இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்: (பாகம்-20)- நிராஜ் டேவிட்



கி.மு.586 ம் ஆண்டு பாபிலோனிய அரசன் நேபுகாத் நேச்சரின் தலைமையிலான பாபிலோனியப் படைகள் மிக மூர்க்கமாக ஜெருசலேம் நகருக்குள் புகுந்து ஜெருசலேம் நகரத்தையும், யூதர்களின் தேவாலயத்தையும் சூறையாடி அழித்தது பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
கண்ணில் பட்ட யூதர்கள் அனைவரையும் கொடுமையாக் கொலை செய்த பாபிலோனியர்கள், பல யூதர்களை பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுசெண்டார்கள்.
முற்றாகவே சிதறடிக்கப்பட்டார்கள்.
ஜெருசலேமில் இருந்த திடகாத்திரமான இளைஞர்கள், கல்விமான்கள், அழகான பெண்கள் ஒன்று கொல்லப்படார்கள் அல்லது அடிமைகளாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஜெருசலேமின் மீது படையெடுத்த பாபிலோனியர்கள் அந்த நகரத்தை கிட்டத்தட்ட முற்றாகவே அழித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்கள்.
இஸ்ரேல் என்ற யூதேயா தேசம் சுடுகாடாய் மாறியிருந்தது.
திரும்பிய இடம் எல்லாம் பிண வாடை.
எரிந்து நாசமாகிய வாழ்விடங்கள்.
முற்றாகவே அழிக்கப்பட்ட பயிர் நிலங்கள்.
அங்கு எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.
பாபிலோனுக்கு எதிரான ஒரு புரட்சி பற்றி யூதர்கள் இனி கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு ஈடுசெய்யமுடியாத நாசத்தை அந்த தேசத்திற்கு விளைவித்துவிட்டிருந்தார்கள் பாபிலோனியர்கள்.
யூதேயாவில் எஞ்சியிருந்தவர்கள் வாழ வழியில்லாமல் பட்டிணிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
பாபிலோனியப் படையெடுப்பின்போது தப்பிப் பிழைத்த யூதர்கள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டி இருந்தது.
ஆனாலும் அவர்களால் அது முடியாமலேயே இருந்தது.
கீழே விழுந்த யூதர்கள் எழுந்து நிற்க முற்பாடும் பொழுதெல்லாம், அயல் தேங்களில் இருந்து வந்த வேறு இனக் குழுமங்கள், கொள்ளையர்கள், யூதர்கள் மீது அடிமேல் அடி அடித்தபடிதான் இருந்தார்கள்.
ஜெருசலேமில் எஞ்சியிருந்த யூதர்கள் அந்த தேசத்திற்கு சொந்தமில்லாதவார்களாகவே படிப்படியாக மாற ஆரம்பித்தார்கள்.
யூதர்களின் தேவாலயம் முற்றாகவே தகர்க்கப்பட்ட நிலையில், யூதர்களின் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் எல்லாம் ஜெருசலேமில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், யூதர்களின் மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு அங்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் காலப் போக்கில் ஜெருசலேமில் எஞ்சியிருந்த யூதர்களில் ஒரு தொகுதியினர் மாதம் மாறவும் தலைப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
யூதர்களின் ஒரே கடவுள் வழிபாடான யாவே வழிபாட்டைக் கைவிட்டு, அன்னிய தெய்வ மற்றும் விக்கிரக வழிபாடுகளை அவர்கள் மேற்கொள்ளும் நிலை உருவானது.
யூதர்களின் கலாச்சாரம், அவர்களது தனித்துவம், எதிர்கால இருப்பு அனைத்துமே அவர்களது தாயகமான ஜெருசலேமில் படிப்படியாக அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது.
இனி யூதர்கள் அவ்வளவுதான் என்றொரு நிலை ஜெருசலேமில் ஏற்பட்டது.
இந்த இடத்தில் உங்களிடம் ஒரு கேள்வி எழலாம்.
எதிர்காலம் என்கின்றதை முற்றாகவே தொலைத்துவிட்டிருந்த இப்படியான ஒரு இக்கட்டான சந்தர்பத்தில் இருந்து யூதர்களால் எப்படி மீள முடிந்தது?
பாபிலோனிய ஆக்கிரமிப்பும், இன அழிப்பிலும், அடிமை வாழ்க்கையில் இருந்தும் யூதர்களால் எவ்வாறு மீள முடிந்தது?
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யூதர்களால் தங்களது இன அடையாளத்தை எப்படித் தக்கவைக்க முடிந்தது?
இந்தக் கேள்விகளுக்கான பதில் எனக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
யூத இனமும், யூத தேசமும் அதுவரை கண்டிராத நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில், புலம்பெயர்ந்த யூதர்கள்தாம் தமது இன அடையாளங்களைப் பேணும் காரியத்தை செய்திருந்தார்கள்.
அதுவும் மிகுந்த இடர்பாடுகளின் மத்தியில், சொல்லமுடியாத நெருக்கடிகளின் மத்தியில், புலம்பெயர்ந்த யூதர்கள் தமது இன அடையாளங்களை பேணுவதில் வெற்றி கண்டார்கள்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இந்தச் சம்பவம் நடைபெற்றது இன்றைக்கு சுமார் 2590 வருடங்களுக்கு முன்னர்.
அந்த நேரத்தில் யூதர்களின் புலப்பெயர்வு என்பது சாதாணமானதாகவும் இருக்கவில்லை.
அடிமைகளாகளாகவே அந்த நேரத்தில் யூதர்கள் புலம்பெயர்ந்திருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் அடிமைகள் எனப்படுபவர்கள், எஜமானர்களால் மிகவும் கொடுரமாக நடாத்தப்படுவார்கள். அடிமைகள் என்பவர்கள் அந்த எஜமானர்களுக்கே சொந்தமானவர்கள்.
அந்த அடிமைகளை அவர்களது எஜமானர்கள் எதுவுமே செய்யலாம்.
அடிக்கலாம். உதைக்கலாம், அவர்களது கைகளை வெட்டலாம், பெண்களானால் தாராளமாக அனுபவிக்கலாம். 24 மணிநேரமும் வேலை செய்யும்படி நிர்பந்திக்கலாம். விரும்பினால் கொலை கூடச் செய்யலாம் யாருமே எதுவுமே கேட்கமாட்டார்கள். கேட்கவும் முடியாது.
இப்படியான ஒரு அடிமை வாழ்க்கையை பாபிலோனில் இஸ்ரேலியர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தால் அவர்கள் தமது இன அடையாளங்கள் அழிந்துவிடாமல் காப்பாற்றினார்கள்.
தமது இன அடையாளங்களைப் பேணி வளர்த்தார்கள்;. தமது மதம் அழிந்துவிடாமல் காப்பாற்றினார்கள்.
தமது அடுத்த சந்ததிக்கு தமது இனத்தின் விடுதலைக்கான பயணத்தை கையளித்திருந்தார்கள்.
கடுமையான வேதனைகள், தாங்கமுடியாத அவமானங்களின் மத்தியில் புலம்பெயர்ந்த மண்ணில் யுதர்கள் முன்னேறினார்கள்.
யூதர்களால் இது எப்படி முடிந்தது?
முதலாவது புலம்பெயர்ந்த யூதர்கள் நாம் அங்கிருந்து எப்படியாவது விடுதலை பெற்று தமது நாடு திரும்பவேண்டும் என்கின்ற எண்ணத்தை எக்காரணத்திற்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டுவிடவில்லை.
தாம் விடுதலை பெற்று தமது நாடு திரும்பவேண்டும் என்பதை அவர்கள் கணவாக கண்டுகொண்டிருந்தார்கள்.
தாம் மீழ முடியாத அடிமைகளாக இருக்கின்றோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், தமது பாரம்பிரிய பூமியான ஜெருசலேம் மனிதர்கள் வாழமுடியாத பிணக்காடாகிவிட்டது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தும் கூட, தாம் தமது தேசத்திற்கு என்றாவது திரும்பியே தீருவோம் என்ற நம்பிக்கையையும், ஓர்மத்தையும் யூதர்கள் கைவிடவேயில்லை.
தம்மால் முடியாவில்லையானாலும் தமது அடுத்த சந்திகளாவது தாயகம் திரும்பவேண்டும் என்று அடிமைகளாக பாபிலோன் கொண்டு செல்லப்பட்ட யூதர்கள் கனவு கண்டார்கள்.
அந்தக் கனவினை நிறைவேற்றுவதில் மிகவும் வைராக்கியமாக இருந்தார்கள். செயற்பட்டார்கள்:
ஆரம்பத்தில் இரகசியமாக மேற்கொண்ட அந்தக் காரியங்களை பின்னர் அரசாங்கத்தின் அனுமதியுடன் பகிரங்கமாகவே செய்யுமளவிற்கு அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
முதலில் எஜமானங்களுக்கு கீழ்ப்படிவுள்ள உழியார்களான நடந்து அவர்களின் நன்பதிப்பைப் பெற்றார்கள்.
அடிமைத்தனத்தில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறி, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடலானார்கள்.
அவர்கள் புலம்பெயர்ந்த தேசத்தை வளர்த்தார்கள். தாமும் சேர்ந்து வளர்ந்தார்கள்.
நிறையச் சம்பாதித்தார்கள்.
சம்பாதித்த பணத்தில் இருந்து புலம்பெயர்தேசத்தில் அடிமைகளாக இருந்த தமது இனத்தவர்களை விடுவித்தார்கள்.
புலம்பெயர்ந்த மண்ணில் நன்மதிப்பைச் சம்பாதித்தார்கள்.
அந்த நன்மதிப்பினை அடிப்படையாக வைத்து, தமது மத அனுஷ்டானங்களைச் செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்கள்.
புலம்பெயர்ந்த தேசத்தில் சமூகமாக வாழவும், செயற்படவும் அவர்கள் ஆரம்பித்தார்கள்.
இவை அனைத்தையும் அவர்கள் ஒரு பக்கம் செய்தபடி, மற்றொரு முக்கிய காரியத்தையும் மறுபக்கம் செய்தபடி இருந்தார்கள்.
அதாவது, தாம் தமது நாடு திரும்புவதற்கான ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு நல்ல நேரம் கனியும்வரை அமைதியாகக் காத்திருந்தார்கள்.
பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
அந்தக் காத்திருப்பு சற்று நீண்டதாக இருந்தாலும், அவர்கள் தமது தேசம் திரும்புவதற்கான அந்த நேரம் ஒரு சந்தர்பத்தில் வந்தது.
அந்த பிராந்தியத்தில் வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டியும், அந்த போட்டியின் விளைவுகளும் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் விடுதலை பெறுவதற்குச் சாதகமாக மாற ஆரம்பித்தது.
சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினார்கள் யூதர்கள்.
விடுதலை பெற்று ஜெருசலேம் திரும்பினார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சம்பவம் இது.
இதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்..
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:

Legg inn en kommentar