கடந்த
சில ஆண்டுகளாக வருட ஆரம்பமான இக் காலப் பகுதியில், தமிழரின் புதுவருடப்
பிறப்பு தையா? சித்திரையா? ஏன்ற வாதப் பிரதிவாதங்கள் நிகழ்வது வழக்கமாக
இருந்து வந்தது.
அது சிவராத்திரி இன்றா? நாளையா? என்பதனூடாக
வருடம் முழுவதும் தொடரும் பண்டிகைகள் தொடர்பான பதிலற்ற கேள்விகளாகத்
தொடர்வதும் வழக்கம். அது பகுத்தறிவிற்கும் பாராம்பரியத்திற்குமாக போட்டியாக
எதுவித முடிவுமின்றி தொடர்வதும் சகஜமாக இருந்து வந்தது.
அதாவது புலம் பெயர் தமிழரின், பலன் மட்டுமன்றி, எதுவித பதிலுமற்ற வெற்றுக் கோஜ அரசியலைப் போல் இரண்டு சிவராத்திரிகள், இரண்டு தீபாவளிகள், இரண்டு கடந்த அரசுகள் எனத் தொடர்வதும் ஆலய மற்றும் தேசிய அரசியல் வர்த்தகங்கள் இதனால் இரட்டிப்பு அடைவதும் சகஜம்.
ஏகமாக அதாவது ஒன்றாக மட்டும் தனித்து பொதுவாக இருக்க வேண்டிய பொதுவான தேசியம், ஜனநாயகம் போன்றவற்றை ஒரு சில குழுக்கள் சொந்தம் கொண்டாடும் அபத்தத்தின் விளைவே இந்த இரண்டு கூறுகளாகும்.
இவ்வாறான அநேகங்கள், இப்படியே போட்டிக்கு மாறி மாறி எழுதித் தீர்ப்பதால் என்ன பயன் என்ற சிந்தனையின் அடிப்படையில் வருட வட்டமும் தமிழரின் திட்டமற்ற அரசியலும் என்ற தலைப்பில் ஒரு கருத்தை பொங்கலிற்கு முன்னரே வெளிப்படுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து அதற்கு மேலதிக விளக்கங்களைக் கொடுத்து ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அது தமிழரின் தைப் பிறப்பு மற்றும் இந்துக்களின் சித்திரைப் புத்தாண்டு பற்றிய ஒரு தெளிவான பார்வையாக அமைந்து தொடர்ந்த விதண்டாவாதங்களிற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்துள்ளது.
தவிர பஞ்சாங்கங்களின் திருத்தப்படாது தொடரும் தவறுகள் பற்றி அது சில நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கான முடிவை இந்து மதக் குருமார் செனறடைவார்கள் என நாம் நம்புவோமாக என்று எழுத இயலாதுள்ளது. இவ்வாறு பதிலற்று தொடரும் தமிழ் இனத்தின் கேள்விகள் பதில்களைக் கண்டறிய வேண்டும்.
இதனை ஆதரிப்பதாற் போல் தமிழர்களைத் தூக்கி நிறுத்துவது யார்? என்ற கேள்வியுடன் ஒரு கருத்தை கனடா உதயன் தனது கதிரோட்டமாக வீசியுள்ளது. நமது அரசியற் குழுக்கள் இப்போ தமிழர் மரபுரிமைகளை போட்டி போட்டுக் கொண்டு குழுவிற்கு ஒரு விழாவாக பொங்கலிற்கு முன்னரே கொண்டாட ஆரம்பித்து விட்டன.
முதலாவதாக மரபுரிமை நாள் என்பது “நாள்” தொடர்பானது. இதனை வார இறுதி நாட்களில் மரண யோகம் இருப்பினும், சுப முகூர்த்த தினங்களை குறித்துக் கொடுப்தைப் போல் ஏற்கனவே சில குழுக்கள் அரசியல் வியாபாரமாக்கியுள்ளன.
இரண்டாவதாக இது ஒரு அரசியல் விவகாரமல்ல. இதனை இவர்கள் ஏன் அரசியல் வர்த்தகப் பண்டமாக்குகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறே ஈழத் தமிழரின் இனப் பிரச்சினை தமிழ் இனத்திற்கே உரிய ஒரு பொதுப் பிரச்சனை.
அதனைக் கட்சிகள் அனைத்தும், குழுக்கள் அனைத்தும் சேர்ந்து இனப் பிரச்சினையாக முன்னெடுக்க வேண்டும். சிங்கள தேசத்திடமிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டுமாயின் முதலில் நாம் நமது இனப் பிரச்சனையை “இந்த” புலம்பெயர்ந்த அரசியல்வாதிகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கலைஞரின் தலையாட்டு அரசியலைத் தொடராது, அதாவது இந்திய மத்திய அரசின் அதிகாரிகளை அர்த்தமில்லாது சந்திப்பதை தவிர்த்து ஒரு இறுக்கமான நிலையை தொடர்ந்தார்.
இதை ஒரு மாநில அரசின் நிலைப்பாடாக ஜெயலலிதா அம்மையார் தொடர்ந்தமையால் சங்கடத்திற்குள்ளான மத்திய அரச நிர்வாகமும், “ காங்கிரஸ் இந்தியாவும்” கலைஞருடன் சேரந்து “டெசோ” மாநாட்டு நாடகத்தை மேடையேற்றியது.
இதன் மூலம் ஆரியம் மாநில அரசு நிலையிலிருந்த ஈழத் தமிழர் விவகாரத்தை கட்சிப் போட்டி அரசிலாக்கிவிட்டு இன்று சங்கடமேதுமின்றி தன் காரியங்களை கவனிக்கிறது. இதனை அன்றே தமிழர் போராட்ட முனைப்பை இல்லாது அழித்தொழிக்கவே மத்திய அரசு மாண்புமிகு கருணாநிதியுடன் சேர்ந்து இந்த பொதுவான இனப் பிரச்சினையை கட்சிப் பிரச்சினையாக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த விடயத்தை கருதாது அம்மையாரின் கடந்த கால தவறுகளை மேற்கோள்காட்டி பதில்கள் தொடர்ந்தன. இன்று கலைஞரின் கவனம் முழுதும் ஸ்ராலினா? ஆழகிரியா? என்பதில் உள்ளதோ ஒழிய ரெலோவிலோ டொசோவிலோ இல்லை. இதனை புரியாது தவறுவதையும், தெரிந்த பின்னரும் எதையும் செய்யாதிருப்பதையே புலம் பெயரந்த தமிழரின் பூஜ்ஜிய அரசியல் என்கிறேன்.
தமிழக முதல்வர் பதவியானது ஒரு “தரமான” , ஒரு “தமிழரிடம்”; வழங்கப்படுவதே நியாயமும் தேவையுமாகும். உண்மையில் அன்று அண்ணாவைத் தொடர்ந்து முதல்வராகியிருக்க வேண்டியவர் மாண்புமிகு நெடுஞ்செழியன் ஆவர்.
இதே குறுக்கு வழியால் முதல்வாரன கலைஞர் தமிழ் இனத்தை முள்ளிவாய்க்காலுள் தள்ளிவிட்ட பின்னரும், அறிவு மயமான இந்த நூற்றாண்டில் இந்த ஸ்ராலினையும், அழகிரியையும் முன்னிலைப் படுத்துவது கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களை முதல்வராக்குவதை விட சிறந்ததாக அமைய இயலுமே தவிர ஒரு தரமான நாகரீகமான நியாயமான ஜனநாயகமான முடிவாக இயலாது.
தமிழகம் ஈழத் தமிழரிற்கு உதவுவதற்கு முன் தனக்குத் தானே உதவி செய்ய வேண்டும். திராவிடர் முன்னேற வேண்டுமாயின் கலைஞர் பேராசிரியர் அன்பழகனையோ அல்லது வேறு ஆற்றலும் பக்குவமும் “விபரமும்”, இந்திய மத்திய அரசையும், உலக விவகாரங்களில் பாண்டித்தியமும் உள்ள சர்வதேச தொடர்பாட வல்லவரை திமுக விற்கு தலைவராக தெரிவு செய்ய வேண்டும்.
அதாவது, ஈழத் தமிழரிற்கு தமிழகம் உதவ வேண்டுமாயின், இந்திய மத்திய அரசுடன் தரக்கிக்கவும், உலகத் தலைவர்களுடனும் விவாதித்து உண்மையை உணர வைக்கவும், சிறீலங்காத் தலைவர்களை நேரடியாக சந்தித்தால் அவர்கள் தயங்கும் வண்ணம் பேச வல்வவராகவும் இருக்க வேண்டும். இதற்காகவாவது வைகோவை கலைஞர் திமுக விற்குள் வைத்திருந்திருக்க வேண்டும்.
இவ்வாறே ஆற்றலற்ற தலைமைகளே புலம்பெயர் நாடுகளிலும் உள்ளன. ஆற்றல் உள்ள திரு உருத்திரகுமாரன் போன்ற ஒரு சிலரும் அவர்கள் சாரந்து நிற்கும் நிலைமைப்பாடு காரணமாக தடை செய்யப்பட்டிருப்பதால் அவரும் இனத்திற்கு பயனற்ற பூஜ்ஜிய இராச்சியக்காரராகவே காணப்படுகிறார்.
முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் நின்றவர்கள் பரிந்துiரைத்த இராஜதந்திர வழி என்பது இந்தக் காலத்திற்கும் உலகத்திற்கும் உரிய தமிழர் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஒரு அமைப்பின் கீழ் தடையற்ற நிலையில், திரு உருத்திரகுமாரன் போன்றோர் நகர்வார்களேயானால் அது ஈழத் தமிழரை முன்னோக்கி நகர்த்தும் (பூஜ்ஜியமற்ற) அரசியலாக இருந்திருக்கும்.
அரசியற் பின்னணியும் தொடர்பாடல் ஆற்றலுமுள்ள திரு உருத்திரகுமாரன் அவர்கள் கர்ணனைப் போல் புதைந்த தேரில் நகர்வற்று உள்ளதை அவரும் புலம்பெயர் ஈழத் தமிழ் இனமுமு; உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நகர்வறற பூஜ்ஜிய அரசியலை புலம்பெயர் நாடுகளில் தமது கால விரயமூடாக ஏதோ செயற்பாடு தொடர்கிறது என்ற மாயையை தோற்றுவிக்கும் அரசியல்வாதிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாரி மழை பொழிகையில் யாரும் பொங்குவதில்லை. இடம் நேரம் காலம் பாரத்தே கருமங்கள் ஆற்றப்பட வேண்டும.
எதற்கும் ஒரு காலமுண்டு. காலத்தையும் உலக நிலையையும் கருதாது செய்யப்படும் வேளாண்மை வீடு வந்து சேராது. அது தாயக தியாகங்களை வெளிநாட்டு குழுப் போட்டிகளும் துரோகங்களும் முள்ளிவாய்க்காலுள் புதைத்த வரலாறாகவே மீண்டும் திரும்பும்.
மனித உரிமை விவகாரங்கள் மற்றும் போர்க் குற்றம் போன்றவை அரசியற் பிரச்சினைகள் அல்ல. அவை அரசியலுடன் தொடர்புள்ள சர்வதேச சட்ட விவகாரங்கள். இதனை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக வழியிலேயே முன்னெடுக்க இயலும். அதற்கான தடையற்ற சமூக சிவில் அமைப்புக்களின் உதவியுடனேயே முன்னகர்த்த இயலும்.
இதனை ஸ்ராலின் போன்றவர்கள் தமிழக முதல்வராயினும் முன்னகர்த்த இயலாது. நாடு கடந்த அரசு தோற்றுவிக்கப்பட்ட போது, அது முள்ளிவாய்க்காலில் நின்று சொல்லப்பட்டதைப் போல் வெள்ளைக்கொடியுடன் சட்ட, ஜனநாயக மற்றும் சர்வதேச அங்கீகாரம் உள்ள அமைப்பினூடாக நகரும் என நம்பி அதனை ஆதரித்தோம்.
ஆனால் சரியான மனிதர் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதால் நாடு கடந்த அரசு தடையைத் தாண்டிக் கடக்க இயலாது தள்ளாடுகிறது. அரசியலைக் கைவிட முடியாதென்றால் கூட்டமைப்பின் சமகால தந்திரோபாயத்தையாவது கைக்கொள்ள வேண்டும்.
அல்லது புலிகள் தடை நியாமற்றது என்பதை வழக்கைத் தாக்கல் செய்து தகர்க்க வேண்டும். இதில் எதையும் செய்யாது, இந்த உலக நிலவரத்தையே புரியாத பிரதிநிதிகளை உள்ளே வைத்துக் கொண்டு இவர் எதையும் செய்ய இயலாது திணறுவதாகவே புலப்படுகிறது.
யாருமே உள்ளே அனுமதிக்க இயலாத தடை நிலையில் இருந்து கொண்டு நாடு கடந்த அரசால் எவ்வாறு தமிழர் பிரதிநிதிகளாக உலகை வலம் வர இயலும்? நாடு கடந்த அரசாகட்டும், கனடாவில் உள்ள தேசிய அவையாகட்டும் அனைத்தையுமே சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகவே கணிக்கிறார்கள்.
அதனை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஊடாக எந்த உலகத் தலைவரும் பார்ப்பதில்லை. ஈழத் தமிழரின் நீண்ட நெடிய சட்ட, ஜனநாயக, மற்றும் அறவழி உரிமைப் போராட்டங்களின் பரிணாம வளர்ச்சியே புலிகளின் போராட்டம் எனபதை உலகம் உணர விடாது ராஜீவ் காந்தி மற்றும் தொடர்ந்த அரசியற் கொலைகள் முழுமையாக மறைக்கின்றன.
இனவாதத்தால் பாதிக்கப்பட்ட எங்களைப் போல் அவர்கள் புலிகளைப் பார்க்கவில்லை. இந்தப் புரிதல் முரண்பாட்டை உணராது உலகே உனக்கு கண் இல்லையா என்பதில் ஒரு பலனுமில்லை. புலிகளினால் ஈழத் தேசியம் சர்வதேச மயப்பட்ட அதே அளவிற்கு தடையும் வளர்ந்துள்ளமையை நாம் உணர்ந்து ஏற்க வேண்டும்.
அதாவது இன்றுவரை, நிலத்திலும் சரி, புலத்திலும் சரி ஜனநாயக ரீதியலான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்கும் நிலை இன்னும் தோன்றவில்லை. ஏனென்றால் அதனை வெள்ளைக்கொடியாக்கி நாங்கள் தூக்கிப் பிடிப்பதில்லை. அதனை நெருக்குவாரம் கருதி நாங்கள் கைவிடாவிடினும் மறந்து விட்டதாக நடிக்கிறோம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் விதை தமிழரசுக் கட்சி என்றால் அதன் மலரே நமது பழைய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். அதனை காயாக்கியது புலிகளே. அதனை அங்கீகாரக் கனியாக்கியிருக்க வேண்டிய வெளிநாட்டுத் தமிழர் அதனை செய்யாது போட்டிகளால் காட்டிக் கொடுத்து இனமே அழிப்பிற்குள்ளாக்கிவிட்டனர்.
எனவே காலம் கனிந்து வரும் வரை செவிடன் காதில் ஊதிய சங்காக கோஜ அரசியலை தொடர்வதில் பலனில்லை. அதேசமயம், அதுவரை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை சில அமைப்புக்களும் குழுக்களும் கை விடாது தாங்கி நிற்க, சம காலத்தில் மறுபுறத்தில் திரு. உருத்திரகுமாரன் போன்றவர்கள் கண்ணகி போல் ஒற்றைக் கைச்சிலம்புடன் நீதி கேட்டெழ வேண்டும்.
திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லுறவைப் பேண வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும் அதுவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கை விடுவதாகக் காட்ட வேண்டியதில்லை. ஏனென்றால் பழைய கூட்டணியே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும்.
இதற்குள், முள்ளிவாய்க்கால் முடிவு புலிகளின் விடுதலைப் போரை நீதிக்கான போராட்டமாக பின்தள்ளி விட்ட யதார்த்தத்தை யாரும் ஈழத் தமிழரிற்கு புரிய வைக்க முயல்வதாகத் தெரியவில்லை. அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சி நடாத்தியது “தமிழர்” உரிமை அறப் போர். பழைய உண்மையான தமிழர் விடுதலைக் கூட்டணியாற் தொடரப்பட்டது அரசியல் வழியிலான விடுதலைப் போராட்டம்.
இது முற்றுமுழுதாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தோன்றியது. அதனை தேசிய மயமாக்கி விடுதலைப் போராட்டம் நடாத்தியது புலிகள். புலிகள் நியாயத்திற்கும், சர்வதேச சட்டத்திற்கும் மாறாக பலியெடுக்கப்பட்டதால் இன்று முதலில் செய்யப்பட வேண்டியது நீதி கேட்டு எழுதலேயாகும்.
அதற்கான சர்வதேச வெளி நாடு கடந்த அரசின் முன் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனைப் பயன்படுத்தாது தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் அரசியல் சுதந்திர வெளி தாயகத்தில் இல்லை. எனவே வெளிநாடுகளில் அதனை தொடர்கிறோம் என்பது ஆய்விற்குரியதாகும்.
பிரிவினையைக் கோர முடியாது என்று ஸ்ரீலங்காவும் இந்தியாவும் அங்கு எங்களைத் தடுக்கின்றன. வெளிநாடுகளிலும் நிலை அதுதான். பிரிவினையையும், ஆயுதப் போராடத்தையும், தீவிரவாதத்தையும் எந்த நாடும் ஏற்பதாக இல்லை. ஆனால் ஜனநாயக கருத்து சுதந்திர அடிப்படையில் தடை செய்யப்பட்டிருப்பினும் அதற்காக கொடி பிடித்து குரல் கொடுக்கும் சுதந்திர வெளி மட்டும் உண்டு.
ஆனால் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரிவினக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் சட்டப்படி இடம் அறவே கிடையாது. எனவே தான் புலம்பெயர் நாடுகளில் தமிழர் தேசியக் கூட்டமைப்பைப் போல் ஒரு தடையற்ற அமைப்பு நீதி கேட்டெழ ஆவது தேவை என்பதை வலியுறுத்துவதே இந்த கருத்து வெளிப்பாட்டின் நோக்கம்.
எல்லோரும் இலட்சியத்தை கைவிட வேண்டுமென்றோ, திணித்த தேசியக் கொடியை பிடிக்க வேண்டுமென்றோ யாரும் கூறவில்லை. தெருவில் காற்றோடு காற்றாக கலந்து கரைந்து போகும் நமது கோஜங்கள், கோரிக்கைகளாக அரச தலைவர்களையும் நாட்டுத் தூதர்களையும் சென்றடைய நமக்கு “ஒரு தடையற்ற அமைப்பு கண்டிப்பாக வெளிநாடுகளில் தேவை.
ஒன்றில் “இந்த” புலம் பெயர் அரசியல்வாதிகள் தடையை சட்டப்படி நீக்க சட்ட நடவடிக்கைகளை மேற் மேற்கொள்ள வேண்டும். அல்லது தடையை ஏற்கும் பாணியில் நீதி கேட்டெழுதலைத் தொடர வேண்டும்.
தமிழரின் தைத் திருநாள் தமிழரின் பொது நாள். தயவு செய்து அதனையும் அரசியல் மயப்படுத்தாதீர்கள். அடுத்த தேர்தலிற்கு வாக்கு கேட்க அரசியல் மூலதனம் இல்லாத காரணத்தால் பொதுத் தேங்காயை எடுத்து தெருவில் அடிக்காதீர்கள். தை என்பது ஆக்க ப+ர்வமானது.
வேளான்மை விளைச்சலை பக்குவமுள்ளவர்கள் வீடு கொண்டு வந்து சேர்ப்பதைப் குறிப்பது. எதுவித பலன் விளைச்சலையும் கருதாது கோஜம் எழுப்பும் வெளிநாட்டு அரசியல் வாதிகளிற்கும் விளைச்சல் தரும் தைத் திருநாளிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
பொங்கல் தமிழர் திருநாள் மட்டுமல்ல ஒரு பண்டிகையும் கூட. தயவு செய்து அதற்கும் குழு அரசியற் சாயம் ப+சாதீர்கள். அது ப+சகர்களின் வட்டத்துள் நிற்கட்டும். எங்கள் இந்து மதக் குருமார் யாரும் வணக்கத்திற்குரிய மன்னார் ராயப்பு அவர்களைப் போலவோ அல்லது யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய சௌவுந்திரநாயம் போல ஈழத் தமிழர் அரசியற் பிரச்சனையை இனப் பிரச்சனையாக உலகிற்கு எடுத்து உரைத்தவர்களா?
அரசியல் கட்சிகள் , குழுக்கள் வட்டங்களிற்கு உட்படாது பொதுவான நிலையில் நிற்பதாற்தான் அவர்களின் வாக்கு மூலங்களை ஐ நா அதிகாரிகள் அடங்கலாக உலகமே செவி சாய்த்து கேட்கிறது.
எனவே ஈழத் தமிழர் இன அழிப்பை நாமும் நமது வெளிநாட்டு தமிழர் போட்டி அரசியலிருந்து விடுவித்து எந்தக் குழுவினதும் அடையாளப் பதாகைகளும் அற்ற நிலையில் வெள்ளைக் கொடியுடன் தமிழ் இனத்தின் மனித உரிமைப் பிரச்சனையாக முன்னகர்த்த இவ்வாண்டு தைத் திருநாளாவது வழி வகுக்குமாக! இயக்கம் என்பது இயங்குவதையும் குறிக்கும்.
இயங்காத குழுக்கள் மட்டுமல்ல அரசுகள் இருந்தும் இனத்திற்கு என்ன இலாபம்? யாரையும் சர்வ தேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத குழுக்களும் அரசியல்வாதிகளும் இருப்பதால் இனத்திற்கு என்ன இலாபம்? எனவே நாங்கள் தான் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என வெளிநாடுகளில் எல்லாக் குழுக்களுமே கூறுவதிலிருந்தே யாரும் தமிழ் இனத்தை யாரும் பிரதிபலிக்கவில்லை என்பது புலனாகிறது.
தூயகத்திலிருந்து கூட்டமைப்பினரை அழைத்துப் பேசும் உலக முன்ணனி அரசுகள் வெளிநாடுகளில் உள்ள இவர்களை ஏன் அழைக்காதுள்ளன. இந்தக் கேள்வியi தமிழ் மக்களிடமும் தமிழ் குழுக்களிடமும் விட்டு விடுவோம்.
kuha9@rogers.com
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012அதாவது புலம் பெயர் தமிழரின், பலன் மட்டுமன்றி, எதுவித பதிலுமற்ற வெற்றுக் கோஜ அரசியலைப் போல் இரண்டு சிவராத்திரிகள், இரண்டு தீபாவளிகள், இரண்டு கடந்த அரசுகள் எனத் தொடர்வதும் ஆலய மற்றும் தேசிய அரசியல் வர்த்தகங்கள் இதனால் இரட்டிப்பு அடைவதும் சகஜம்.

Ingen kommentarer:
Legg inn en kommentar