மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரா?


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார், பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்துப் பேசுவார் என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 30ம் திகதி சென்னையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருந்தார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் துரோகம் செய்து விட்டதாக பொதுவாக தமிழக அரசியல் கட்சிகள் எல்லாமே குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள பழியைத் துடைக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார். அடுத்த சில மாதங்களிலேயே இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கப் போகிறது.
இந்தியத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை எப்போதுமே தாக்கம் செலுத்தியதும் இல்லை. செலுத்தப் போவதுமில்லை என்று காங்கிரஸ் தலைவர்களான ஞானதேசிகன், ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறிக் கொண்டாலும் இந்தத் தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கப் போகிறது.
காங்கிரஸ் கட்சி இன்று வரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேர முடியாமல் தனித்தே நிற்கிறது.
இதுவே நிரந்தரமானது என்று கூற முடியாவிட்டாலும் ஈழத்தமிழர் பிரச்சினை, காங்கிரஸின் கூட்டணி, தேர்தல் வியூகம், தேர்தல் முடிவுகளிலும்கூட தாக்கம் செலுத்தும் ஒன்றாகவே இருக்குமெனக் கருதப்படுகிறது.
அதனால் தான் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில்  தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அவர் விரைவில் அங்கு செல்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த போது அதைத் தடுத்து நிறுத்தியதில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் முக்கிய பங்கிருந்தது.
எதிர்ப்பை மீறி கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடனும் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க முடியாது போகலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரமும், ஏ.கே. அந்தோனியும் கொடுத்த அழுத்தம்தான் மன்மோகன் சிங்கின் பயணம் ரத்துச் செய்யப்படக் காரணம்.
ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் சரி சிதம்பரம் போன்றவர்களுக்கும் சரி மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் செல்ல அனுமதி்திருக்கலாமா என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது போலுள்ளது.
ஏனென்றால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொமன்வெல்த் மாநாட்டிற்கு வந்து யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்வையிட்டு வெளியிட்ட கருத்துகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டன.
டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் செலவிட்ட நேரம் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் கூட இல்லாத போதிலும் அவரால் இந்தப் பிரச்சினையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது.
கொமன்வெல்த மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மட்டுமன்றி எந்த நாட்டுத் தலைவருமே பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள் எல்லோருமே டேவிட் கமரூனைப் பாராட்டாமல் இருக்கவில்லை.
இந்தநிலையில் தான் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தால் என்ன என்ற எண்ணம் ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதன்மூலம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக வுடன் கூட்டணி அமைப்பதோ அல்லது வாக்குகளைச் சுருட்டுவதிலோ சிக்கல்கள் ஏற்படாதென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கணக்குப் போடலாம். இந்தநிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரோ என்ற கேள்வி முதன்மை பெறுகிறது.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரேயானால் அது இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய அடியாகவே அமையும்.
ஏனென்றால் 2010ம் ஆண்டு இலங்கைக்கு வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்னமும்கூட கொழும்பு வரவில்லை.
அது­மட்­டு­மன்றி, கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வரு­மாறு வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மூலம் விடுத்த அழைப்பை ஏற்றும் அவர் கொழும்பு வர­வில்லை. இந்­த­நி­லையில், வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வ­ரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்­பாணம் வந்தால், இது இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பேரி­டி­யாக அமையும்.
இரா­ஜ­தந்­திர நெறி­மு­றை­க­ளின்­படி இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட ஓர் அவ­ம­ரி­யாதை என்று கூடக் கரு­தப்­ப­டலாம். இதனால் தான், ஐ.தே.க.வின் மூத்த தலை­வ­ரான ஜோன் அம­ர­துங்க, இந்­தியப் பிர­த­மரை யாழ்ப்­பாணம் செல்ல அனு­ம­திக்கக் கூடாது என்று கடந்த வாரம் நாடா­ளு­மன்­றத்தில் பொங்­கி­யெ­ழுந்­தி­ருந்தார்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்­பின்றி அவர், யாழ்ப்­பாணம் செல்லக் கூடாது என்றும், அது பிரி­வி­னையை ஊக்­கப்­ப­டுத்திவிடும் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.
ஆனால், ஒரு நாட்டின் ஜனா­தி­ப­தி­யி­னது அழைப்பின் பேரில்தான், இன்­னொரு நாட்டின் தலைவர் அந்த நாட்­டுக்குச் செல்ல வேண்டும் என்ற எந்த நிய­தியும் கிடை­யாது.
ஒரு நாட்டின் அழைப்பின் பேரில் இன்­னொரு நாட்டின் தலைவர் வந்தால், அது அதி­கா­ர­பூர்வ பய­ண­மா­கவும், இல்­லா­விட்டால் அது தனிப்­பட்ட பய­ண­மா­கவும் எடுத்துக் கொள்­ளப்­படும்.
இதுதான் உல­க­ளா­விய ரீதி­யாகக் கடைப்­ பி­டிக்­கப்­படும், இரா­ஜ­தந்­திர வழக்கம்.
எனவே, வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வ­ரனின் அழைப்பை ஏற்று மன்­மோ­கன்சிங் யாழ்ப்­பாணம் வரு­வது தவ­றா­னது என்றோ, அது பிரி­வி­னையை ஊக்­கப்­ப­டுத்தும் என்றோ கரு­து­வ­தற்­கில்லை. ஏனென்றால், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, இந்­தியப் பிர­த­ம­ரி­னதோ, ஜனா­தி­ப­தி­யி­னதோ அழைப்­பில்­லாமல், பல­முறை இந்­தி­யா­வுக்குச் சென்­றுள்ளார்.
மத்­திய பிர­தேச மாநில முதல்வர் சிவ்­ராஜ்சிங் சௌகானின் அழைப்பை ஏற்று, பௌத்த பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அடிக்கல் நாட்­டு­வ­தற்கு சாஞ்­சிக்கு சென்­றி­ருந்தார். பின்னர், பீகார் முதல்வர் நிதீஸ்­கு­மாரின் அழைப்பின் பேரில், புத்­த­க­யா­வுக்கும் சென்­றி­ருந்தார்.
அவை­யெல்லாம், இந்­திய மத்­திய அர­சுடன் எந்த சர்ச்­சை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ஆனால், இந்­தியப் பிர­த­ம­ராக கிட்­டத்­தட்ட பத்து ஆண்­டுகள் இருந்து விட்ட மன்­மோ­கன் சிங், இது­வரை இலங்­கைக்கு ஒரு­மு­றை­யேனும், அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை. 2008 ல் அவர் சார்க் மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக ஒரு­முறை கொழும்பு வந்­தி­ருந்­தாரே தவிர, அது அர­சு­முறைப் பயணம் அல்ல.
அதற்குப் பின்னர், 2010ல் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை, இன்­னமும் ஏற்று கொழும்பு வர­வில்லை.
இத்­த­கைய நிலையில், கொமன்வெல்த் மாநாட்­டுக்­காக இலங்கை வரும் வாய்ப்பு ஒன்றும் இருந்த போதிலும், அதனை அவர் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.
இந்­த­நி­லையில், வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வ­ரனின் அழைப்பை ஏற்று அவர் யாழ்ப்­பாணம் வந்தால், அது இலங்கை அர­சுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்தும். எனவே, மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் செல்வார் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், அது நடைமுறைச் சாத்தியமாகுமா என்பது சந்தேகம் தான்.
அதைவிட, டேவிட் கமரூன் போன்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், யாழ்ப்பாணம் சென்றிருந்தால் கருத்து வெளியிட்டிருப்பார் என்று, ப.சிதம்பரம் கூறியிருந்தார். வெளிவிவகார அமைச்சரான சல்மான் குர்ஷித்தினால் அவ்வாறு கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சிதம்பரம் குறிப்பிட்டது போன்று மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வந்தாலும் கூட, டேவிட் கமரூன் வெளியிட்டது போன்று காட்டமான கருத்தை அவரால் வெளியிட முடியாது. அந்­த­ள­வுக்கு கருத்து வெளி­யி­டு­வ­தற்கு இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவு இட­ம­ளிக்­கவும் மாட்டது.
ஹரிகரன்
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar