கி.மு.586 ம் ஆண்டு பாபிலோனிய அரசன் நேபுகாத் நேச்சரின் தலைமையிலான பாபிலோனியப் படைகளால் சிறைப்பிடித்து பாபிலோனுக்கு கொண்டுசெல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் ஒரு தொகுதியினர் சுமார் 48 வருடங்களின் பின்னர் நாடு திரும்பினார்கள்.
பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நாடு திரும்பும் சூழ்நிலை எவ்வாறு உருவானது என்று பார்க்கின்ற நேரத்தில், உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் வெற்றி கண்டதைக் அறியக்கூடியதாக இருக்கின்றது.
பாபிலோனியர்கள் சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் கொடிக்கட்டிப் பறந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இஸ்ரேலியர்கள் பாபிலோனிய மன்னன் நேபுகாத் நேச்சரினால் ஆக்கிரமிக்கப்பட்டார்கள்.
பாபிலோனியர்களால் சிறைப்பிடித்து கொண்டுசெல்லப்பட்ட யூதர்கள் பாபிலோனினால் ஆக்கிரமிக்கப்பட்ட பல்வேறு நாடுகளிலும் கூட அடிமைகளாக குடியமர்த்தப்பட்டார்கள்.
அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு பாபிலோன் இராஜ்யம் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எவ்வாறு தமது அடிமைத் தளைகளில் இருந்து படிப்படியாகத் தம்மை விடுவித்தார்கள் என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
பாபிலோனில் வீட்டு அடிமைத்தனத்தில் இருந்து யூதர்கள் தம்மை விடுவித்துக்கொண்டாலும், பாபிலோனில் இருந்து முற்றுமுழுமையாக விடுதலையாகி ஜெருசலேம் திரும்புவதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பாபிலோனில் யூதர்கள் படிப்படியாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு முன்னேறிக் கொண்டிருந்த அதேவேளை, தாம் தமது நாடு திரும்புவதற்கான சூழ்நிலை உருவாகும்வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
ஒரு நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் காலம் கனிந்தது.
மத்திய கிழக்காசியப் பிராந்திய அரசியலில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
கி.மு.562ம் ஆண்டு பாபிலோனிய சக்கரவர்த்தி நேபுகாத் நேச்சர் மரணமடைந்தான்.
அவனது மரணத்தைத் தொடர்ந்து பாபிலோனிய சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமிழக்க ஆரம்பித்தது. இராணுவப் புரட்சிகள், பதவிச் சண்டைகள் பாபிலோனியச் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்தது.
இவை ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபக்கத்தில் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் பாரசீக ஆட்சி வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
சைருஸ் சாம்ராஜ்யபதி (Cyrus the Great) தலைமையில் மிகவும் வலுவாக எழுச்சி பெற்ற பாரசீக ராஜயம் அதுவரை உலகம் கண்டிராத மிகப் பெரிய சாம்ராஜயமாக உருவாக ஆரம்பித்தது. அக்காலத்தில் பலம்பெற்றிருந்த மோதியா இராஜ்யம் உட்பட பல தேசங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மிக வேகமாக வளர்ந்து வந்தது.
பாரசீக இராஜயத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி பாபிலோன் இராஜயத்தில் அடிமைகள் போன்று வாழ்ந்துவந்த யூதர்களின் காதுகளுக்கு எட்டியிருந்தது.
பாரசீகம் பற்றியும், பாரசீக மண்ணன் சைரூஸ் பற்றியும் கேள்விப்பட்ட யூதர்கள், இந்த பாரசீகன் மன்னன் ஊடாகவே தமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினார்கள். எதிர்பார்த்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே நடக்கவும் செய்தது.
ஒரு மிகப் பெரும் பிராந்திய வல்லரசாக வளர்ந்து வந்த பாரசீக இராஜயம் ஒரு சந்தர்ப்பத்தில் புதிய பாபிலோன் மீது கண்வைத்தது.
கி.மு.539ம் ஆண்டு பாரசீகப் படைகள் பாபிலோனியாவுக்குள் நுழைந்து அதனைக் கைப்பற்றியது.
அது பாபிலோன் இராஜ்யம் தனது வலிமையை இழந்துகொண்டிருந்த காலகட்டமாகையால், மோதிய மற்றும் பாரசீகப் படைகளுடன் பொருதும் அளவிற்கு பாபிலோனால் முடியவில்லை.
இலகுவாகவே பாபிலோன் பாரசீக இராஜ்யத்திடம் வீழ்ந்தது.
பாபிலோனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜெருசலேம் உட்பட பாபிலோனின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து தேசங்களும் பாரசீக மன்னன் சைருஸ் இனது அதிகாரத்தின் கீழ் வந்தது.
சைருஸ்ஐப் பொறுத்தவரையில் அவன் ஒரு சிறந்த அரசனாகவே இருந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிராந்தியத்தில் இருந்த கொடுரம் மிக்க ஆசீரிய, பாபிலோனிய ஆட்சியைப் போலல்லாது, வெற்றிகரமான ஒரு ஆட்சியையே வழங்கினான்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டினை வெற்றிகொண்டால், அந்த நாட்டை அழிப்பதிலும், கொள்ளையடிப்பதிலும், அந்த நாட்டு மக்களின் கலாச்சாரம், மொழி, சமயம் போன்றனவற்றை அழிப்பதிலும் தமது கவனத்தை செலுத்துவார்கள். ஆனால் சைருஸ் மன்னன் அப்படி அல்ல.
சைருஸ் தான் கைப்பற்றிய நாட்டு மக்களின் சமயம், பாரம்பரியம், , சுதந்திரம் போன்றனவற்றை மதித்து நல்லாட்சி புரிந்தான். அந்த நாட்டு அரசியலையும், ஆட்சியையும் மாத்திரமே தனது கையில் சைருஸ் வைத்திருந்தான்.
மற்றப்பட்ட அந்த அந்த இனக்குழுமங்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் வாழும்படியான சுதந்திரத்தை அவன் தாராளமாகவே வழங்கினான்.
இது யூதர்கள் தமது தாயம் திரும்ப வழி சமைத்துக்கொடுத்தது.
புலம்பெயர்ந்த யூதர்கள் கி.மு. 538ம் ஆண்டு தமது தாயகம் திரும்புவதற்கான அனுமதியை சைருஸ் மன்னன் வழங்கினான்.
இஸ்ரேலியர்களின் முதலாவது நாடு திரும்புதலில் சுமார் 42,360 பேர் ஜெருசலேம் திரும்பியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து பகுதி பகுதியாக இஸ்ரேலியர்கள் தமது தாயகம் திரும்ப ஆரம்பித்தார்.
இதில் குறிப்பிடத் தக்க ஒரு விடயம் இருக்கின்றது.
இஸ்ரேலியர்கள் தமது தாயம் திரும்பினாலும், இஸ்ரேல் தேசம் அதாவது யூதேயா (அல்லது பலஸ்தீனம்) பாரசீக இராஜ்யத்தின் கீழ்தான் இருந்தது.
இஸ்ரேல் சுதந்திர நாடாக இருக்கவில்லை. இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 2500 வருடங்களின் பின்னர்தான் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக மாறியது.
அதுவரை இஸ்ரேலியர்கள் பெயரளவிலான சுதந்திரத்தையும், அடிமை வாழ்வினையும், புலம்பெயர் அவல வாழ்வினையும்தான் அனுபவித்து வந்தார்கள்.
இஸ்ரேலியர்களின் இந்த அவல வாழ்கை பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:
Legg inn en kommentar