'புலிகள்
அரசியலின் தொடர்ச்சி', 'உணர்ச்சி வசப்பட்ட அரசியல்' என்கிற சொல்லாடல்கள்,
எதற்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது?. அது மட்டுமல்லாது 'பூகோள
அரசியல்', 'பிராந்திய அரசியலில் சீனாவின் ஆதிக்கம்' போன்ற பெரிய
விடயங்களும் இதனோடு இணைத்தே பேசப்படுகிறது.
இந்த இரண்டு உள், வெளி அரசியலுக்கிடையே,
பொருத்தப்பாடான நுண்ணரசியல் அநேகமாகக் காணப்படுவதில்லை. இழுத்து வந்து
உட்கார வைத்த 'செருகல்' போன்றே காட்சியளிக்கின்றது.
பொதுவாக, விடுதலைப்புலிகளின் அர சியல் மீதான மேம்போக்கான விமர்சனங்கள் இறுதிப் பகுதி வரை ஆக்கிரமித்து, பூகோள அரசியலோடு அது முற்றுப் பெறும். புவிசார் அரசியல் பார்வை குறித்த சிந்தனைகள் முழுக்கட்டுரைக்குமான கனதியைக் கொடுத்துதவுமென கற்பிதம் கொள்வது தவறானது.
முதலில் இவர்கள், 'புலி அரசியல், அதன் தொடர்ச்சி' என்று எதனைக்குறிப்பிட முற்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இங்கு தர்க்க ரீதியான அளவுகோல்கள் எதுவுமே இல்லை. அரைவாசி மூடப்பட்ட கதவினை, அரைவாசி திறந்துள்ளது என்றும் தர்க்கம் செய்யலாம். உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பார்க்கும் பார்வையாளருக்கு அது மூடியும் திறந்தும் இருக்கும்.
இதில் 'இரண்டுமே சரி' என்கிற பார்வைக்கான தளம் எங்கே நிலைத்திருக்கின்றது?. ஒரு வகையில் இரண்டும் சரிதான். ஆனால் புலிகளின் அரசியல் எதுவாக இருந்தது? என்பதனை சரியாக மதிப்பீடு செய்தால், இரண்டும் சரியானது என்கிற முடிவிற்கு வரலாம்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், உலகின் மிகச் சிறந்த கெரில்லா இயக்கம் என் கிற பொதுவான பார்வை களுக்கு அப்பால், அவர்கள் முன்னிறுத்திய அரசியல் கோட்பாடு என்ன என்பதனைக் கூறாமல், 'உணர்ச்சிகர அரசியல்' என்கிற குறுகிய சந்துக் குள் 35 ஆண்டுகாலப் போராட்டத்தை முடக்கிவிட முடியாது.
ஓர் இனத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறையானது, ஒட்டுமொத்த இனத்தின் கூட்டு உளவியலை மோசமாகப் பாதிக்கும் என்பது, உணர்வுபூர்வமான உண்மை. அந்த வலி தரும் உணர்ச்சியை கொச்சைப்படுத்த முடியாது. யாரும் அவர்களுடைய உணர்ச்சியைத் தூண்ட வேண்டிய அவசியமுமில்லை. ஒடுக்குபவனே அந்த காரியத்தைச் செய்து விடுவான்.
ஆனால் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியிலிருந்து வெளிப்படுத்தப்படும் இவ்வாறான விமர்சனங்கள், அறிவுபூர்வமான அரசியலில் இருந்து வருவது போலானதொரு தோற்றப்பாட்டினைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறதா?. இதுவே கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும்.
மக்களின் அந்த உணர்ச்சி, ஒரு கனவு நிலையல்ல. விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமுமல்ல.
மனிதர்களின் உணர்ச்சிகளை நிராகரித்து, இயந்திரத்தனமான தத்துவங்களை மட்டுமே உருவாக்க முடியும். உணர்வுகளற்ற அல்லது ஒன்று குவிக்கப்பட்ட ஏகத்துவ நிலையை எழுத்தில்கூட வடிக்க முடியாது. 'கண்டவர் விண்டிலர்' என்கிற வெளியற்ற கருத்துநிலை, மானுடத்தின் அரசியல்- பொருளாதார அசைவியக்கத் தத்துவத்திற்குப் பொருந்தாது.
தாம் அழிக்கப்பட்டு விடுவோமோ என்கிற ஜாக்கிரதை உணர்வு உயிர்ப்புடன் உள்ளவரை, போராட்டங்கள் எல்லா வடிவங்களிலும் தொடரும். சாகடிக்கப்பட்ட உணர்ச்சியிலிருந்து இது உருவாகாது. இதனை உணர்ச்சிவசப்பட்ட அரசியல் என்று சிறுமைப்படுத்த முடியாது. அதிகாரத்தையும் அரசியலையும் எவ்வாறு பிரித்துப்பார்க்க முடியாதோ, அதுபோல மக்களின் கூட்டுமன உணர்ச்சிகளையும், அது வெளிப்படுத்தும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
அதனை எவ்வாறு ஒருங்கிணைத்து ஒரு போராட்ட வடிவமாக மாற்றுவது என்பது குறித்தே, பல பாதைகளும் செயற்பாட்டு முறைமைகளும் முன்வைக்கப்படுகின்றன.
இங்குதான், புலி அரசியலின் தொடர்ச்சி என்று சுட்டிக்காட்டப்படும் கருத்துநிலை, மாகாண சபைப் பாதையில் இடறுப்படுகிறது. அது எதுவாக இருக்கும் என்று சொல்லாமலேயே, தடைகள் போல் சித்திரிக்கப்படுகிறது.
ஒரு தரப்பினர், 13வது திருத்தச் சட்டமூலம் தீர்விற்கான முதற்புள்ளியல்ல என்கிற விவாதத்தினை அழுத்தமாக முன்வைக்கையில், அவ்விவாதத்தினை புலி அரசியலின் நீட்சியாகத் தொழிற்பட முனைவோரின் வாதமாக மாற்ற அல்லது வலுவிழக்கச் செய்ய இன்னொரு தரப்பு முயற்சிக்கிறது.
சரி. இந்தப் புலி அரசியல் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.
பூரண சுயநிர்ணய உரிமையோடு கூடிய தாயகம், தேசியம், தன்னாட்சி என்பதன் அடிப்படையில் அமைந்த தீர்வினையே தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துப் போராடினார்கள். இதனை ஏற்றுக்கொள்ளாத தரப்புக்களோடு ஒரே மேசையில் அமர்ந்திருந்து பேசினார்கள். ஒஸ்லோவில் எட்டப்பட்ட இணக்கத்தை வைத்து, பிரிந்து செல்லும் பகுதியை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிலிருந்து புலிகள் அகற்றி விட்டார்கள் என்கிற வியாக்கியானமும் செருகப்பட்டது.
ஆனால் தனித்துவமான பூர்வீக தேசிய இனம், இறைமை கொண்ட தேசம் என்கிற அடிப்படையான பிறப்புரிமையை விட்டுக்கொடுத்து, சமரசப் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் ஈடுபட்டதில்லை. இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை என்பதுகூட, அடிப்படையில் தமிழர் இறைமையை ஏற்றுக்கொள்ளும் விபரீதத் திற்கு வித்திட்டுவிடும் என்பதாலேயே அரசு அன்று அதனை தவிர்த்தது.
ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட புலிகளின் அரசியல் அடிப்படைக்கோட்பாடுகளுக்கும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மாகாண சபை அரசியலிற்கும் சம்பந்தமேயில்லை என்பதைப் புரிந்து கொள்வது சுலபம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆங்காங்கே இச்சொற் கள் உணர்ச்சிமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கும். அவ்வளவுதான்.
இந்தியாவிற்குப் பிடித்த மாகாண சபை முறைமையை சரியென்று ஏற்றுக்கொள்பவர்களுக்கு, புலிகளின் அரசியல், உடன்பாடற்றே காணப்படும். இதனை நிராகரிக்காமல், தாங்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற சிக்கலில் அகப்பட்டவர்கள், பிரிவினைதான் புலி அரசியல் என்று கூறித் தப்பித்து விடுவார்கள்.
1983 இல் வந்த 6 ஆவது திருத்தச் சட் டம் பிரிவினையை மறுப்பதால், தாய கம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் என்பவற்றையும் எமது அரசியல் போரா ட்ட வாழ்வுச் சூழலில் இருந்து அகற்றி விடவேண்டும் என்கிற அவசியமில்லை.
இரண்டையும் போட்டுக் குழப்பியவாறு, புலி அரசியலின் நீட்சி பற்றிப் பேசி, மக் களை மயக்க நிலைக்குள் தள்ள வேண்டிய தேவையுமில்லை.
ஆனால், பலமான சில வெளிச் சக்திக ளுக்கு, இந்த சுயநிர்ணயம், இறைமை போன்ற கோரிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை.
அரசுடனான தமது இணக்கப் பாட்டு அரசியல் நகர்வுகளுக்கு இவை பங்கம் விளைவிக்குமென எண்ணுகின்றன. அத னால்தான் சிலர், புலிகளின் அரசியல் நீட்சி தவிர்க்கப்பட வேண்டு மெனச் சொல்கிறார்களோ... புரியவில்லை.
இதயச்சந்திரன்

Ingen kommentarer:
Legg inn en kommentar