இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா மெளனம் சாதித்து வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இந்தியாவும் இணைந்து செயற்பட்டதே இதற்குக் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது இலங்கையில் பெரும்பான்மை சிங்கள சக்தியான இலங்கை அரசால் சிறுபான்மை தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட காலங்களில், அரசியல் நடவடிக்கைகளில் எந்தப் பயனும் தமிழ் மக்களுக்கு ஏற்படாத நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்து தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆயுதப்பயிற்சிகளை வழங்கி இலங்கையில் ஒரு பெரும் போரை தமிழர்கள் சிங்கள அரசின் மீது நடத்துவதற்கு உதவிகளை வழங்கியது இந்தியா தான். ஈழத் தமிழர் போராட்டம் வளர்ச்சி கண்ட நிலையில், இந்தப் போராட்டத்தை வீழ்ச்சியடையச் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்கு உந்து சக்தியாக இருந்து வந்ததுவும் இந்தியாதான். "தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி'' விடுகின்ற செயற்பாடு அமெரிக்காவுக்குத் தான் பொருந்தும். ஆனால், இந்தச் சம்பவங்கள் மூலம் இந்தக் கருத்து இந்தியாவுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டு முதலமைச்சராக இருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தொடக்கம் அ.தி.மு.கவின் தலைவி ஜெயலலிதாவரை ஈழத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது உலகத் தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த அவதூறு எனலாம். அவர்கள் பதவியில் இருந்தாலும் டெல்லி அரசின் பொம்மைகளாகவே செயற்பட்டு வருகின்றனர். ஈழத்தமிழர்களின் மீது அளப்பரிய பாசம் கொண்ட வர்கள் போல், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைத் தேர்தல் காலங்களில் மேடையில் முழங்கித் தள்ளும் இருவரும் உள்ளளவில் டில்லி அரசின் அழுத்தங் களுக்கு உட்பட்டு டில்லி அரசின் குழந்தைகளாக இருக்கின்றார்கள். அதனால்தான் பேச்சளவில் செயல் இல்லாமல் இருப்பது தெரிகிறது. கலைஞர் தனது கதிரை ஆசையில் தமிழ் இனத்தையே விற்கும் நிலைக்குச் சோரம் போய்விட்டடார். இது வரலாற்றில் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. 1987 இல் இந்திய அரசு இலங்கைக்கு அமைதி காக்கும் படையாக வந்து இறங்கியது. ஈழத்தமிழர்களின் மீது தனது கோர முகத்தைக் காண்பித்தது. இன்றும் அந்த ஈழத்தமிழர் வாழ்வில் கறைபடிந்த நாள்களை மறக்க முடியவில்லை. இளம் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்றார்கள். இளைஞர்களைக் கட்டி வைத்துச் சித்திரவதை செய்து கொன்றார்கள். வயது முதிர்ந்தவர்கள் என்று பாராமல் அவர்களையும் சுட்டுக் கொன்றார்கள். இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அந்த நாள்களில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற தமிழ் உணர்வாளர் கூட்டத்தில் பங்கு பற்றிய பிரபல பேச்சாளர் பட்டுக்கோட்டை பாவாணன், ராஜீவ் காந்தி கொலை பற்றி மேடையில் பேசிய போது, பல ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்ற இந்திய அரசின் பிரதமருக்கு ஈழத்தமிழ் மக்கள் மரண தண்டனையை வழங்கியுள்ளனர் என்று பேசினார்.பாவாணனை அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேச விடாமல் தமிழ் நாட்டுப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தக் காலப் பகுதியில் பல மேடைகளில் பாவாணனின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கான தமிழ் நாட்டு மக்கள் ஒன்று கூடுவர். அந்தளவுக்கு அவர் பேச்சு அங்கு பரபரப்பை உண்டு பண்ணும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று "ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்" அமைப் புக் கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப் பான ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாட்சி கங்கூலி கோரியுள்ளார். இந்தியா தற்போது ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக இருக்கிறது. எனவே, இந்த அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எடுக்கப்படும் முடிவில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு இருக்கும். இதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் பி.பி.ஸி. தமிழோசைக்குத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளை அதற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மீனாட்சி கங்கூலி தெரிவித்தார். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்தியா அது தொடர்பில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுத்கட்ட போரின் போது அரச தரப்பினர் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புமே பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். இதற்கான சான்றுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன என்றும் மீனாட்சி கங்கூலி தெரிவிக்கிறார். மோதலற்ற பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் அரச தரப்பால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போர் பகுதிகளிலிருந்து வெளியேற முயன்றவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். தமக்கு முன்வைக்கப்படும் ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று இலங்கை அரசு கூறுமாயின் எது உண்மை. ஒரு வெளிப்படையான விசாரணை மூலம் அதைத் தெரிவிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும். சீனா, ஜப்பான், ரஷ்யா போன்று இலங்கையுடன் நட்புடன் இருக்கும் நாடுகளும் இலங்கை அரசு ஒரு நியாயமான விசாரணையை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களைக் கொன்று அந்த நாட்டு அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழும்பியுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா சபை பொதுச் செய லாளர் பான்கீ மூன் அமைத்த நிபுணர் குழு இதைப் பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளியாகியும் அது பற்றி இந்தியா இன் னும் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் கடைப்பிடிக்கிறது. இதற்கு இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட் டமையே காரணம் என டி.ராஜா குற்றம் சுமத்தியுள் ளார். இலங்கைக்கு ஆயுத பலம், பண பலத்தை அளித்தது இந்தியா. அதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிந்து போரில் வெற்றி பெற் றது. இதனால் இந்தியா இப்போது சர்வதேச அரங்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது. இந்த நிலையில் ஐ.நா சபைக் குழு அறிக்கை மீது இந்தியா இது வரை கருத்துத் தெரிவிக்காதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங் கைக்கு உதவிய இந்தியா, இப்போது தனது நிலையை வெளிப்படுத்தாதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தி யாவின் ஆதரவில்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற அறிக்கைக்குக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந் தியா ஆதரவு அளிக்கிறது என்று வெளியான செய் தியை இந்தியா எந்த சமயத்திலும் மறுக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் இவ்வளவு அதிக அளவில் பொதுமக்கள் இறப்பதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளுமே காரணம் என்றும் அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமை படுகொலைச் சம்பவம் என்று பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிஸ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இலங்கையின் இந்தச் செயலை இந்தியா ஒரு போதும் கண்டிக்கவில்லை. காரணம் இந்தக் கொடுமையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்பதுதான். அரசியல் சட்ட மசோதா இலங்கையில் தமிழர் களை ஒடுக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித் தது என்று "விக்கி லீக்ஸ்" அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் கருத்தை இந்தியா எந்தச் சமயத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வந்துள்ளது. இலங்கைப் பிரச்சினையில் தீர்வு காண இந்தியா எந்த சமயத்திலும் பொறுப்புடன் முயற்சி செய்ய வில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீர்வு காண இந்தியா எந்த சமயத்திலும் பொறுப்புடன் முயற்சி செய்யவில்லை. இலங்கைத் தமிழர் பிரச் சினை தீர அரசியல் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய இலங்கையிடம் தனது செல்வாக்கை இந்தியா பயன் படுத்தவில்லை. இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள உதவிகளை முறையாகச் செயற்படுத்த இலங்கையை இந்தியா உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் படுகொலையில் இந்தியாவும் ஒரு காரணமாக அமைவதால் இந்தியாவையும் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொள்ளுமாயின் ஈழத் தமிழர்களின் நீண்ட நாள் பிரச்சினையில் ஒரு விடிவை ஏற்படுத்திக் கொள்ளும் என்பது உண்மை. |
Ingen kommentarer:
Legg inn en kommentar