தன் கணவனிடமோ அம்மாவிடமோ கூட இதற்கு முன்னர் எப்போதுமே சொல்லாத கதையை அவள் என்னிடம் சொல்லத் தொடங்கினாள்.
பிரான்ஸிஸ் ஹரிஸன். பிபிஸியின்
முன்னாள் வெளிநாட்டுச் செய்தியாளர். இலங்கையில் 2000 முதல் 2004 வரை பிபிஸி
நிறுவனத்துக்காகப் பணியாற்றி யவர். 46 வயது.
பாகிஸ் தான், மலேசியா, பங்களாதேஷ்,
ஈரான் ஆகிய நாடுகளிலும் செய்தியாளராகப் பணியாற்றியவர். இலங்கைப் போரில்
பாதிக்கப்பட்டவர்களது கதைகள் அடங்கிய அவரது "சாவுகளை இன்னும் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்' என்ற நூல் இந்த மாத ஆரம்பத்தில் லண்டனில்
வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும்
கூட பாதிக்கப்பட்ட பலரது வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு
செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு கதையே இது.
என்னிடம் இருந்த தெல்லாம் கிழக்கு லண்டனிலுள்ள ஒரு முகவரி மட்டுமே.
அந்த நேர்காணலை, கோர்வைத் தொடரான சட்டவாளர்களும் மதகுரு ஒருவருமே ஏற்பாடு
செய்திருந்தார்கள்.
இன்னும் கூட எனக்கு அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் தெரியாது.
நிலத்துக்கு "டெரஸ்' போடப்பட்ட வீட்டின், ஒடுக்கமான பின் அறை ஒன்றில்
நாங்கள் அமர்ந்திருந்தோம்.
நான் அந்தப் பெண்ணுக்கு முன்பின் அறிமுகமில்லாத நபர். ஆனாலும், தன்
கணவனிடமோ அம்மாவிடமோ கூட இதற்கு முன்னர் எப்போதுமே சொல்லாத கதையை அவள்
என்னிடம் சொல்லத் தொடங்கினாள்.
அதற்குப் பின்னர் என்னை அவள் மீண்டும் பார்க்க விரும்பவே இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
மணிமொழி, நான் அவளை அப்படித்தான் அழைக்கிறேன். இலங்கைத் தமிழர்.
பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கோரியிருப்பவள். கொழும்பிலேயே வளர்ந்தாள்.
தமிழ்ப் புலிக் கிளர்ச்சியாளர்களுக்கும் சிங்களவர்களால் மேலாதிக்கம்
செய்யப்படும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான போர்ப் பின்புலம் அவளது
வாழ்க்கையின் ஆரம்பத்தில் தூரத்திலேயே இருந்தது.
அவளது குடும்பம் தமிழ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தது. ஆனால், அவள்
முரண்பாடு அதிகமான (சண்டைகள் நடந்த) பகுதிகளில் இருந்து வந்தவள் அல்லள்.
அதேநேரம், இத்தகைய சூழலில் ஒருவர் கொண்டிருக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு
அவளிடமும் இருந்தது.
2010ஆம் ஆண்டு மே மாதத்தின் ஒருநாளில் அவளது வாழ்க்கையே முற்றிலுமாக
சிதைந்து போனது. அந்த நேரத்தில் ஆயதங்கள் அடங்கிப் போய் இருந்தன.
இலங்கை கிட்டத்தட்ட அமைதியாக இருந்தது. பொலிஸார் மணிமொழியின் வீட்டுக்
வந்தார்கள். அவளது கணவனைத் தேடி அவர்கள் வந்திருந்தார்கள். அவரோ
வேலைக்காகப் பயணப்பட்டிருந்தார்.
அவளது கணவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஒரு குடும்பத்தில்
இருந்து வந்தவர். பொலிஸாருக்கு அவரை விசாரிக்க வேண்டியிருந்தது. அவர்கள்
மணிமொழியை இழுத்துச் சென்று "வெள்ளை வான்' ஒன்றினுள் தள்ளினர்.
அவளது 16 மாதக் குழந்தை அவளது தாயாரிடம் விடப்பட்டது. பொலிஸார் அவளை
அடித்தார்கள்; அவளிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், நள்ளிரவுக்குப்
பின்னர் நடந்த விடயம் அளவுக்கு பொலிஸார் அடித் ததையோ விசாரித்ததையோ அவள்
ஒரு பொருட்டாகக் கொள்ளவேயில்லை. சில சந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்காக
அவள் ஒரு குடிமனை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். பின்னர் அறை
ஒன்றுக்குள் தள்ளிப் பூட்டப்பட்டாள். அடுத்த அறையில் பொலிஸார் தொடர்ந்து
குடித்துக் கொண்டிருந்ததையும் சிங்களத்தில் பாடிக் கொண்டிருந்ததையும் அவள்
கேட்டாள்.
கதிரை ஒன்றில் கைவிலங்கிட்டு பிணைத்துவிட்டு இரு பொலிஸார் மணிமொழியை
வன்புணர்வு செய்தார்கள். அவள் அப்போது 40 நாள்கள் கர்ப்பமாக இருந்தாள்
என்று அவர்களுக்குத் தெரியாது. அவளுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது.
"நீ எதையாவது சொன்னால் அல்லது யாரிடமாவது சொன்னால் உன் கணவனைக்
கொல்வோம்; உன்னையும் கொல்வோம். இங்கே எதுவுமே நடக்கவில்லை. புரிகிறதா
உனக்கு?'' அவர்கள் எச்சரித்தார்கள். அவளைக் கொண்டு வந்ததுபோலவே மீண்டும்
பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே, பரவியிருந்த இரத்தத்தை
துடைப் பதற்கு துவாலைகளை மிகச் சாதாரணமாகக் கொண்டு வந்து கொண்டுத்தார்கள்
சிங்களப் பெண் பொலிஸார். அவர்களுக்கு மணி மொழியின் நிலைமை ஆச்சரியத்தைக்
கொடுக்கவேயில்லை.
அந்த தடுப்பு அறையில் (செல்) மேலும் இரு இளம் பெண்களும் இருந்தார்கள்.
அவர்களும் இதே மாதிரியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்பது
தெளிவாகவே தெரிந்தது அவளுக்கு.
மணிமொழியின் கணவன் பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் அவள்
விடுவிக்கப்பட்டாள். பதிலுக்கு அவர்கள் அவனைச் சித்திரவதை செய்தனர்.
மணிமொழி இரு தடவைகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றிருக்கிறாள். ஆனால்,
குழந்தையைப் பார்த்ததும் அதனைக் கைவிட்டிருக்கிறாள். அவளுக்கு என்ன
நடந்திருக்கும் என்பதை அவளது குடும்பம் உய்த்துணர்ந்து கொண்டது.
கற்பழிப்பு எனப்படும் பாலியல் வன்புணர்வு பற்றிய தமிழ்ச் சமூகத்தின்
மனவடு (அல்லது உளத்தாக்கம்) ஆழமானது; கடுமையானது. அதிலிருந்து ஒரு பெண்
மீள்வதற்கு தற்கொலையே கௌரவமான ஒரே வழியாக பொதுவாகக் கொள்ளப்படுகிறது என்பது
அதிர்ச்சிகரமானது.
கொடுமையில் இருந்து தப்பிப் பிழைப்பவர்களிடம் காணப்படும் இந்த வெட்கம் இரண்டாவது வகையான துன்புறுத்தலை உருவாக்குகிறது.
லண்டனில் இருக்கும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த யாராவது, தான்
வன்புணர்வு செய்யப்பட்டதைத் தெரிந்துகொண்டால், பின்னர் அவர்கள் தன்னைப்
பற்றித்தான் கிசுகிசு கதைத்துக் கொண்டிருப்பார்கள் என்று மணிமொழி மிகக்
கடுமையான அச்சம் கொண்டிருக்கிறார்.
நான் தனியாக வந்தால் மட்டுமே என்னைச் சந்திப்பேன் என்றுகூட அவர்
என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் ஒரு பெண் மொழிபெயர்ப்பாளரைக்கூட
அழைத்து வரவேண்டாம் என்று எனக்கு இறுக்கமான அறிவுறுத்தல்
தரப்பட்டிருந்தது.
நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மணிமொழியின் கணவர் புத்திசாலித்தனமாக
இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருவதற்காக வெளியே சென்றுவிட்டார். நாங்கள்
எது பற்றிப் பேசுவோம் என்பது அவருக்குத் தெரியும். இந்த விடயங்களை
வெளிப்படுத்துவது என்று அவள் எடுத்த முடிவுக்கு அவர் ஆதவளித்தார். ஆனால்
அத்தகைய கணவனிடம்கூட மணிமொழி இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை.
இப்போதும் ஒவ்வொரு ஆண் மகனைப் பார்க்கும் போதும் தான் நடுங்கிச்
சாகிறாள் என்று மணிமொழி கூறுகிறாள். இப்போதும் தன் சொந்தக் கணவனின்
தொடுகைகூட அவளுக்கு வேண்டாததாக இருக்கிறது.
லண்டனுக்கு மாணவர் நுழைவிசைவு (விஸா) எடுத்து வருவதற்காக மணிமொழியும்
அவளது கணவனும் தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள்.
இவர்கள் இங்கே அரசியல் அடைக்கலம் கோருகையில், அங்கே கொழும்பில்
இவர்களது வீட்டுக்கு தொடர்ந்தும் இலங்கைப் பொலிஸார் சென்று
கொண்டிருக்கிறார்கள். அவளது கணவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக
மணிமொழயின் வயதான மாமனாரைக் கூட அவர்கள் மூன்று மாத காலம் தடுப்பில்
வைத்திருந்துள்ளார்கள்.
2009இல் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இலங்கையில் எந்த ஆபத்தும்
இல்லை, அங்கு பாதுகாப்பாக இருக்கலாம் என இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும்
வாதிட்டு வருகின்றார்கள். அரசியல் அல்லது ஆயுதப் பிணக்கு குறித்த பின்புலம்
உள்ளவர்களுக்கு மட்டுமே ஆபத்து உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தமிழர்களுக்கு எதிரான பரந்த வன்முறைகள் இலங்கையில் நிறுத்தப்படவேயில்லை என்பதை மணிமொழியின் கதை தெளிவாக்குகின்றது.
போர் முடிந்த சமயத்தில், கைகள் கட்டப்பட்ட, அரை நிர்வாணமான,
மார்பகங்கள் வெளியே தெரியத்தக்க, இறந்த பெண்களின் படுபயங்கரமான
ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகள் இணையத்தளங்களில் காணப்பட்டன.
அவை தமிழ்ப் பெண் போரளிகளினுடையவை. அவற்றில் சிப்பாய்களால் கூறப்ப
டும் கருத்துக்கள், பாலியல் வன் முறைகள் நடந்துள்ளன என்று உறுதியாகப்
பரிந்துரைக்கின்றன.
போரில் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளிகள்தான் வன்புணர்வுகளுக்கு
உள்ளாக்கப்பட்டார்கள் என்றில்லை. மணி மொழியைப் போன்ற குடும்பப் பெண்கள்,
அம்மம்மாமார், பெண் உதவிப் பணியாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்களின்
மனைவிமார், பாதுகாப்பு என் னும் எதிர்பார்ப்புடன் வெளிநாடு களுக்குத்
தப்பிச் செல்ல முயலும் பெண்கள் ஆகியோரும் இதேபோன்று வன்புணர்வுக்
கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, லண்டனை நோக்கி அவர்கள் பயணப்பட்டாலும்கூட அவர்கள்
பாதுகாப்பாக இருப்பது மிகக் கடினமானதே. சட்டநடவடிக்கைகளுக்கான ஆதாரங்கள்
அவர்களிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் புகலிடக் கோரிக்கைகள்
நிராகரிக்கப்படக்கூடும்.
அகதிகள் சபையின் அண்மைய ஆய்வின்படி, அதனுடைய செயல் திட்டங்களை நாடும்
மூன்றில் ஒரு பெண் இலங்கையராகவே இருக்கிறாள். அதனடிப்படையில், அவர்களில்
கிட்டத்தட்ட எல்லோருமே துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் அல்லது
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களில் அரைவாசிப் பேரின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள்
லண்டனில் நிராகரிக்கப்படவே செய்கின்றன. இவ்வாறு அரசியல் தஞ்சம்
நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுபவர்கள் சித்திர வதைகளை
எதிர்கொள்கிறார்கள் என்பதை "சித்திரவதையில் இருந்து விடுதலை' மற்றும் "மனித
உரிமைகள் கண்காணிப்பகம்' போன்ற அமைப்புக்கள் ஆவணப் படுத்தியுள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் தாமும் இலங்கைக் குத் திருப்பி
அனுப்பப்படலாம் என்ற அச்சத்துடன் நிலையற்ற தன்மையிலேயே வாழ்கிறார்கள். தமது
துயரக் கதைகளை அவர்கள் சட்டவாளர்கள் முன்னும் குடி வரவு அதிகாரிகள்
முன்னும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் குடும்
பத்தினரிடமும் நண்பர்களிடமும் அவற்றை மறைத்துவிடுகிறார்கள். சில பெண்கள்
உளவள ஆலோசனை நிலையங்களுக்குச் செல்லக்கூட அஞ்சுகிறார்கள்.
ஏனெனில் அங்கு தன்னைக் எந்தவொரு தமிழ்ப் பெண்ணா வது கண்டு விட்டால்
ஏன் தான் அங்கு வந் தார் என்பதை அவர் புரிந்து கொண்டு விடுவார் என்பதால்.
அது ஒரு மிகத் தனிமையான வாழ்வு.
தமிழில்: ரேணுபிரேம்
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar