ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இப்போது புதிய காரணம் ஒன்றைக் கூறியிருக்கிறார். கூட்டுக் கடப்பாடுகள் (collective commitments) காரணமாகவே தீர்மானம் நிறைவேறியது என்பதே அவரது வாதம்.
ஐ.நா.
மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இப்போது புதிய காரணம் ஒன்றைக்
கூறியிருக்கிறார். கூட்டுக் கடப்பாடுகள் (collective commitments)
காரணமாகவே தீர்மானம் நிறைவேறியது என்பதே அவரது வாதம்.
இலங்கை மீதான தீர்மானத்தை ஆதரிக்க
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சில நாடுகள் மறுத்திருந்தன; ஆனாலும்
ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்ததால் இந்த நாடுகளும்
வேறு வழியில்லாமல் தீர்மானத்தை ஆதரித்தன, அதனாலேயே அது வெற்றி பெற்றது
என்பதே அவரது வாதம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்
வகிக்கும் நாடொன்றின் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸுக்குத் இந்தத்
தகவலை வழங்கியிருந்தாராம். அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த சில
அரசியல்வாதிகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கவில்லை.
மனிதாபிமானம் தாண்டி இந்த விடயம்
"அரசியல் சார்ந்து' இருந்ததே இதற்கான காரணம் எனவும் பீரிஸ்
அறிவித்திருந்தார். மேலும், உள்விவகாரத்தில் வெளிநாட்டுத் தலையீடு எந்தவொரு
வகையிலும் மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசு சகித்துக் கொள்ளாது என்று இலங்கை
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னான இலங்கை அரசின் நிலைப்பாடு இவைதான் எனில், அதன் அர்த்தம் என்ன?
இலங்கை அரசு ஜெனிவாவில் தனது
நேரத்தையும், வளங்களையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. தவிர, ஜெனிவா சென்ற
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது
தொடர்பாகத் தெளிவான வரையறைகளை இலங்கை அரசு ஒருபோதும் எடுத்திருக்கவில்லை.
ஜி.எல்.பீரிஸா, பெருந்தோட்ட அமைச்சரும்
மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதருமான மஹிந்த சமரசிங்கவா குழுவுக்குத்
தலைமை தாங்குவது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு
எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஜெனிவாவில் தற்போது நிறைவேற்றப்பட்ட
தீர்மானம், தேசிய மீளிணக்கப்பாடு மற்றும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகள்
போன்றவற்றை ராஜபக்ஷ அரசு எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை பொறுத்திருந்து
பார்ப்பது மிகவும் சுவாரஸியமானது.
இலங்கை அரசு, அடுத்த 12 மாதங்களுக்குள்
நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு தெளிவான மூலோபாய
திட்டங்களை வரைந்து கொள்ள வேண்டும். இலங்கை தனது அரசியல் முதிர்ச்சியைக்
காண்பிக்க வேண்டிய பொருத்தமான நேரம் இதுவாகும். ஆனால் இலங்கை அப்படி
நடப்பதுபோன்று தோன்றவில்லை.
இலங்கை மீதான தீர்மானம் "கூட்டுக்
கடப்பாடுகள்' அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
தெரிவித்தமை சில மேற்குலக நாடுகளை விசனப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ராஜபக்ஷ அரசு எவ்வாறு
இந்தத் தீர்மானத்தை ஏற்று அதன் நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, செயற்படப்
போகிறது என்று கூறுவதற்கும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.
அத்துடன் தனது அரசின் பலவீனமான
இராஜதந்திர நகர்வு தொடர்பாகவும், தோல்வியடைந்த கொள்கைகள் தொடர்பிலும்
ராஜபக்ஷ அரசு மன்னிப்பு கேட்பதற்கும் நேரத்தைச் செலவிட வேண்டும்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இதனை அது செயற்படுத்த வேண்டும்.
ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவோ
எதிர்மாறாகச் செயற்படுகிறார். மேற்குலகின் பக்கச் சார்பான ஊடக அறிக்கைகளால்
தனது அரசு பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்லவே அவர் அதிக நேரத்தைச்
செலவிடுகிறார். ஊடகங்கள் இவ்வாறான கருத்துக்களை, காணொலிகளை எப்போது
வெளியிடத் தொடங்கின என்பதைக் குறிப்பிட அவர் வசதியாக மறந்துவிடுகிறார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை
மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறாது தட்டிக்கழித்த
அவற்றுக்கான தண்டனைகளை வழங்க முன்வராத போதே ஊடகங்கள் சிறிலங்கா விவகாரம்
தொடர்பான உண்மைகளை வெளியிடத் தொடங்கின.
ராஜபக்ஷ அரசு ஆரம்பத்திலிருந்தே
உறுதியற்ற, தெளிவற்ற விதத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதால்,
தற்போது அதனால் நடைமுறை யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
இலங்கை மீதான தீர்மானத்துக்கு 40
நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இதன் மூலம் அவை எத்தகைய நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை
மீறல்கள் தொடர்ந்தும் கவனத்தில் எடுக்கப்படும் என்பதையும் குறைந்தது மார்ச்
2013 வரையாவது இது தொடர்பில் பேரவையின் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தும்
என்பதை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளிப்படுத்துகின்றது.
மார்ச் 2013இல் பேரவை 22 ஆவது
கூட்டத்தொடரை நடத்தும்போது மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் ஆணையாளர்
நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
இலங்கை அரசு நிறைவேற்றியபோது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் அதற்கு எவ்வாறு
உதவியது என்பதை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிப்பார்.
இந்தத் தீர்மானத்தின்படி, ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையகமானது இலங்கை அரசின் அனுமதியுடனேயே உதவ முடியும். அப்படி
இருந்த போதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் மேற்கு நாடுகளின்
சதி, மனித உரிமைகள் சபையின் குறைபாடு தொடர்பாகத் தொடர்ந்து விமர்சித்து
வருகின்றது.
அத்துடன் எந்தவொரு வெளிநாட்டு
உதவிகளும் தனக்கு தேவையில்லை என்று இலங்கை அரசு வெளிப்படையாகவும்
தெரிவித்து வருகின்றது. இந்தத் தடவை ஜெனிவா தீர்மானத்தில்
குறிப்பிடப்படாவிட்டாலும் கூட, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாது
இழுத்தடிக்கும் போக்கை இலங்கை அரசு தொடர்ந்தால் அனைத்துலக சமூகம் தனது
தலையீட்டை மேற்கொள்ளும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ராஜபக்ஷ அரசு, ஜெனிவா தீர்மானத்தை அதிக
சிரத்தையுடன் செயற்படுத்தாவிட்டால் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில்
தனக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது எனக் கருதுகின்றது.
ஆனால் ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை ஏற்றுச் செயற்படாவிட்டால் இலங்கைத்
தீவில் வாழும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் வன்முறைகளைச் சந்திப்பதுடன்,
சிங்களத் தேசியவாதம் மேலும் தீவிரம் பெறும். அத்துடன் ஐ.நாவின் பல்வேறு
அமைப்புக்களின் அழுத்தங்களுக்கும் தொடர் விளைவுகளுக்கும் முகங்கொடுக்க
வேண்டிவரும்.
தீர்மானத்தை ஏற்றுச் செயற்படும்
பட்\த்தில், ராஜபக்ஷவால் தனது அதிகாரத்தை மேலும் அதிகரிக்க முடிவதுடன்,
மிகச் சிறந்த ஆட்சியாளராகவும் அவர் மதிக்கப்படுவார்.
அதேவேளை, இலங்கை அரசு தொடர்ந்தும்
\ட்டங்களை மதிக்காது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்காது,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாது தான்தோன்றித்தனமாக
செயற்படுமிடத்து, போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின்னர், தற்போதும்
உச்சரிக்கப்படும் "சுயாதீன சர்வதேச விசாரணை''
என்பதை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது.
G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2011
Ingen kommentarer:
Legg inn en kommentar