுத்துச் செல்ல, அங்கு நடை பெற்ற சண்டையில் யோசியா அரசன் கொல்லப்பட்டுவிடுகின்றான்.
நேரடிச் சண்டையில் இஸ்ரேலின் அரசன் இறந்துவிட, இஸ்ரேலியப் படைகள் தோல்வி அடைந்து, கொல்லப்பட்டவர்கள் போக மிகுதியானோர் வேறு வழியில்லாமல் எகிப்தின் மண்ணன் பார்வோன் நேகோவிடம் சரணடைந்தார்கள்.
இஸ்ரேல் மிகவும் இலகுவாக எகிப்திடம் வீழ்ந்தது.
இஸ்ரேலில் தனக்கு தோதான ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கிய எகிப்து, இஸ்ரேல் தேசத்தை தனது மறைமுக ஆழுகையின் கீழ் கொண்டு வந்தது. இஸ்ரேல் தேசம் மாதாமாதம் ஒரு தொகை கப்பத்தை எகிப்து தேசத்திற்கு கட்டி, எகிப்தின் ஒரு சிற்றரசு நிலைக்கு வந்து சேர்ந்தது.
எகிப்தின் சிற்றரசாக மாறியிருந்த இஸ்ரேலில் தனது பொம்மை அரசனாக யோயாக்கீம் என்பவனை (இவன் யோசியாவின் மகன்) எகிப்து அரசாட்சி நியமித்தது. யூதர்கள் கொஞ்சம் முரட்டாட்டக்காரர்கள் என்றாலும், மிகவும் புத்திசாலிகள். சுதந்திர விரும்பிகள். எகிப்தின் பிடியில் இருந்து தமது தேசத்தை முற்றுமாக விடுவிக்கும் நோக்கோடு, இரகசியமாக சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டார்கள்- இஸ்ரேலிய இளைஞர்கள்:
தமது அரசன் பலவீனமானவன் என்பதும், எகிப்தின் சொற்படி நடப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்பதும் இஸ்ரேலிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், காலம் கனியும் பொழுது, அல்லது எகிப்து பலவீனமடையும் ஒரு சரியான சந்தர்பத்தில் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்து இஸ்ரேல் நீங்கிவிட்டதாக அறிவிக்கலாம் என்ற நோக்கில் இரகசியமாக தமது பலத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார்கள் இஸ்ரேலியர்கள்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது, எகிப்தின் கீழ் யூதேயா (இஸ்ரேல்) இருக்கின்றது என்றால், எகிப்திய போர் வீரர்கள் இஸ்ரேலை ஆக்கிரமித்து நின்றார்கள் என்று அர்த்தம் இல்லை. யூதேயாவில் யூத போர்வீரர்கள்தான் நின்றுகொண்டிருந்தார்கள். யூதர்கள்தான் அனைத்தையும் நிர்வகித்தும்;கொண்டிருந்தார்கள். ஆனால் மாதா மாதம் ஒரு கப்பத்தை யூதேயா (இஸ்ரேல்) எகிப்துக்கு வழங்கவேண்டும். எகிப்தின் கீழேயே இஸ்ரேல் தேசம் இருக்கின்றது என்பதற்கான ஒரு அடையாளம்தான் இது.
தாம் ஒரு சுதந்திர தேசமாக இருப்பதையே யூதர்கள் அனைவரும் விரும்பினார்கள். எகிப்துக்கு கப்பம்கட்டி எகிப்தினது சிற்றரசாக யூதேயா(இஸ்ரேல்) இருப்பதை யூதர்கள் விரும்பவே இல்லை. அதனால்தான் அவர்கள் இரகசியமாக தமது பலத்தை அதிகரித்தபடி ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
கதை இவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், கி.மு.605ம் ஆண்டு முக்கிய திருப்பம் ஒன்று அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்றது. பிராந்திய வல்லரசுக் கனவுகளோடு நகர்ந்து கொண்டிருந்த பாபிலோன் இராஜ்யம் எகிப்தை தோற்கடித்தது.
இதனால் அதுவரை எகிப்துக்கு கப்பம் செலுத்திக்கொண்டிருந்த யூதேயா தேசம்(இஸ்ரேல் தேசம்) தானாகவே பாபிலோன் ஆட்சியின் கீழ் சிற்றரசாக வரும் நிலை உருவானது.
எகிப்திடம் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த யூதர்கள், எகிப்து பாபிலோனிடம் தோல்வியுற்ற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தம்மை ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கும் நோக்கத்தோடு நகர்வெடுக்க ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது இஸ்ரேலை(யூதேயா) ஆட்சிசெய்துகொண்டிருந்த யோயாக்கிம் அரசனுக்கு பாபிலோனியர்களைப் பகைத்துக்கொள்வதில் அத்தனை உடன்பாடு கிடையாது.
பாபிலோனியர்கள் ஒரு பரந்த இராஜயக் கனவில் இருப்பவர்கள். அந்த நேத்தில் மிகுந்த பலத்தை பாபிலோனியர்கள் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களை வலிந்திழுத்துப் பொருதிக்கொள்வது, யூதேயாவிற்கு நல்லதல்ல என்று எவ்வளவோ கூறிப்பார்த்தார்.
யூத இளைஞர்களும், மதத் தலைவர்களும் அதற்கு உடன்படவில்லை.
'பயந்தங்கொள்ளி ராஜா" என்று யோயாக்கீமை எள்ளிநகையாடத் தொடங்கிவிட்டார்கள். கடவுள் யூதர்களைக் காப்பார் என்று நம்பிக்கை வைக்காமல், தேவையில்லாத காரணம் கூறிக்கொண்டிருப்பதாக யோக்கியா அரசனைச் சாடியதுடன் அவனை கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்றும் குற்றம் சுமத்தத் தொடங்கியிருந்தார்கள்.
வேறு வழியில்லாமல் பாபிலோனியருக்கு மாதா மாதம் அனுப்பும் கப்பத்தை நிறுத்தினார் யோயாக்கீம் மன்னன்.
இது நடைபெற்றது கி.மு. 598 இல். அந்த நேரத்தில் பாபிலோன் தேசத்தின் அரசனான இருந்தவன் நேபுகாத்நேச்சார். அவனைப் பொறுத்தவரை யூதேயா சிற்றரசர் தமக்கு கப்பம் தர மறுத்ததை, தமது இராஜயத்திற்கு எதிராக அவர்கள் கலகம் செய்வதாகவே அவன் நோக்கினான். உடனே பெரும் படையுடன் யூதேயாவை நோக்கிப் புறப்பட்டான்;.
அந்த நேரத்தில் பாபிலோனியர்களுக்கு இருந்த மாபெரும் பலத்தின் முன்னால் யூதர்களால் நின்றுபிடிக்க முடியவில்லை. சீக்கிரமாகவே தோல்வி அடைந்துவிட்டார்கள். ஜெருசலேமுக்கு வெளியே நடைபெற்ற சண்டையில் யூதேயா அரசனான ஜோயாக்கீம் கொல்லப்பட்டுவிட, அவனின் மகன் தலைமையினான படையினர் ஜெருசலேம் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டார்கள்.
சுமார் மூன்றுமாதங்கள் ஜெருசலேம் கோட்டையை முற்றுகையிட்டிருந்த பபிலோனியர்களிடம் கடைசியில் இளவரசனும் மற்றைய முக்கியஸ்தர்களும் சரணடைந்தார்கள்:
அவர்கள் அனைவரும் உடனடியாகவே நாடுகடத்தப்பட்டார்கள்:
அத்தோடு ஜெருசலேம் நகரத்தில் இருந்த கொஞ்சம் திடகாத்திரமான ஆண்கள், நிறமைசாலிகளான இளைஞர்கள், அழகான இளம் பெண்கள், படித்தவர்கள் என்று பலரும் பபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பபிலோன் தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அந்த நேரத்தில் ஒரு பரந்த இராஜயக் கனவில் இருந்த பபிலோனியர்கள் பெரும்படையை ஜெருசலேமில் முடக்கிவைக்க விரும்பவில்லை. தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான சிதேக்கியா என்பவனை யூதேயாவிற்கு சிற்றரசனாக்கிவிட்டு, ஒரு சிறிய படையையும் அங்கு நிறுத்திவைத்துவிட்டு, தமது ராஜ்ய விஸ்தரப்பு படலத்தைத் தொடர அங்கிருந்து கிளம்பினார்கள் பபிலோனியர்கள்.
ஆனாலும் யூத இளைஞர்களும், மதத் தலைவர்களும்; விடுவதாக இல்லை. பபிலோனியர்களால் நியமிக்கப்பட்ட திதோக்கியா அரசை உறுப்பேத்தி, உசுப்பேத்தி, கடைசியில் அனையும் பாபிலோனியர்களுக்கு எதிராக கிளர்ந்தௌவைத்துவிட்டார்கள்.
பாபிலோன் மன்னன் நேபுகாத்நேச்சருக்கு கோபம் உச்சத்திற்கு வந்தது. இஸ்ரேலியருக்கு எதிராக ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று கூறி ஒரு பெரும் படையுடன் மீண்டும் எருசலேமை நோக்கி வந்தான்.
கி.மு.586 ம் ஆண்டு நேபுகாத் நேச்சரின் தலைமையிலான பாபிலோனியப் படைகள் மிக மூர்க்கமாக ஜெருசலேம் நகருக்குள் புகுந்தன. ஜெருசலேம் நகரமும், யூதர்களின் தேவாலயமும் சூறையாடப்பட்டு முற்றாகவே அழிக்கப்பட்டன.
கண்ணில் பட்ட யூதர்கள் அனைவரையும் கொடுமையாக் கொலை செய்தார்கள் பாபிலோனியர்கள். பலர் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டு, பல தேசங்களுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். முற்றாகவே சிதறடிக்கப்பட்டார்கள்.
ஜெருசலேமில் இருந்த திடகாத்திரமான இளைஞர்கள், கல்விமான்கள், அழகான பெண்கள் ஒன்று கொல்லப்படார்கள் அல்லது அடிமைகளாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். ஜெருசலேமின் மீது படையெடுத்த பாபிலோனியர்கள் அந்த நகரத்தை கிட்டத்தட்ட முற்றாகவே அழித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்கள். இஸ்ரேல் என்ற யூதேயா தேசம் சுடுகாடாய் மாறியிருந்தது. திரும்பிய இடம் எல்லாம் பிண வாடை. எரிந்து நாசமாகிய வாழ்விடங்கள். முற்றாகவே அழிக்கப்பட்ட பயிர் நிலங்கள். அங்கு எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.
பாபிலோனுக்கு எதிரான ஒரு புரட்சி பற்றி யூதர்கள் இனி கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு ஈடுசெய்யமுடியாத நாசத்தை அந்த தேசத்திற்கு விளைவித்துவிட்டிருந்தார்கள் பாபிலோனியர்கள். யூதேயாவில் எஞ்சியிருந்தவர்கள் வாழ வழியில்லாமல் பட்டிணிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
பாபிலோனியப் படையெடுப்பின்போது தப்பிப் பிழைத்த யூதர்கள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டி இருந்தது. ஆனாலும் அவர்களால் அது முடியாமலேயே இருந்தது. கீழே விழுந்த யூதர்கள் எழுந்து நிற்க முற்பாடும் பொழுதெல்லாம், அயல் தேங்களில் இருந்து வந்த வேறு இனக் குழுமங்கள், கொள்ளையர்கள், யூதர்கள் மீது அடிமேல் அடி அடித்தபடிதான் இருந்தார்கள்.
ஜெருசலேமில் எஞ்சியிருந்த யூதர்கள் அந்த தேசத்திற்கு சொந்தமில்லாதவார்களாகவே படிப்படியாக மாற ஆரம்பித்தார்கள். யூதர்களின் தேவாலயம் முற்றாகவே தகர்க்கப்பட்ட நிலையில், யூதர்களின் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் எல்லாம் ஜெருசலேமில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், யூதர்களின் மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குக் கூட அங்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் காலப் போக்கில் ஜெருசலேமில் எஞ்சியிருந்த யூதர்களில் ஒரு தொகுதியினர் மாதம் மாறவும் தலைப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. யூதர்களின் ஒரே கடவுள் வழிபாடான யாவே வழிபாட்டைக் கைவிட்டு, அன்னிய தெய்வ மற்றும் விக்கிரக வழிபாடுகளை அவர்கள் மேற்கொள்ளும் நிலை உருவானது. யூதர்களின் கலாச்சாரம், அவர்களது தனித்துவம், எதிர்கால இருப்பு அனைத்துமே அவர்களது தாயகமான ஜெருசலேமில் படிப்படியாக அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது.
இனி யூதர்கள் அவ்வளவுதான் என்றொரு நிலை ஜெருசலேமில் ஏற்பட்டது. இந்த இடத்தில் உங்களிடம் ஒரு கேள்வி எழலாம். எதிர்காலம் என்கின்றதை முற்றாகவே தொலைத்து விட்டிருந்த இப்படியான ஒரு இக்கட்டான சந்தர்பத்தில் இருந்து யூதர்களால் எப்படி மீள முடிந்தது?
பாபிலோனிய ஆக்கிரமிப்பும், இன அழிப்பிலும், அடிமை வாழ்க்கையில் இருந்தும் யூதர்களால் எவ்வாறு மீள முடிந்தது? இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யூதர்களால் தங்களது இன அடையாளத்தை எப்படித் தக்கவைக்க முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் எனக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புலம்பெயர் தமிழர்களுக்கு சற்று நம்பிக்கையை ஊட்டுவதாகவும், அவர்களது கடமையை உணர்த்துவதாகவும் அமைகின்றதான அந்தப் பதில் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்..
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:
Legg inn en kommentar