வடக்கில் சிங்கள ஆதிக்கத்தின் மனோநிலை

 essay இந்தியாவின் தி வீக்என்ட் லீடர் என்ற இணையத் தளத்தில் அதன் செய்தியாளர் கொழும்பில் இருந்து எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனோநிலை யைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர் பகுதி களின் ஊடாகப் பயணிப்பவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.

 தமிழர்களின் பாரம்பரிய தேசமாகவும் தமிழர்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தி நின்றதுமான இந்தப் பிரதேசங்கள் தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.அதாவது தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர்சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
 
 
அத்துடன் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள் சிறு குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அவர்களின் இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை சிங்களமயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங் களைப் பார்வையிடலாம்.  இலங்கையின் வடபகுதிக்கான நுழைவாயிலாக உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது "ஓமந்த" என்ற சிங்கள உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது.ஏ09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர்.
 
ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும்.தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக் கும் பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதா னிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.சிங்கள இராணுவ வீரர்களும் அவர்களது இராணுவ முகாம்களும் தமிழர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன.
 
இலங்கை மக்கள் வாழக் கூடிய 65,619 சதுரகிலோ மீற்றரில் 18,880 சதுர கிலோ மீற்றர் தமிழ் மக்கள் வாழ் கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும்.ஆனால் மே 2009 இல் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7000 சதுர கிலோ மீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்கு உட்படுத்தி யுள்ளனர்.
 
இங்கிருந்த 2500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ் தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதி கமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன.இந்தப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசங்களில் 2500 புத்தர் சிலைகள் உருவாக் கப்பட்டுள்ளன என உள்ளுர் தகவல்கள் தெரிவிக் கின்றன.
 
மன்னார் மாவட்டத்திலுள்ள பிரபல்யம் மிக்க திருக் கேதீச்சர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருக் கேதீச்\ரத்தின் புராதன பெயர் மாதோட்டம் ஆகும்.இவற்றை தமிழர் வாழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இலங்கை அரசு மேற் கொண்டு வருகின்றது.

அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங் கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாசார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல் வேறு விடயங்கள் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.எது எவ்வாறிருப்பினும், இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாக உள்ள தமிழர்களை இது அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். 
 
தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்  வடக்கின் வசந்தம் திட்டத்துக்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.அடுத்தது இத்திட்ட அமுலாக்கலில் முக்கிய இடத்தில் பாதுகாப்புப் படைகள் உள்ளன. பாதுகாப்புப் படையினர் வீதிப் புனரமைப்புப் பணிகளை மேற் கொள்கின்றனர்.
 
புதிதாகக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிக்குளத்தில் இடம் பெற்றுவருகின்றது. மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் இத்திட்டம் மேற்கொள் ளப்படுமானால் இதனை எல்லோரும் வரவேற்பார்கள்.ஆனால் மாறாக 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடு கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இவற்றைவிட, கொக்கச்சன்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும் பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள் ளன. தற்போது கொச்சான்குளம் என்பது கலபோவசெவென'  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே மடு வீதியை அண் மித்து உள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாட சாலைகள் மிகவும் சேதமடைந் துள்ள இந்த நிலையில், இந்தப் பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப் பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப் படுகின்றது.ஆயுதப் படையினரின் அனுமதிகளுடன் தமிழர் பிரதேசங்களில் உள்ள காடு களில் நுழையும் சிங்களவர்கள் காட்டு மரங்களை பெருமளவில் வெட்டிச் செல் வதாகவும் இதனால் காட்டு வளம் நாசமாக் கப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
தமிழர் வாழ் பிரதேசங்களுக்கு வருகை தரும் சிங்கள தொல்லியல் துறை வல்லுநர்கள் வடக்கில் பெருமளவான பௌத்த சிலைகள் காணப்படுவதாகக் கதைவிடு கின்றனர்.இலங்கையின் வடக்குப் பகுதியானது சிங்கள மக்களின் பூர்வீக இடமா எனத் தற் போது எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்டே தொல்லியல் துறையினர் பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.
 
சிங்களத்தால் எழுதப்பட்ட இட அடையாளப்படுத்தும் ஒரு சில பெயர்ப் பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.முல்லைத்தீவு மற்றும் ஏனைய சில பிரதேசங்களில் உள்ளவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.ஆனால் அதேவேளையில் இந்தப் பிரதேசங்களில் உள்ள கடல்களில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.  2009 ஆம் ஆண்டிலிருந்து அரச அதி காரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மக ஜர்களும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்படும் என உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
முன்னர் தமிழ்ப் புலிகளின் நிர்வாகத் தலைமையமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, அளுத்மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.
 
ஏ09 நெடுஞ்சாலையில் உள்ள கன கராயன் குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு  கோசல பெரேரா வீதி, அனுர  பெரேரா வீதி, வணக்கத்துக்குரிய யற்றிராவன விமல தேரர் வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளன.
 
முதல் இரண்டும் யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களா கவும், மூன்றாவது வீதிக்கான பெயர் புத்தபிக்கு ஒருவரின் பெயருமாகும்.இவை எல்லாம் எதனை நோக்கிச் செல்கின்றன? இதற்கான பதிலைக் காலம் மட்டுமே கூறும்.

Ingen kommentarer:

Legg inn en kommentar