எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்திருந்தது. அந்த வேளையில் தமிழர்களின் உரிமைப் போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன. பத்துத் தமிழ் இளைஞர்களைக் கொன்றால் அவர்களில் ஒருவர் நிச்சயம் போராளியாக இருப்பார் என இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்துக்கு அப்போது ஆலோசனை வழங்கியது.
இந்தியாவுக்கு அல்லது இந்திராகாந்திக்கு தண்ணி காட்டும் நோக்குடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஷியா உல்ஹக், அமெரிக்க ஜனாதிபதி றீகன் ஆகியோருடன் நெருங்கிய உறவைப் பேணினார் ஜே.ஆர்.உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் கிரிகெட் அணி சினேக பூர்வ துடுப்பாட்டத்தில் இலங்கை அணியிடம் தேல்வியடைந்த சுவையான சம்பவமும் இந்தக் காலப்பகுதியிலேயே நடைபெற்றது. (எல்லாம் அரசியல் நெருக்கம் அப்படி).ஜே.ஆர். பாகிஸ்தானுடனும், அமெரிக்காவுடனும் நட்புப் பூண்டமைக்கு அடிப்படைக் காரணம் இருந்தது. உனக்குப் பயந்து (இந்தியாவுக்கு) நான் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கமாட்டேன் என்று புதுடில்லிக்குக்கு உணர்த்துவதே அது.
இதே காலப்பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குமாறு ஜே.ஆரை வலியுறுத்தினார் இந்திப் பிரதமர் இந்திரா காந்தி. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக இந்தியப் பிரதிநிதியாக ஜி.பார்த்த சாரதியை இலங்கைக்கு அனுப்பினார் இந்திரா. ஆனால் பார்த்தசாரதி ஜே.ஆருக்கு அழுத்தம் கொடுத்ததை அடுத்து பார்த்தசாரதி தமிழர் என்பதால் இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பாகப்பேசுகிறார். எனவே, அவரை விடுவித்து வேறு யாரையாவது அனுப்புங்கள் என்று இந்திரா காந்தியிடம் கூறினார் ஜே.ஆர். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு றொமேஷ் பண்டாரி அனுப்பப்பட்டார். றொமேஷ் பண்டாரிக்கு விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதித்தமோதிர மொன்றை அன்பளிப்புச் செய்து அவரைத் தனது கைக்குள் போட்டுக்கொண்டார் ஜே.ஆர்.இந்தியாவின் எதிரிகளாக அன்றைய காலகட்டத்தில் விளங்கிய பாகிஸ்தானுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கிய நட்பும் பாராட்டினார்.
இந்தியாவுக்கு அல்லது இந்திராகாந்திக்கு தண்ணி காட்டும் நோக்குடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஷியா உல்ஹக், அமெரிக்க ஜனாதிபதி றீகன் ஆகியோருடன் நெருங்கிய உறவைப் பேணினார் ஜே.ஆர்.உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் கிரிகெட் அணி சினேக பூர்வ துடுப்பாட்டத்தில் இலங்கை அணியிடம் தேல்வியடைந்த சுவையான சம்பவமும் இந்தக் காலப்பகுதியிலேயே நடைபெற்றது. (எல்லாம் அரசியல் நெருக்கம் அப்படி).ஜே.ஆர். பாகிஸ்தானுடனும், அமெரிக்காவுடனும் நட்புப் பூண்டமைக்கு அடிப்படைக் காரணம் இருந்தது. உனக்குப் பயந்து (இந்தியாவுக்கு) நான் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கமாட்டேன் என்று புதுடில்லிக்குக்கு உணர்த்துவதே அது.
ஆனால், அந்த ராஜதந்திரம் தோல்வி அடைந்தது. இறுதியில் இந்தியாவின் அழுத்தத்துக்குப் பணிந்து மாகாண சபைகளுக்கு, ஒப்புக்கு சப்பாணியாக அதிகாரங்களைப் பகிர்த்தளித்தார் ஜே.ஆர்.அப்போதும் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவுமே கேட்காமலிருந்த, வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரங்களைக் கொடுத்து நான் தமிழர்களுக்கு விசேடமாக எதையும் வழங்கவில்லை என்று சுட்டிக் காட்டினார் ஜே.ஆர்.புலிகள் மாகாண சபையை ஏற்க மறுத்ததை அடுத்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராகத் தூண்டி விட்டார் ஜே.ஆர்.
ஜே.ஆரின் பின்னர்
ஜே.ஆருக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிரேமதாசா பிரபாகரனுடன் அண்ணன், தம்பி உறவு கொண்டாடி இந்திய இராணுத்தை வெளியேற்றினார்.புலிகள் பிரேமதாச தேன்நிலவு சொற்ப காலத்தில் முறிவடைந்து மறுபடியும் போர் ஆரம்பமானது.பிரேமதாசவுக்குப் பின்னர் சந்திரிகா தன்னை ஒரு சமாதானத் தேவதையாகக் காட்டிக்கொண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார். வழக்கம் போல் பதவிக்கு வந்ததும் அவரும் புலிகளுடன் பேச்சு நடத்தினார். ஆரம்பகட்டத்திலேயே அது தோல்வியடைந்தது. பின்னர் சமாதானத்துக்கான யுத்தம் ஆரம்பமானது.
ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சியின் போதும், ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின் போதும் செக்கொஸிலேவேக்கியா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவிகளை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது.வெளிநாட்டு உதவிகளைப் பெற்றபோதும் ஜே.ஆர், பிரேமதாச, சந்திரிகா மூவராலும் புலிகளை அழிக்க முடியவில்லை.
நான் பிரபாகனுடன் சரிசமமாக ஒரே மேசையில் அமர்ந்து பிரபாகரனிடம் உமக்கு என்ன வேண்டுமென்று கேட்கப் போகிறேன் என்று ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி பதவிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகிலுள்ள அனைத்துச் சக்திகளையும் ஒன்று திரட்டி எதிரும் புதிருமான நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்றவற்றுடன் ஐ.நா.சபையையும் (பான் கீ மூனை)கைக்குள் போட்டுக் கொண்டு நாற்பதினாயிரம் அப்பாவி பொதுமக்களின் சடலங்களின் மீது ஏறி நின்று விடுதலைப் புலிகளை ஒழித்தார். வன்னியில் யுத்தம் உச்ச கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த உலகுக்கு உரத்துக்கூறி வந்தார்.
எரிச்சலில் உலகம்
இலங்கைத் தமிழர்கள் உட்படச் சர்வதேச சமூகமும் புலிகள் அழிக்கப்பட்டவுடன் மஹிந்த சமஸ்டியை விடக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வுத்திட்டத்தை தமிழர்களுக்கு முன் வைப்பார் என எதிர்பார்த்தனர். அனைவரின் எதிர் பார்ப்புகளுக்கும் மாறாகச் சிங்களப் போரினவாத அரசு (மஹிந்த ராஜபக்ஷ அல்லது ஸ்ரீ லங்கா சுதந் திரக்கட்சி எனக்கூறுவது பொருத்தமற்றது. ஏனெ னில் அனைத்துச் சிங்கள அரசியல் வாதிகளுக்கும் இது பொருந்தும்). ஏற்கனவே இருந்த உரிமை களையும் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பதினெட்டாவது திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஜனாதி பதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவின் கைகளில் ஒப்படைத்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஏற்கனவே இருந்த அதிகாரங்களையும் இப்போது பறித்து விட்டது மஹிந்த அரசு.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்துள்ள சர்வதேச சமூகம் இறுதியில் கையில் எடுத்துள்ள துரும்புச் சீட்டே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை. போர் முடிந்த இந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் உருப்படியான ஓர் அதிகாரப் பகிர்வை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை வெளிவந்திருக்காது. இப்பொழுது ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக தனக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை அரசின் பிரதிநிதிகள் உலகம் முழுவதும் ஓடித்திரி கின்றனர்.
பிசாசின் கால்களில் விழுவதற்கும் தயார்
இவ்வாறு இலங்கை அரசின் பிரதி நிதிகள் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக தமக்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் கெஞ்சுவதன் பொருள் நாங்கள் தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக எந்தப் பிசாசின் காலிலும் வீழ்வோம் என்பதே. இறுதியாக ஜெயலிதாவையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியது இலங்கை அரசு. இந்திய மத்திய அரசின் உதவியுடன் கருணாநிதியின் வாயை அடைத்து விட்டு தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு இப்போது ஜெயலலிதாவின் வாயையும் அடைத்துவிட முயற்சிக்கிறது. ஜெயலலிதாவை ஒருவாறு சமாளித்து விட்டால் மத்திய அரசுக்குத் தண்ணி காட்டுவது சுலபமென இலங்கை அரசு எண்ணுகிறது.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி யும் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கப்போவதில்லை என்பதில் இரு பிரதான கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத் திறப்பு விழாவில் வைத்து ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். தமிழர் பிரச்சினையில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கும் இடமளிக்க மாட்டோம். அத்துடன் தமிழர்களுக்கும் எதுவும் தரமாட்டோம் என்று. தமிழர்களை நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே வைத்திருக்க விரும்புகிறோம். தமிழர் களை அழிப்பதற்கு வேண்டுமானால் யாராவது தாரா ளமாக உதவி செய்யுங்கள். ஆனால் தமிழர்களுக்காகப் பரிந்து பேச முன் வராதீர்கள் என்பதே சிங்கள அரசியல் வாதிகளின் இன்றைய நிலைப்பாடு.
Ingen kommentarer:
Legg inn en kommentar