வன்னியில் பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
வன்னியில்
பருவமழை ஆரம்பித்து விட்ட தால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை
அனுபவித்து வருகின்ற னர். நிரந்தர வீடுகள் இல்லாத நிலையில் தற்காலிக
கொட்டில்களில் வசித்து வரும் மக்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களை
அனுபவித்து வருகின்றனர்.
குழந்தைப் பிள்ளைகளைக் கொண்ட குடும் பங் கள், நுளம்பாலும், மழைக்
குளிராலும் தம்மைப் பாது காத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தாழ்வான
பகுதிகளில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து இருக்கும் மக்கள் மழை
தொடர்ந்தால் இடம்பெயர வேண்டிய சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த
வருடத்துக்குள் வீட்டுத்திட்டம் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பில் தற்காலிக
கொட்டில்களில் வாழ்ந்த மக்கள் வீட்டுத் திட்டம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த
நிலையில் உள்ளனர்.
தொற்றுநோய்களால் பாதிக்கப்படலாம்
பருவமழை ஆரம்பித்துவிட்டதால் தாழ்வான
பகுதிகளில் தற்காலிக கொட்டில்களில் வசிக்கும் மக்கள் தொற்று நோய்களுக்கு
ஆளாக வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த வசதிகளும் இல்லாமல் காட்டுப்
பகுதிகளில் தற்காலிக கொட்டில் களை அமைத்து வாழ்ந்து வரும் மக்கள்தான்
கூடுதலாகப் பாதிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான தண்ணீர் வசதி, மலசலகூட வசதி
கூட ஒழுங்கான முறையில் கிடைக்க வில்லை. மிக அண்மையில் மீளக்குடியமர்ந்த
புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் எந்தவித அடிப்படை வசதி கூட இல்லாமல்
அந்தப் பகுதியில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
பருவமழை ஆரம்பித்துவிட்டதால் இந்தப்
பகுதி மக்கள் அரசின் உதவி கிடைக்காததால் தொண்டு நிறுவனங்களை எதிர்பார்த்து
நிற்கின்றனர். பல மாதங்களாகத் தறப்பாளின் கீழ் வசித்து வருவதால் தற்காலிக
கொட்டில் கூட கழன்று விழும் தறுவாயில் உள்ளன. இதனால் தற்காலிக
கொட்டில்களைக் கூட மீளப்புனரமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆரம்ப
நாள்களில் தற்காலிகக் கொட்டில்களை அமைப்பதற்கு காட்டு மரங்களை
வெட்டுவதற்குக் கூட அனுமதி இருந்தது. இப்பொழுது அந்த அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதால் தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான மரங்களைக் கூடப்
பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தென்பகுதியில் இருந்து
வருபவர்கள் எந்தவித அனுமதியும் இன்றி காட்டுமரங்களை தறித்துச்
செல்கின்றனர். ஆனால் காலம் காலமாக வாழ்ந்து தற் போது மீளக்குடியமர்ந்த
நிலையில் படையினரின் அனுமதி பெறாமல் ஒரு சிறு துரும்பைக் கூட கையில் எடுக்க
முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித அடிப்படை வசதிகளும்
இல்லாமல் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இது வேதனையை அளிக்கின்றது.
சிங்களவரை மீள்குடியேற்றஅரசு காட்டும் அக்கறை
சிங்கள மக்களை வன்னியில் குடியேற்றம்
செய்வதில் அதிக அக்கறை காட்டி முழு ஈடுபாட் டுடன் செயற்பட்டு வரும் அரசு
வன்னிப் பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் அடிப்படை வசதிக ளைக் கூட
நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? என்று தெரியாமல் அந்தப் பகுதி மக்கள்
துன்பப்படுகின் றார்கள். சகல வசதிகளுடன் வன்னிப் பகுதியில் சிங்கள மக்களை
குடியேற்றும் அரசு தமிழ் மக்களின் அடிப் படை வசதிகளைக் கூட பூர்த்தி
செய்யாமல் உள்ளது. பருவமழை ஆரம்பித்துள்ளதால் தொற்றுநோய் களுக்கு ஆளாக
வேண்டிய சூழலில் மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் தவிக்கின்றனர். பருவ மழை
காலத்தில் ஏற்படப் போகும் நோய்களைக் குணப்படுத்த தூர இடங்களில் உள்ள
மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய சூழலில் அது சாத்தியப் படுமா என்ற
நிலையும் உள்ளது. மழை வரப்போகிறது. மழைவரப் போகிறது என்று பல தடவைகள்
அந்தப் பகுதி மக்கள் வீட்டு வசதிகளைக் கேட்டும் அரச அதி காரிகளிடமும் அரச
சார்பற்ற தொண்டு நிறுவனங்களிடமும் இருந்து எந்தப் பயனும் கிடைக்கவில்லை
வீட்டுத் திட்ட வசதி களைப் பூரணமாக மேற்கொள்ளாமல் அடிப்படை வசதிகளையும்
ஏற்படுத்திக் கொடுக்காமல் எம்மை அரசு கைவிட்டுள்ளது. இது அரசு வன்னியில்
இருந்து முற்றாக மக்களை இடம் பெயரச் செய்வதற்கான ஓர் உத்தியே என்று எண்ண
வேண்டியுள்ளது.
டெங்கு ஒழிப்பு வன்னியில் இல்லை
டெங்கு ஒழிப்புத் திட்டம் என்ற ஒன்று
வன்னி மாவட்டத்தில் இல்லாத நிலையில் நுளம்புகள் பெருக்கம் அதிகரித்து
டெங்கு பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள்
கழிந்த நிலையில் இன்றும் பல இடங்கள் துப்புரவு செய்யப்படாமல் இருக்கின்றன.
இந்த இடங் களில் கைவிடப்பட்ட பாவனைக்கு உதவாத பொருள் கள் பல உள்ளன. இந்தப்
பொருள்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அந்தப் பொருள்களினுள் மழை நீர் தேங்கி
நுளம்பைப் பெருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
அத்தியாவசிய பொருள்களையே பெற முடியாமல்
தவிக்கும் மக்களால் எப்படி வன்னிப் பெரு நிலப் பரப்பில் துப்புரவுப்
பணிகளில் ஈடுபட்டு சுகாதார மான முறையில் சூழலை வைத்திருக்க
முடியும். அடுத்த கட்ட நகர்வு பற்றி எண்ணவும் சிந்திக்கவும் முடியாமல்
இருக்கும் வன்னி மக்களை மழை வந்து பெரும் துன்பத்துக்குள் ஆழ்த்துகிறது.
தமது இருப் பிடங்கள் நிலையான இருப்பிடமாக இல்லாததால் தற்காலிக
கொட்டில்களுக்குள் வெள்ளம் புகுந்து விடும் அபாய நிலை தோன்றியுள்ளது என்று
கூறு கின்றனர். தொண்டு நிறுவனங்கள் முன் நின்று செயற்பட்டு பெரு மழை
வருமுன் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது
முன் ஆயத்த வேலைகளைச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்த இரு மாதத்துக்
குள் பெய்யும் கனமழையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும். மழையில்
இருந்து அந்த மக்கள் காப்பாற்றுவதற்கான முன்னாயத்த வேலைகளை தற்போதே செய்ய
ஆரம்பிப்பதன் மூலம் நவம்பர் மாதம் பெய்யும் கடும் மழையில் இருந்து அந்த
மக்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மழை வந்து பெரும் வெள்ளம் ஓடும்
மட்டும் பார்த்துக் கொண்டிருந்து பின்பு தொண்டு நிறுவனங்கள் தமது உதவிகளை
மக்களுக்கு செய்ய முன் வந்தால் அந்த உதவிகள் போதுமானதாக இருக்காது. எனவே
மழை பெய்து வெள்ளம் ஓடி தற்காலிகக் கொட்டில்களில் வாழும் மக்கள்
இடம்பெயரும் மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் உங்கள் உதவிகளை விரைந்து
செய்யுங்கள். அப்பொழுதுதான் எதிர்கொள்ள இருக்கும் மழையின் பாதிப்பில்
இருந்து அந்த மக்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அரசை எதிர்பார்க்க முடியாது
அரசு அந்த மக்களின் அத்தியாவசிய தேவை
களை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் போது பெரும்மழை வந்து இடப்பெயரும்
மக்களுக்கு எப்படி பெரிதாக உதவிகளை செய்யப் போகிறது என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவி வழங்கவுள்ளதாக அரசு அறிவித்துவிட்டு வெளி நாடுகளிடம் இருந்து நிதியைப்
பெற்று அந்த நிதி வெள்ளப் பாதிப்புக்கு ஒதுக்கப்பட்டுள் ளதாக
அறிக்கைவிடும். பின்னர் அந்த நிதி எங்கு போகிறது என்பதே தெரியாமல் மக்கள்
வெள்ளப் பாதிப்பில் மீளமுடியாமல் தவிப்பது யாருக்குத் தெரியும். வெள்ள
பாதிப்புக்கு இலங்கைக்கு நிதியை வழங்கும் வெளிநாடுகள் முழுமையாக அந்த நிதி
மக்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை பார்க் காததால்தான் வெள்ளத்தால்
பாதிக்கப்படும் மக்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
வெள்ளப் பாதிப்பு, மண் சரிவு ஏற்படும்
தென்பகுதி யில் உடனடியாக விரைந்து செயற்படும் அரசு தமிழர் பகுதியில்
இடம்பெறும் வெள்ளப் பாதிப்பு பற்றி துளியளவு கூட அக்கறை கொள்வதில்லை.
அதாவது போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்
பாதிப்புக்கு கூடுதலாக சர்வதேச நாடுகள் நிதி வழங்குகின்ற போது அந்த நிதியை
முழுமையாகத் தமிழர் பகுதியில் வழங்காமல் தென் பகுதிக்கு வழங்குவது எந்த
விதத்தில் நியாயமாகும்.
தேர்தல்களில் அரசுக் கட்சிகள் தோற்றதைக்
காரணம் காட்டி தமிழ் மக்களின் அபிவிருத்தித் திட்டங்களில் பின்னடிக்கும்
அரசு, ஒரு நாட்டிலும் இடம்பெறாத அரசியல் கோட்பாடுகளை இலங்கை அரசு
கொண்டுள்ளது என்பது இந்த நாட்டின் நன்மதிப்பையே இல்லாமல் செய்கிறது.
இந்திய வீட்டுத் திட்டத்தின் நிலை என்ன?
ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லும்
அரசு தமிழர்களைப் புறந்தள்ளி வைப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. இதன்
காரணமாகத்தான் ஆரம்ப நாள்களில் தமிழர் ஆயுதப் போராட்டம் வெடித்தது என்று
எல்லோருக்கும் தெரியும்.
மீண்டும் தமிழர்களைப் புறந்தள்ளும் அரசு
இந்த நாட்டில் எப்படி அமைதியை விரும்புகின்றது என்று சொல்ல முடியும்.
வன்னியில் வீட்டுத் திட்டத்துக்கு இந்தியா தொடக்கம் சர்வதேச நாடுகள் வரை
நிதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் வீட்டுத் திட்டம் பூரணமாக
முடிக்கப்படாதது ஏன்? வீட்டுத் திட்டம் பூரண மாக முடிக்கப்பட்டிருந்தால்
அந்த மக்கள் மழையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கும்.
வீட்டுத்திட்டம் முழுமையாக
முடிக்கப்படாததால் தற்காலிகக் கொட்டில்களில் வாழும் மக்கள் இந்த மழையில்
பெரும் துன்பங்களை அனுபவிக்கவுள்ள னர். தேர்தல் காலத்தில் ஒரு
குச்சொழுங்கைக்குக் கல்லுப் போட வந்த அமைச்சரால் எப்படி இந்த மக்க ளின்
முழுமையான தேவைகள் பூர்த்தி செய்ய முடியும்.எதிர்வரும் நாள்களில் பெய்யும்
கன மழையில் ஏனைய மாவட்டங்களை விட வன்னி மாவட்ட மக்கள் பெரும் துன்பங்களை
அனுபவிக்கப் போகின் றனர். இலங்கையில் சிங்களவர்களை விட தமிழர்கள் கூடுதலான
துன்பங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றனர். இந்த
மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய் யாமல் இருக்கும் அரசு
எதைத்தான் எதிர்பார்க்கிறது.
Ingen kommentarer:
Legg inn en kommentar