கிழக்கு மாகாணத்தில் அம்பாறை
யிலும் திருகோணமலையிலும் பல தமிழ் கிராமங்கள் சிங்களவர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கின்ற அதே
நிலை மட்டக்களப்பிலும் ஏற்படுவதற்கு வெகுகாலம் எடுக்காது.
தமிழர்களது மண்ணைப் பறிப்பது என்பது இன்று நேற்றுத் தொடக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் பெறு முன்னரும் பெற்ற கையோடும் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம். ஆனால் இன்று கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்கள் பறிபோன நிலையில் கிழக்கில் எஞ்சியிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டமும் தமிழர்களின் கைகளை விட்டு போகும் நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களது மண்ணைப் பறிப்பது என்பது இன்று நேற்றுத் தொடக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் பெறு முன்னரும் பெற்ற கையோடும் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம். ஆனால் இன்று கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்கள் பறிபோன நிலையில் கிழக்கில் எஞ்சியிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டமும் தமிழர்களின் கைகளை விட்டு போகும் நிலை உருவாகியுள்ளது.
அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்
நிலங்களை பெரும்பாலும் சிங்களவர்களே ஆக்கிரமித்தனர். அரச பலத்துடன்
சிங்களவர்கள் தமிழர் நிலங்களை அபகரித்து கொண்டனர். இப்போது அரசுடன்
ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என பலத்துடன் தமிழர் நிலங்கள் சில முஸ்லீம்
அரசியல்வாதிகளால் பறித்தெடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
திட்ட மிட்ட குடியேற்றங்கள், நில
அபகரிப்புக்கள் இடம்பெற்றாலும் இன்றும் கிழக்கு மாகாணத்தில் 40.35 வீதம்
வாழ்கிறார்கள். முஸ்லீம்கள் 37.60 வீதம் வாழ்கிறார்கள். சிங்களவர்கள்
21.64வீதம் வாழ்கிறார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின்
அறியாமையால் அல்லது சரியான புரிதல் இல்லாததால் சிங்கள பேரினவாத கட்சிக்கு
வாக்களித்ததன் பலனாக கிழக்கு மாகாணசபை முற்றாக முஸ்லீம்களினதும்
சிங்களவர்களினதும் கைகளுக்கு சென்று விட்டது. பெரும்பான்மையாக இருக்கும்
தமிழர்கள் கிழக்கு மாகாணசபையில் எந்த அதிகாரமும் இல்லாத நிலை
உருவாகியுள்ளது.
தேர்தல் காலத்தில் மிக தந்திரமாக
தமிழர்களின் வாக்குகளை அபகரித்துக்கொள்ளும் முஸ்லீம் அரசியல் வாதிகள்
முக்கியமாக ஒட்டமாவடி அமிர் அலி போன்றோர் இப்போது மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து அதனை முஸ்லீம்
பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழ் பிரதேசங்களில் முஸ்லீம்
குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதற்கு
முற்பட்டிருக்கின்றனர்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின்
விளைவாக 10-4-1961 இல் அம்பாறை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு
மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அம்பாறை
பிரதேசத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்கள் மூன்றாவது
நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அது போன்ற திருகோணமலையையும் அம்பாறையும்
பறித்தெடுத்தது போல மட்டக்களப்பு மாவட்டத்தையும் தமிழர்களிடம்
பறித்தெடுப்பதற்கு இரு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஒன்று தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்கள
முஸ்லீம் குடியேற்றங்கள், இரண்டாவது தமிழர்களின் பூர்வீக கிராமங்களை
முஸ்லீம் பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழ் கிராமங்களின்
பெருந்தொகையான நிலங்களை முஸ்லீம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் உள்வாங்கி
அதில் சிங்களவர்களையும் முஸ்லீம்களையும் குடியேற்றுவது. இந்த இரண்டு
நடவடிக்கைகளும் போர் முடிந்த கையோடு துரிதமாக நடைபெற்று வருகிறது.
கிழக்கு மாகாணசபையில் பிள்ளையான்
முதலமைச்சராக இருந்த போது வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 25ஆயிரம்
ஏக்கர் காணியில் சிங்கள ஊர்காவல் படையினர் குடியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு வீடுகளையும் வேலிகளையும் அமைப்பதற்கு கிழக்கு மாகாண விவசாய
அமைச்சே நிதி உதவியை வழங்கியது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான கால்நடை மேச்சல்
தரைகளையும் இவர்கள் அபகரித்துள்ளனர். அரச காணியில் சட்டவிரோதமாக இவர்கள்
குடியேறியுள்ளனர் என வவுணதீவு பிரதேச செயலாளர் அங்கு குடியேறியிருக்கும்
10பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது நீதிமன்றம்
இவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அவர்கள்
இன்றுவரை வெளியேறவில்லை. அரச ஆதரவும் படையினரின் ஆதரவும் அவர்களுக்கு
இருப்பதால் நீதிமன்றில் உத்தரவை உதாசீனம் செய்து விட்டு தொடர்ந்து வசித்து
வருகின்றனர்.
இந்த 25ஆயிரம் ஏக்கரிலும் 25ஆயிரம் சிங்கள
குடும்பங்கள் குடியேறினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின்
குடிப்பரம்பல் வீதத்தில் நிட்சயம் மாற்றம் ஏற்படும்.
அது போன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாசிக்குடாவிலும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சௌக்கடியிலும் சுமார் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம்.
அது போன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாசிக்குடாவிலும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சௌக்கடியிலும் சுமார் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு
மாவட்டத்திலேயே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேற்கொள்ளப்பட்டு
வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடருமானால் தமிழர்கள் இரண்டாம் மூன்றாம்
நிலைக்கு தள்ளப்படலாம்.
சிங்கள குடியேற்றம் ஒரு புறம் தமிழர்
நிலங்களை அபகரித்து வரும் நிலையில் மறுபுறத்தில் தமிழர் நிலங்களை அபகரித்து
முஸ்லீம் பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட தமிழ் கிராமங்களான புனானை மேற்கு, கள்ளிச்சேனை, வாகனேரி, வட்டமுன்மாரி, உட்பட 6 கிராமசேவையாளர் பிரிவுகளையும், கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த புனானை கிழக்கு, மருதங்கேணிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக அலகுடன் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் கிரான், வாகரை ஆகிய இரு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 47ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட தமிழ் கிராமங்களான புனானை மேற்கு, கள்ளிச்சேனை, வாகனேரி, வட்டமுன்மாரி, உட்பட 6 கிராமசேவையாளர் பிரிவுகளையும், கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த புனானை கிழக்கு, மருதங்கேணிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக அலகுடன் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் கிரான், வாகரை ஆகிய இரு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 47ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது.
இது எதிர்காலத்தில் முஸ்லீம் பிரதேசங்களாக
மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் நாவலடி சந்தியிலிருந்து வெலிக்கந்தை வரையான
தமிழர் பிரதேசம் முற்றாக முஸ்லீம் பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்
அடையாளங்களை இப்பொழுது காணமுடியும்.
வாகனேரி, புனானை ஆகிய பிரதேசங்களில் உள்ள
தமிழ் மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்
அங்கு குடியேற்றப்படாது அக்கிராமங்கள் முஸ்லீம் பிரதேச செயலகங்களுடன்
இணைக்கப்படுவது பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த கால யுத்தத்தினால் தமிழர்
பிரதேசங்கள் அழிந்ததும் யுத்த புனர்நிர்மாணத்தை வைத்து முஸ்லீம்
பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட விடயங்கள் ஒன்றும் மூடு மந்திமல்ல.
அஷ்ரப் தொடக்கம் ஹக்கீம் வரை புனர்வாழ்வு அமைச்சர்களாக முஸ்லீம்களே இருந்த
காரணத்தாலும் முஸ்லீம்கள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த காரணத்தினாலும்
முஸ்லீம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டன.
தமிழர்கள் போரில் அழிந்த போது
முஸ்லீம்களின் சனத்தொகை அதிகரித்தது. முஸ்லீம்களின் சனத்தொகை அதிகரிப்பு
ஏற்ப அவர்களின் பிரதேசங்களில் நிலம் இல்லை என்பது உண்மைதான். அதற்காக
மாற்று வழிகளை முஸ்லீம் தலைமைகள் தேட வேண்டும்.
தமிழ் பிரதேசங்களில் குடியேற விரும்பும்
முஸ்லீம்கள் அப்பிரதேச செயலகங்களில் சட்டரீதியாக காணிகளுக்கு விண்ணப்பித்து
பெற வேண்டுமே ஒழிய குறுக்கு வழியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்ற
காரணத்திற்காக முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழர்களின் பூர்வீக நிலங்களை
அபகரிக்க முற்பட கூடாது.
ஒரு புறம் புட்டும் தேங்காப்பூவும் என்றும்
தமிழ் முஸ்லீம் ஒற்றுமை என்றும் பேசிக்கொண்டு தமிழர்களின் வாக்குகளையும்
காலத்திற்கு காலம் அபகரித்து கொண்டு மறுபுறத்தில் தமிழர்களின் நிலங்களை
அபகரிப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் இடம் கொடுப்பார்களானால்
அம்பாறையிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் பாரம்பரிய தமிழ்
கிராமங்களிலிருந்து தமிழர்கள் துரத்தப்பட்டது போல மட்டக்களப்பிலிருந்தும்
தமிழர்கள் துரத்தப்படுவதற்கு வெகு காலம் எடுக்காது.
இரா.துரைரத்தினம்
(நன்றி-TKK) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar