பலமான
பாரிய யானை இருந்தாலும் சைத்திரியக் குணம் கொண்ட சிங்கமே காட்டிற்கு ராஜா
என்பது மரபும் இயல்புமாகும். மேற்கைத்தைய முதலாளித்துவ போதனைகளிற் பல ,
ஒடுக்குமுறைக்கானது என்றாலும் அவர்களது “லையன் கிங்” மேற்கோள் உதாரணம்
தலைமைத்துவத்திற்கு உகந்ததாகும்.
மெலியோரை வலியோர் வாட்டக் கூடாதென்பதற்காக
எழுந்ததே ஜனநாயகம். வலியோரை அகற்றிய பின்னர் “ஒரே இன ஜனங்களிடையே” உள்ள
நல்ல முடிவுகளில் ஒன்றைத் தெரிவதற்கு கொண்டு வரப்பட்டவையே தேர்தலும்
வாக்கெடுப்புமாகும்.
இதனை கிரேக்க மற்றும் சுவிஸ் பிரித்தானிய ஜனநாயக மரபுகளின் சிந்தனைப் போக்குக்களை ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம். பெரும்பான்மையின்ரையும் சிறுபான்மையினரையும் வைத்துக் கொண்டு சிறுபான்மையினரிற்கான உரிமைகளிற்கு வாக்கெடுப்பு நடாத்த ஜனநாயகத்திற்கு இனக் கொலை வெறி கிடையாது.
மாம்பழமா? பலாப்பழமா? வாழைப்பழமா? என்பதற்கு தேர்தல் மட்டுமல்ல சர்வ ஜன வாக்கெடுப்பே நடத்தலாம். ஆனால் அன்னாசியை தமிழரிற்கு கொடுப்பதா அல்லது நச்சுக் கனியை கொடுப்பதா என்று சிங்கள மக்கள் மத்தியில் ஒழுங்காக தேர்தல் நடாத்தினாலும் அது ஜனநாயக விரோதமானதே. 13 ஐத் நீக்க தேர்தல் வைப்பது ஜனநாயகமாகாது. அங்கு தேர்தல் மட்டுமே ஜனநாயகமாகிறது.
அதன் நோக்கம் ஜனநாயகமானதல்ல இன நாயகமானது. இதனாற் தான் , ஏதற்கும் வாக்கெடுப்பு நடாத்த முடியாது என்பதும் ஜனநாயக விழுமியமாகவுள்ளது. . எங்கு யார் மத்தியில் தேர்தல் என்பதும் ஜனநாயகம் தான்.
இவற்றை எல்லாம் கருதாது தமிழரிற்கு விரோதமான அனைத்தையும் பாராளுமன்றத்துள் தள்ளி வாக்கெடுப்பு நடாத்தியதே சுதந்திர இலங்கையின் வரலாறாகும். இதை உலகம் உணரும் தறுவாயில் புலம் பெயர் தமிழர்களின் வாயில் வரும் கோரிக்கைகள் இவ்வாறான கருத்துக்களை வெளிக் கொண்டு வருவதாகவும் , உலகுடன் இசைவடைந்து மோதகம் என்பதை கொளுக்கட்டையாக கேட்கும் தன்மை கொண்டனவாக வெளி வர வேண்டும்.
இதற்காகவே , எந்தப் புலம் பெயரந்த தமிழர்களின் வாதங்களும் கோரிக்கைகளும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் 1972 அரசியலமைப்பு மோசடியையும் தொட்டதாக இருந்தால் அது விவேகமானதாக இருக்கும். இதில் முதலாவதில் ஜனநாயகமும் இரண்டாவதில் சட்ட நீதியும் தொடர்புபட்டுள்ளன.
இதை விடுத்து உலகே கை விட்டு விட்ட சுய நிர்ணயத்தை , ஐ நாவே தனது இலக்குகளாக வைத்திருந்து விட்டு நீக்கி விட்ட புதிய தேசங்களிற்கான வாய்ப்பை இன்றைய ஐ நாவின் செயலாளரும் சர்வ தேசமும் வலியுறுத்தும் போர்க் குற்ற விசாரணையோடு இணைப்பது பான் கீ மூனை மகிந்தவிடம் மீண்டும் புலம் பெயர் தமிழர் தள்ளி விடுவதற்கு ஒப்பானதாகும்.
இப்படித்தான் முன்பு இந்தியாவையும் நாங்களான தள்ளிவிட்டோமா? ஏன்பது பற்றி இன்னமும் கலந்துரையாடப் படாத நிலையில் நாம் நமது போட்டி அரசியலைத் தொடர்கிறோம். உலக அரசியல் பொருளாதார போரியல் சம கால நிலைகளை வைத்து எதையும் பேசுவதாகவோ செய்வதாகவோ இல்லை. தொடரும் மண் பறிப்பையும், சிறையில் வாடும் போராளிகளை விடுவிப்பதையும் விட்டு விட்டு எந்தக் கோரிக்கையை யார் முன் வைத்தாலும் அது தர்மமாகாது.
இதனாற் தான் ஒரு ஒழுங்கான ராஜீக விவேகமுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்பு தேவை என்பது வலியுறுத்தப்பட்டு வந்தது. இவர்களின் பக்குவமற்ற வசனங்கள் , போர்க் குற்ற வாய்ப்பையும் பின் தள்ள இடமுண்டு. உலகம் ஈழத் தமிழரை மறக்கிறார்கள் என்ற ஓலத்தின் மத்தியில் இப்படி ஒரு சுய நிர்ணயக் கோரிக்கையா? இது தேவையானது ஆனால் விவேகமானதல்ல.
இதை உலகமும் ஐ நா வும் ஏற்க இடமே இன்று வரை இடமில்லை. தவிர, இன்றைய ஈழத் தமிழர் நிலையையும் , மண் பறிபோகும் ஒவ்வொரு நொடியையும் சீனாவின் சிங்களக் குடியேற்றத்தையும் கருத்திற்கொள்ளாத கொள்கை வாதமிது. இதையே துர்விவேகம் என்றனர் நம் முன்னோர்.
அரசியல் , பொருளியல் போன்ற ஒரு சமூக விஞ்ஞானம் . அதில் இயற்கை விஞ்ஞானங்கள் போல கணிக்கச் சூத்திரங்களோ வாய்ப்புப் பார்க்க ஆய்வு கூடமோ கிடையாது. உலகமும் சமூகமுமே அதன் களம். இங்கு பரிசோதணைகளிற்கு வாய்ப்பே இல்லை. அதனால் கலந்துரையாடலும் கருத்து வெளிப்பாடும் அதன் விளைவான புதிய கருத்துருவாக்கங்களே இதன் தளம்.
83 ஆடி அடியுடன் கொதித்தெழுந்தவர்கள் எல்லாம் எப்படியாவது எதையாவது செய்து இனத்தைக் காக்கவென படகுகளில் ஏறினர். அங்கே தியாகம் அர்ப்பணிப்பு வேகம் எல்லாம் இருந்தன. இல்லாமல் போனது விவேகமும் அதற்கான கலந்துரையாடலுமே.
போய்ச் சேர்ந்த முகாம் தான் அவர்களது கொள்கையானதே ஒழிய கொள்கை எவரையும் எங்கும் கொண்டு போயச் சேர்க்கவில்லை காரணம் தமிழர் இனக் கொலையை தடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் யாரும் சிந்திக்கவில்லை.
அரசே பகிரங்கமாக அடிக்கிறது இனி தற்காத்துக் கொண்டேயாகவேண்டும் அதற்கான பயிற்சி ஆயுதம் ஆகிய இரண்டுமே தேவையாகத் தோன்றியது 83 இல் நாங்கள் ஆறுதலாக இருந்து மந்திராலோசனை நடாத்த தவறிவிட்டோம்.
2013 ஆகப் போகிறது நாம் கூடி இன்னமும் ஆலோசிக்கவில்லை.
தனியாக இருந்த படித்து முடிக்க மட்டுமே நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். கூட்டாக இருந்து பேச எங்களுக்குத் தெரியாது
வாதிட மட்டும் எங்களிற்குத் தெரியும் ஒரு கலந்துரையாடலில் பங்களிப்புச் செய்ய நமக்கு அடித்துப் போட்டாலும் வருவதாகவில்லை.
தவறுகளை ஏற்கவும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் நாம் முயல்வதேயில்லை.
ஒரு சிறந்த வழக்கறிஞன் வழக்கை தோற்கடிக்க சட்டப் புத்தகங்களை மட்டும் புரட்டிக் கொண்டிருக்க மாட்டான்.
அதை விசாரித்து தீர்ப்பு வழங்கவுள்ள நீதிபதி யார்? அவர் எவ்வாறு இந்த வழக்கைப் பார்ப்பார்? ஈற்றில் அவரது முடிவு எவ்வாறு அமையும் என்பதை வைத்தே அதற்கேற்ப தனது வாதப் பத்ம வியூகத்தை வகுப்பான். நம்மிடம் விய+கம் மட்டுமல்ல வெறும் ஊகம் கூடக் கிடையாது.
பிரிவினையை ஐ நா வே கை விட்டு பல காலமாகிவிட்டது. அது தோற்றுவிககப்பட்ட போதிருந்து புதிய தேசங்களிற்கான அங்கீகார நிலையை ஐ நாவே இரத்துச் செய்து விட்டது. எனவே உலகம் பிரிவினையை தானாக தனது நன்மைக்காக ஏற்படுத்தினால் அன்றி அனுமதிக்காது.
அங்கீகாரம் அதற்கான அரசியல் அதற்கான சர்வ தேச நிலை பற்றி யாருமே சிந்திக்கவில்லை. அன்று எழுந்த இனம் முள்ளிவாய்க்காலுடன் பள்ளி கொண்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டன.
தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ஐ நா அலறுகிறது …… கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்க ….. அதை விசாரணையாக்க தேவை பலமான ஒரு “புலம் பெயர் கட்டமைப்பே”
அதற்காக , எதைக் கூறினாலும் குற்றங் கண்டு பிடிக்கும் சிறீ லங்காவின் முன் கருத்து வெளிப்பாட்டு வாக்கு மூலத்தில் அவதானம் அதிகம் தேவை. போர்க் குற்ற விசாரணையைக் கை விட முடியாது என்பதை விட 58, 77 எனத் தொடங்கி 83 ஆடியில் விழுந்த ஆட்சியின் அடி உச்சமானது 2009 இல். இந்தக் கொலை வெறியை கட்டுப்படுத்தவாவது ஒரு சர்வ தேச விசாரணையும் பொறி முறையும் தேவை.
58 ,77 இல் எல்லாம் பதிற் தாக்குதலாக இன அழிப்பு தொடங்கவில்லை. மங்கச் செய்த சிங்களச் “ஸ்ரீ” யைத் தொடர்ந்தது 58. பொங்கிய தமிழைப் பார்த்து வாள் ஓங்கியது 77. மரணச் சனியானது 2009 மே. இந்த இன அழிப்பை ஐ நா வே நிறுத்த வேண்டும். இதை யாரும் தடுக்கக்கூடாது. ராகூல் காந்திக்கும் பிரியங்காவிற்கும் மட்டுமல்ல ஈழத் தமிழரிற்கும் வேண்டும் நியாயம். இப்படி எதையாவது கோர்த்திருக்கலாம். இதற்கு அன்ரனும் இல்லை - அமுதரும் இல்லை.
இனக் கலவரம் எனப்பட்ட ஒரு தரப்பின் வலிந்த தாக்குதலின் எதிர் விளைவு தான் தமிழ் இளைஞரின் ஆயுதப் போராட்டம்.
அது சமனாகவும் நேர் எதிரானதாகவும் வளரந்து சிறீ லங்காவின் கட்டுநாயக்கா முகட்டில் ஏறி , அரசிலும் உயர்ந்த போது சமாதானம் பேசுவதாக நடித்துக் கொண்டு , அரச படைகள் கையை உயர்த்த கையை நீட்டிக் கொண்டு வந்த ஜீ எல் பீரீஸ் இன்று என்ன பேசுகிறார்?
அட வெங்காயங்களே! நடியுங்கள் என்றால் கொடியை கை விட்டவர்கள் கொள்கையை கை விட்டவர்கள் எனகிறார்கள் இந்த வெற்று வெங்காயங்கள்.
நடப்பதை பிறகு பார்க்கலாம் உலகு நடாத்த முயல்வதற்கு அனுசரணையாக பேசுங்கள் இன்றென்றால் யாருமே புரிந்து கொள்வதாக இல்லை. பசிக்கிறது என்று ஒரு பிள்ளை அழலாம். கேக் வேணும் என்று அழுதால் யார் தான் கவனிப்பார்கள்? முதலில் பாணையாவது பெறு.
போதியளவு அறிவும் ஆதரவும் இன்றி ஆழ்ந்து கொண்டிருக்கிறது புலம் பெயர் தமிழர் அரசியல் ஓடம்.
ஈழம் கேட்கும் காலமல்ல இது நியாயம் கேட்கும் நேரமிது.
நியாயம் பிறந்தால் எல்லாம் பிறக்கும்.
13 இற்கே அவர்கள் அஞ்சுவது இதனாற்தான்.
மகிந்தவின் பொங்கு சனி முடிவிற்கு வந்தாயிற்று. இனி நவம்பரின் பின் மங்கு சனி தான். மரணச் சனிக்கு காலமுள்ளது.
அப்பலோ 13 ஐ மகிந்த ஏவினாலும் சரி , தடுத்தாலும் சரி இரண்டுமே ஆபத்துத் தான்.
13 ஐ எற்றியானால் பண்டாரநாயக்காவை சுட்ட பிக்கு எழுந்து மகிந்தவை தேடுவார்.
13 ஐ ஏறவிடாது தடுத்தால் மன் மோகனமே வன் கன்மம் ஆகிவிடும் மேற்குலகே எழுந்து அம்பாந்தோடடையை தேடி வரும்.
நாளாகலாம் ஆனால் நடக்கும். இதில் ஏதாவது சூழ்ச்சியை பாரதக் கிருஷ்ணர் செய்யாதிருந்தால் சரி.
பார்த்தசராதியில் தொடங்கி , நரசிம்ராவுமாகி , நாராயணன் போய் கிருஷ்ணரும் போகப்போகிறார்.
சிகிரியாச் சிங்கத்தின் கால் வேறு பழுது பட்டுள்ளதாம். இதற்கு இயற்கையின் சீற்றத்திற்கு சாந்தி செய்ய மகிந்த இனி புத்தீஸ்வரத்திற்குத் தான் போக வேண்டும்.
ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை தனது எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. இது தான் தலைமைத்துவத்தின் அடையாளம். இது தான் தலைவர் பிரபாகரனிடம் காணப்பட்டதா? ஏன்ற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன். அதற்கு பதிலை சென்றடைய முன் இந்தக் கற்பனைக் கதையையும் கருத்திற் கொள்ளுங்கள்
அமெரிக்காவின் றொனால்ட் றீகன் , இங்கிலாந்தின் மார்க்கிரட் தட்சர், சிதைந்த ரஷ்ஜியாவின் கொப்பர்ச்சோவ் ஆகிய மூவரும் ஒதே தினத்தில் மரணிக்கின்றனர் என்பதில் இந்தக் கதை தொடங்குகிறது. இவர்களை ராஜ மரியாதையுடன் சித்திர குப்தன் யம லோகத்திலிருந்து கடவுளிடம் அழைத்து செல்கின்றான்.
முதலில் றீகணை அழைத்த கடவுள் உலகின் தலை மகனே! நீ உலகில் என்ன நன்மை செய்தாய்? ஏன்று கேட்டார்?
பேர்லீன் சுவரை இடித்து ஜேர்மனிகளை ஒன்றாக்க குரல் கொடுத்தேன். எனது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்தேன் என்றார்.
நல்லது மகன் றீகனே நீ எனது வலது பக்கத்து ஆசனத்தில் அமர் என்ற கடவுள் இடது சாரி கொப்பரச்சேவே மகனே! நீ என்ன செய்தாய்? என்று கூறு என்றார்.
நான் மூடப்பட்டிருந்த ரஷ்யாவை இயலுமானவரை திறந்து விட்டேன். சடுதியான ஒரு விரைவான பேரழிவை தடுக்க இந்த குறைவான ஆறுதலான தோல்வியை வெற்றிகரமாக அனுமதித்தேன் என்றார்.
பனிக் கோட்டைக்குள் இருந்து கொண்டு அமெரிக்க பொருளாதாரப் பீரங்கிகளை எனது நாட்டால் சந்திக்க இயலாது. அதனால் தோற்றாலும் பறுவாயில்லை முற்றாக அழியாதிருந்தாற் போதும் என்று கருதி, நான் எனது மீசையை முறுக்காது, எனது மச்சமுள்ள மொட்டைந் தலையை ஒரு கையால் தடவியபடி மறு கைகளால் அடிக்க வந்த றீகனின் வலது கையை, கை குலுக்கும் சாட்டில் இறுக்கிப் பிடித்துக் கொண்டேன் என்றார். இதற்கு கெல் மட் ஹோலிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என ஏற்கனவே அங்கே சக்கர நாற்காலியில் இருந்த மேற்கு ஜேர்மன் பிரதமரை நன்றியுடன் பார்த்தார்.
படைத்தல் ஆளுதலைப் போல் காத்தலும் ஒரு தலைவனின் தலையாய கடமை என்பதை உணர்ந்து உன் மானத்தை புறந் தள்ளி நாணல் போல் வளைந்து ராஜ தந்திரத்துடன் நடந்து கொண்டாய் மகனே! நீ என் இடது பக்கத்தில் இருப்பது தான் பொருத்தம் என்று கூறிய படி அழகான ஒரு இரும்புச் சிலை போலிந்து மாரக்கிரட் தட்சரை நோக்கினார் கடவுள்.
ஓ! பெண்ணரசியா? மகளே! இங்கிலாந்தில் உனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சாதுரியமாக உனது கருமங்களை நிறைவேற்றியதை நான் அறிவேன். எனவே அவற்றை விடுத்து நீ வேறு என்ன செய்தாய் என்று கூறம்மா…. என்றார் கடவுள் அன்போடு…….
இரண்டு விடயங்கள் என்று உரத்த குரலில் தொடங்கிய இரும்புத் தலைவி தட்சர் , முதலாவதாக நான் உமது மகளல்ல நீர் எனது அப்பனுமல்ல- இரண்டாவது உடனடியாக எனது தலைமைத்துவ ஆசனத்தை காலி செய்யும் அதில் இருக்க வேண்டியவள் நான் தான் நீரல்ல…. நீர் யார்? …..என்று கூவிக் கொண்டே விறு விறு என்று கடவுளின் ஆசனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் தட்சர்.
நான் இத்துடன் திரையை மூடி விட்டு புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் மறைந்திருக்கும் திரையை கொஞ்சம் விலக்கலாமென்று நினைக்கிறேன்.
இவர்களில் அனேகர் மக்களின் மடமையை அரசியல் முதலீடு செய்தவர்களே ஒழிய சரியாக வழி நடாத்தும் தலைமை நெஞ்சுரம் , உறுதி தன்னம்பிக்கை நேர்மைத்திறன் இலட்சியப்பற்று சிறையில் வாடும் தமிழர் பற்றிய அனுதாபம் எதுவுமற்றவர்கள்.
இவர்கள் வெளி நாட்டுத் தமிழர்கள் எதை விரும்புகிறார்கள் அவர்களின் தேவை என்ன என்பதை பார்த்து அதையே தங்களது அமைப்புக்களின் கெபாள்கையாக்கி யாப்பிலும் சேர்த்து அமைப்புகுக்களை பதிவு செய்து அந்த இலக்கத்துடன் அரசிற்கு கடிதம் போடுபவர்களாக உள்ளனர்.
தாங்கள் சரியான பாதையைக் காட்டி வழி நடாத்துவதற்குப் பதிலாக மக்கள் கூட்டங்களின் மத்தியில் போய் நின்று கொண்டு கோஜமெழுப்புகிறதார்கள். அது கலை விழாவாகலாம் கோயிலாகலாம் எங்கும் அதையே பரராயணம் செய்கின்றனர்.
தாங்கள் நாட்டிற்கு போக வேண்டும் என்பதால் வர்த்தக தேவைகளிற்கான விளம்பரத்திற்காக அமைப்புக்களை பலர் பதிவு செய்து வைத்துக் கொண்ட இவர்கள் இறுக்கமான அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதேயில்லை.
மாற்றங்களினாலேயே நமக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த இயலும். இல்லாவிடின் சர்வ தேசம் இந்தியாவுடன் மட்டும் கூடி கூட்டமைப்பிற்கும் அதிக அழுத்தங்களைக் கொடுக்கும். சுதந்திர காலத்தில் செயற்பாடற்று இருந்து தங்கள் உத்தியோகங்களைப் பார்த்த அன்றைய தாயகத் தமிழரைப் போல் தான் நாங்களும் வெளிநாடுகளில் எதையும் பொருத்தமாக செய்யாதுள்ளோமா?
சுpகிரியாச் சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் இன வாதச் சன்னதம் குறைவதேயில்லை. எனவே அமைதியடையவோ அனுதலடையவோ எதுவுமில்லை. ஒன்றாகக் கூடிச் சிந்தித்து செயலாற்ற வேண்டியதே இன்றைய தேவை போலிருக்கிறது.
ஐ நா தன்னிடமுள்ள போரக்குற்ற ஆதாரத்தை இனியும் மறைத்து தாமதிக்கக் கூடாது. அவை இருட்டடிப்பு செய்யப்படாமல் வெளியில் நாலிலும் வெளியாக வேண்டும். இது சிங்கள மயமாக்கலையும் போராளிகளின் விடுவிஎப்பையும் ஊக்குவிக்கும் அழுத்தமாகலாம்.

Ingen kommentarer:
Legg inn en kommentar