நீதிமன்றையோ அல்லது அதன் தீர்ப்பையோ
விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றிருந்த நிலை மாறி
நீதிமன்றத்தை தாக்கலாம், நீதித்துறையின் உயர்பீடமான உயர்நீதிமன்றம்,
மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை உதாசீனம் செய்யலாம், பிரதம
நீதியரசரையே எள்ளி நகையாடலாம், விமர்சிக்கலாம் என்ற நிலையை சிறிலங்கா
அரசாங்கமே உருவாக்கியிருக்கிறது.
மன்னார் நீதிபதியை அமைச்சர் றிசாத்
பதியுதீன் அச்சுறுத்தியது தொடக்கம் மன்னார் நீதிமன்றத்தை தாக்கியது,
உயர்நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புக்களை
உதாசீனம் செய்து எள்ளி நகையாடியது, முறையற்ற வகையில் பிரதம நீதியரசரை
நீக்கியது வரை இந்த அரசாங்கமே நீதித்துறையை பலவீனப்படுத்தி உள்ளது.
நீதித்துறையையும் அதன் தீர்ப்புக்களையும்
மதிக்கவில்லை என்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு, சட்டத்திற்குட்பட்ட வாழ்வு
எதுவுமே இருக்காது. சட்டத்தையும் நீதியையும் அதன் தீர்ப்பையும் மதித்து
நடப்பதற்கு முன் உதாரணமாக அரசாங்கமே இருக்க வேண்டும். தீர்ப்பை
நடைமுறைப்படுத்த அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இன்று
அரசாங்கமே இவை அனைத்தையும் மீறிவிட்டது.
நீதிமன்றை விமர்சித்து பொதுக் கூட்டம்
ஒன்றில் உரையாற்றினார் என்ற குற்றத்திற்காக இன்றைய உயர்கல்வி அமைச்சர்
எஸ்.பி.திசநாயக்கா சிறைத்தண்டனையை அனுபவித்ததையும் அதன் பின்னர்
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலையான
வரலாற்றையும் நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை,
மேன்முறையீட்டு மன்றின் உத்தரவை அனைத்தையும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும்,
சபாநாயகரும் உதாசீனம் செய்ததையும், நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்று
விடுத்த உத்தரவை உதாசீனம் செய்ததையும் நாம் காண்கிறோம்.
குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்கு
நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு சட்டரீதியற்றது, அதன் முடிவும்
செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் அந்த
தீர்ப்பை அரசாங்கம் தூக்கி வீசிவிட்டு தாம் நினைத்ததை
நிறைவேற்றியிருக்கிறது.
நீதித்துறையை மதிக்க வேண்டிய அதன் தீர்ப்பை
கண்ணியப்படுத்தி நடக்க வேண்டிய அரசாங்கமே அதனை உதாசீனம் செய்திருக்கிறது.
எள்ளி நகையாடியிருக்கிறது. பிரதம நீதியரசரை எள்ளி நகையாடுவதோ, விமர்சனம்
செய்வதோ அல்லது நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயற்படுவதோ தண்டனைக்குரிய
குற்றம் என்றிருந்த நிலையை மாற்றி இவை அனைத்தையும் செய்யலாம் என அரசாங்கம்
பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கா மீது எறிந்த கல் இப்போது
திருப்பி மகிந்த ராசபக்சவினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மௌஹான்
பீரிஸ் மீதும் விழ ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மகாநாட்டில்
பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஐ.நா.வில் பொய் கூறிய ஒருவரையே
மகிந்த ராசபக்ச பிரதம நீதியரசராக நியமித்திருக்கிறார் என கூறியிருந்தார்.
இது போன்ற பல விமர்சனங்களை புதிய பிரதம நீதியரசர் எதிர்நோக்க வேண்டி
ஏற்படலாம். ஏனெனில் நீதித்துறையை விமர்சிக்கலாம், எள்ளிநகையாடலாம், அல்லது
தீர்ப்பை உதாசீனம் செய்யலாம் என்ற நிலையை உருவாக்கியது பொதுமக்களல்ல,
இன்றைய அரசாங்கம் தான்.
அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழிசுமத்தப்பட்டவராக எதுவித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன் என கடந்த செவ்வாய்க்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் சர்வாதிகார
எதேச்சாதிகாரத்தின் உச்சக்கட்டமாக இந்த பதவி நீக்கமும், பழி சுமத்தல்களும்
இடம்பெற்றுள்ளன. இந்த பதவி நீக்கத்திற்கு ஷிராணி பண்டாரநாயக்காவின் மீது
சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுதான் காரணம் என அரசாங்கம் கூறினாலும்,
உண்மை அதுவல்ல என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து
நான் சுகந்திரமான நீதித்துறைக்காகவே பாடுபட்டதால் தான் இன்று
பாதிக்கப்பட்டுள்ளேன். சட்டத்தின் ஆட்சி மேலோங்கி
நிலைநிறுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான அநீதியான முறையில் நான்
தண்டிக்கப்பட்டிருக்கமாட்டேன் என ஷிராணி பண்டாரநாயக்க வெளியிட்ட
அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
உண்மையில் இரு முக்கியமான தீர்ப்புக்களே
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கும் அவரது சகாக்களுக்கும் கடும்
சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை
பறித்தெடுத்து மகிந்தவின் சகோதரரான பஷில் ராசபக்சவின் கைகளுக்கு வழங்கும்
திவிநெகும என்ற சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அதற்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சகல மாகாணசபைகளிலும் அங்கீகாரம் பெற்ற
பின்னரே நாடாளுமன்றில் பிரேரணையை சமர்ப்பிக்க முடியும் என உயர்நீதிமன்றம்
முதலாவது தீர்ப்பை வழங்கியிருந்தது.
வடமாகாணசபை தவிர்ந்த ஏனைய எட்டு
மாகாணசபைகளிலும் திவிநெகும சட்டத்திற்கு ஆதரவான தீர்மானம் எடுக்கப்பட்ட
நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இல்லாத வடமாகாணசபையின்
அங்கீகரத்தை அந்த மாகாணசபையின் ஆளுநர் சந்திரசிறி வழங்கியிருந்தார்.
இதனை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர்
மாவை சேனாதிராசா தாக்கல் செய்திருந்த வழக்கில் மாகாண ஆளுநர் ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்டவரே தவிர மக்கள் பிரதிநிதி அல்ல. எனவே மாகாணசபையின்
அங்கீகாரமாக ஆளுநரின் கையொப்பத்தை கருத முடியாது என்றும் மாகாண சபையின்
தீர்மானங்களை ஆளுநர் எடுக்க முடியாது என்ற முக்கியமான தீர்ப்பையும்
உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இந்த இரு தீர்ப்புக்களுமே மகிந்த
தலைமையிலான அரசாங்கத்திற்கு நெருக்கடியாக அமைந்தது. அதுவும் தனது சகோதரர்
பஷில் ராசபக்சவின் அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு நீதித்துறை தமக்கு
சாதகமாக ஒத்துழைக்கவில்லை என்ற சீற்றம் மகிந்த ராசபக்சவிற்கு ஏற்பட்டது.
இதன் விளைவே பிரதம நீதியரசராக இருந்த
ஷிராணி பண்டாரநாயக்காவின் பதவி பறிக்கப்பட்டு அவர் தூக்கி எறியப்பட்ட
நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படும்
நீதிபதிகள் குழாமில் என்றும் அங்கம் வகிக்காத ஒருவர் பிரதம நீதியரசராக
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரதம நீதியரசர் உயர்நீதிமன்ற
நீதியரசர்களில் மூப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால்
அந்த வழக்கங்களை மீறி எந்த ஒரு காலத்திலும் நீதிபதியாக கடமையாற்றாத ஒருவர்
எடுத்த எடுப்பில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருப்பது பற்றியும்
விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதற்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபை போன்ற
உயர்ந்த சபையில் சர்வதேச நாடுகளுக்கு பொய் ஒன்றை கூறி சர்வதேச நாடுகளுக்கு
பிழையான தகவல் ஒன்றை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு தற்போது பிரதம
நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்கும் மொஹான் பீரிஸ் மீது சர்வதேச
மன்னிப்புச்சபை உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சாட்டி
வந்தன.
காணாமல் போன ஊடகவியலாளர் எகிலியகொட
வெளிநாடு ஒன்றில் வாழ்கிறார் என ஐ.நா.சபையில் மொஹான் பீரிஸ் கூறிய தகவல்
பொய் என பின்னர் நிரூபிக்கப்பட்டது. அவ்வாறு சர்வதேச நாடுகள் மத்தியில்
பொய் கூறிய ஒருவரை சிறிலங்கா அரசாங்கம் பிரதம நீதியரசராக நியமித்திருப்பதாக
இப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நீதித்துறை மீது சிறிலங்கா அரசாங்கம்
மேற்கொண்ட சர்வாதிகார அழுத்தங்களை எதிர்த்து சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை
வெளிப்படுத்திய போதிலும் எதிர்க்கட்சிகளோ அல்லது பொதுமக்களோ பெரிய அளவில்
எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.
இந்த விடயத்தில் தமிழர் தரப்பும் இது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விடயம் என்பது போல மௌனம் காத்துக்கொண்டது. மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இந்த விடயத்தை சரியாக அரசியல் மயப்படுத்த முன்வரவில்லை. மகிந்த ராசபக்ச அரசாங்கம் அதிகாரப்பரவலாக்கலுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கோ தயார் இல்லை என்பதை அண்மைய சம்பவங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதை மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் சரியாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவர்கள் இவை எதையும் விளங்கி கொள்ளாதவர்களாக உள்ளனர்.

உயர்நீதிமன்றம் வழங்கிய இரு
தீர்ப்புக்களும் அதிகாரபரவலாக்கலுக்கு சாதகமானதும், ஆளுநர்களின்
தன்னிச்சையான அதிகாரங்களை தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. ஆளுநர்
என்பவர் நியமனம் செய்யப்பட்டவரே ஒழிய மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல,
எனவே மாகாணத்தின் முக்கிய முடிவுகளை ஆளுநரால் தீர்மானிக்க முடியாது என
வழங்கப்பட்ட தீர்ப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தரப்பு எவ்வளவு தூரம்
பயன்படுத்திக் கொண்டது.
உதாரணமாக வடக்கில் உள்ள ஆளுநர் மேற்கொண்டு
வரும் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை
உதாரணமாக கொண்டு வழக்கு தாக்கல் செய்திருக்க முடியும். இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின் பயனாக கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம்
உருவாக்கப்பட்ட மாகாணசபை முறை வடக்கு கிழக்கை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில்
சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாகாணங்கள் காணி அதிகாரங்கள்
உட்பட மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் வடக்கு
கிழக்கில் மட்டும் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கமே
வைத்திருக்கிறது.
2002க்கு பின்னரான ஐக்கிய தேசியக்கட்சி
ஆட்சிக்காலத்தில் காணி அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னா வடமத்திய
மாகாணத்தின் காணி விடங்களில் தலையிட்ட போது தலைமை அமைச்சராக இருந்த பேர்டி
பிறேமலால் திசநாயக்கா உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல்
செய்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் மாகாணசபைக்குரிய காணி
அதிகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என நீதிமன்றம்
தீர்ப்பளித்திருந்தது.
இப்போதும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய
மாகாணங்களில் காணி அதிகாரம், கல்வி, சுகாதார அதிகாரம் அனைத்தும்
மாகாணசபையின் கீழ் தான் இருக்கின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் இவை மத்திய
அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளன.
வடமாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 5வருடங்களுக்கு மேலாக முதலமைச்சர் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு பறித்து கொண்டுள்ளது என முன்னர் முதலமைச்சராக இருந்த பிள்ளையானோ அல்லது இப்போது முதலமைச்சராக இருக்கும் நயீப்போ வாயே திறப்பதில்லை. ஏனெனில் பிள்ளையான், நயீப் போன்றவர்கள் அரசின் கைப்பொம்மைகளே அன்றி சுயமாக முடிவு எடுக்கும் எந்த ஆற்றலும் அற்றவர்கள்.

முக்கியமாக கடந்த முறை மாகாணசபையில்
பிள்ளையானை மகிந்த ராசபக்ச முதலமைச்சராக்கியதற்கு முக்கிய காரணம்
பிள்ளையான் அரசுக்கெதிராக எந்த கேள்வியும் கேட்கமாட்டான் என்ற
நம்பிக்கையில் தான்.
மகிந்த அரசாங்கம் தமிழர் தரப்பில் தன்னுடன் பிள்ளையான், டக்ளஸ், கருணா, போன்ற குற்றவாளிகளை வைத்திருப்பதற்கு காரணமும் அரசுக்கெதிராக எந்த கேள்விகளையும் அவர்கள் எழுப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
தமிழ் மக்களுக்கு இந்த அரசு இழைக்கும் அநீதிகள் கொடுமைகள் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பமாட்டார்கள். அவ்வாறு கேள்வி எழுப்பினால் ஏற்கனவே தாங்கள் புரிந்த குற்றங்களுக்காக சிறையில் தள்ளி விடுவார்கள் என்பது பிள்ளையான் டக்ளஸ் கருணா போன்றவர்களுக்கும் தெரியும்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி
திசநாயக்கா மத்திய அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் நீதிமன்றில் வழக்கு
தாக்கல் செய்து காணி அதிகாரம் உட்பட மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பெறும்
அளவிற்கு பிள்ளையானிடம் துணிவோ பலமோ அதிகாரமோ அல்லது அவ்வாறான அரசியல்
அறிவோ கிடையாது. அதற்கு மேலாக தான் ஒரு குற்றவாளி என்ற பலவீனத்தை வைத்து
மகிந்த அரசு தன்னை பழிவாங்கிவிடும் என்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு
தெரியும்.
இப்போது கூட வடமாகாணத்தில் ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போலவே செயற்படுகிறார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இராணுவத்தை நியமித்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
இப்போது கூட வடமாகாணத்தில் ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போலவே செயற்படுகிறார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இராணுவத்தை நியமித்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இதற்கெதிராக தமிழர் தரப்பு
ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதை செய்ய தமிழர்
தரப்பு தவறிவிட்டது. அது போல கிழக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட ஒரு சபை இருக்கின்ற போதிலும் அங்கு முழுக்க முழுக்க ஆளுநரின்
ஆட்சியே நடைபெறுகிறது.
உரிமையும் விடுதலையும் வெறும்
ஆயுதப்போராட்டத்தின் மூலமோ அல்லது வெற்றுக்கோசங்களின் மூலமோ வந்து
விடப்போவதில்லை. குற்றவாளிகளையும், கொலைகாரர்களையும் தங்கள் பிரதிநிதிகளாக
தெரிவு செய்யும் மடமையிலிருந்து விடுபட்டு மக்கள் அரசியல் எழுச்சி பெறுவதன்
மூலமே அந்த இலக்கை அடைய முடியும்.
முக்கியமாக ஷிராணி பண்டாரநாயக்காவின்
விடயத்தை தமிழர்கள் சரியான முறையில் சர்வதேச மயப்படுத்தியிருக்க முடியும்,
மகிந்த ராசபக்ச அதிகாரப்பகிர்வுக்கு தயார் இல்லை என்பதை
அம்பலப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால் உள்ளுரில் இருக்கும் தமிழர் தலைமைகளும் சரி, மேற்குலக நாடுகளில் செயற்படும் தமிழர் அமைப்புக்களும் இந்த விடயத்தை சரியாக கையாள தவறிவிட்டன.
ஆனால் உள்ளுரில் இருக்கும் தமிழர் தலைமைகளும் சரி, மேற்குலக நாடுகளில் செயற்படும் தமிழர் அமைப்புக்களும் இந்த விடயத்தை சரியாக கையாள தவறிவிட்டன.
இரா.துரைரத்தினம்
(நன்றி-TKK) G.JKMEDIAWORKS 2013
Ingen kommentarer:
Legg inn en kommentar