இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற கோரக் காட்சிகள் கொண்ட "கொலை கள' ஆவணப் படத்தை அலைவரிசை4 (Channel-4) தொலைக்காட்சி வெளியிட்டு இலங்கை அரசுக்கு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில், இலங்கை அரசோ அதனை முற்றாக நிராகரித்து அதற்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, தாம் சுத்தமான சூசைப்பிள்ளை என்பதற்கான ஆதாரங்களைத் தேடிப் பொறுக்கும் முயற்சியில் இறங்கியிருக்க... அந்த ஆவணப்படக் காட்சிகளுக்குத் தாம் தான் கதாநாயகர்கள் என்பதனைக் கடந்த 16 ஆம் திகதி அளவெட்டி மகாஜன மண்டபத்தில் இலங்கை இராணுவத்தினர் சொல்லாமற் சொல்லியிருக்கிறார்கள்.
அளவெட்டிச் சம்பவம் நிரூபித்துக் கொண்டது
2009 மே 19 இற்குப் பின்னரான வடக்கு, கிழக்கு சூழல் முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட நிலையில், பயங்கரவாதத்தை வேரறுத்துத் தமிழ் மக்களுக்கு முன்னெப்போது மில்லாத சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. இந்த நிலையில்போர்க்குற்றம் தொடர்பான ஐ.நாவின் கேள்விகளுக்கு பதில் வழங்காமல் மௌனம் காத்துவரும் நிலையில்அளவெட்டி சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தமிழ்மக்களுக்குத் தீர்வொன்றை வழங்கி திருப்திப்படுத்துவதைவிடவும் தற்போது அரசுக்குள்ள "பலம்வாய்ந்த' நிலையைத் தளர்வுறச் செய்யாத அல்லது தமிழர்கள் ஒன்றுபடுவதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளும் முகமான நீண்டகால நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன்தான் வடக்கு, கிழக்கு விவகாரங்களில் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிற மனப்பக்குவம் இன்று மக்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.
ஊடகங்களைப் புரட்டி உருட்டினா லும் அதனை உறுதிப்படுத்துகிற மாதிரியான செய்திகளே வெளிவருகின்றன. அந்த வகையில் அளவெட்டிச் சம்பவத்தையும் வரிசைப்படுத்த முடியும்.
தொடரும் இராணுவமயம்
சில வருடங்களுக்கு முன்பு படையினரால் ஏற்படுத்தப்பட்டது போன்ற நெருக்கடி, கெடுபிடி தற்போது இல்லை; ஆனால், அதனைச் சடுதியாக ஏற்படுத்தக்கூடிய வல்லமையோடுதான் படையினர் விளங்குகின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டிருக் கிறது!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக முரசறையப்பட்ட காலத்திலிருந்து வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தளர்த்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை தமிழ் மக்களாலும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அரசுக்கு முன்வைக்கப்பட்டே வந்தது; வருகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் ஆகியோரை உள்ளடக்கிய மூவரணியிடமும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமை யில் சென்ற குழுவினர் இதனையே வலியுறுத்திவிட்டு வந்தனர்.
உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதித்தல், யாழ் நகரப்பகுதி மற்றும் தனியார் காணிகளிலிருந்து விடைபெறுதல், வீதி சோதனை மற்றும் காவலரண்கள் அகற்றப்படல், பலவருடங்களாக மக்கள் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்படுதல் என ஆங்காங்கே சில பல "நல்ல பிள்ளை' செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும், ஒட்டு மொத்த இராணுவப் பிரசன்னம் "சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள' என்பதாகத்தான் இருக்கிறது.
"சரி, படையினர் தமது படைமுகாம்களுக்குள் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நாம் எமது பாட்டில் எங்கள் அலுவலர்களைப் பார்ப்போம்' என்றொரு சமரச உணர்வுடன் வாழ முயற்சித்தாலும் அதற்கான சந்தர்ப்பமும் இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் பல சம்பவங்கள் அரங்கேறி ஓய்ந்திருக்கின்றன.
1.யாழ்.புகையிரத நிலையத்தில் வந்து தங்கியிருந்த தென்னிலங்கை மக்களை இரவோடிரவாக நாவற்குழிப் பகுதியில் குடியேற்றம் செய்தமை.
2.தென்னிலங்கை உல்லாசப் பிர யாணிகள் யாழ். நூலகத்தைப் பார்வை யிடத் தவிர்க்கப்பட்ட நேரமொன்றில் பார்வையிட முயன்ற போது அதில் தலையிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யமை.
3.சங்கானையில் இடம்பெற்ற பிரா மணக் குருவின் பலியெடுப்பின் பின்ன ணியில் ஆயுத வழங்குநராக இருந்தமை.
4.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மரணச்சடங்கு நேரத்திலும் அதன் பிற்பட்ட நாள்களிலும் பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியமை.
5.வெள்ளரசுக்கிளை யாழில் வீதி யுலா வந்தபோது பாடசாலை மாணவர் களையும் அதில் பங்கெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டமை.
6.நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மேற்கொள்ளப்பட்ட பதிவு மற்றும் புகைப்படப்பிடிப்பு நடவடிக்கைகள்.

நீடிப்புச் செய்யப்படும்அவசரகாலச் சட்டம்
புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் இல்லை எனக் கூறிவரும் அரசு, அது மீள முனைப்புப் பெறுவதற்கு தன்னுடைய கவலையீனம் ஒருபோதும் காரணமாகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது.
புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் இல்லை எனக் கூறிவரும் அரசு, அது மீள முனைப்புப் பெறுவதற்கு தன்னுடைய கவலையீனம் ஒருபோதும் காரணமாகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது.
மாதா மாதம் பெண்களுக்கு மாத விடாய் வருவது போன்றுஅவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இந்தப் பின்னணி யிலேதான். அதேபோன்று வடக்கு, கிழக்கில் வதிவோரும் கறையான்களைப் போன்றுகூடிக்கலந்து பேசி கலவரம் ஒன்றை கட்டவிழ்த்து விடுவார்களோ என்கிற பயத்தில்தான் ஒன்றுகூடலோ விளையாட்டு நிகழ்வோ பொதுக்கூட்டமோ எதை நடத்துவதானாலும் "இராணுவத்தினரின் அனுமதி' என்ற ஒன்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்கிற நடைமுறை அமுலாகி வருகிறது.
அந்த அனுமதியைப் பெற்றிராத பட்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக் கிற நிகழ்வில் புகுந்து ரகளை பண்ணி குழப்புகிற சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்.கலைத்தூது மண்டபத்தில் அனுஷ்டித்தபோது அதில் பங்கெடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால யத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கொன்றை நடத்த ஆயத்தமான அன்றைய தினம் அவ்விடமெங்கும் படையின ரைக் குவித்து பதற்றத்தை ஏற்படுத்திருக்கிறார்கள்.
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால யத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கொன்றை நடத்த ஆயத்தமான அன்றைய தினம் அவ்விடமெங்கும் படையின ரைக் குவித்து பதற்றத்தை ஏற்படுத்திருக்கிறார்கள்.
நூலக ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடத்த எத்தனித்த போது அங்கு நுழைந்த இராணுவத்தினர், அந்த ஒன்று கூடலுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறதாவென வினாவியதுடன் சீருடை தரிக்காத இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் கூட்டத்தைத் தொடரு மாறும் இடம்பெறுகின்ற உரைகளின் பிரதிகளைத் தமக்குத் தருமாறும் கோரியிருக்கின்றனர்.
"காமாலைக் கண்ணனுக்கு கண்ட தெல்லாம் மஞ்சள்' என்கிற நிலையில் தொடர்கிற இந்த வகையான செயற்பாடுகளின் ஓர் அத்தியாயமே அளவெட்டியிலும் எழுதப்பட்டிருக்கிறது.
ஹத்துருசிங்கவின் சத்தியம்
அளவெட்டி அட்டூழியம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ். மாவட்டத்தில் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறாமல் பார்த்துக் கொள்வதாகவும் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரிகையாளரையும் "சமாதானப்' படுத்தியிருக்கிறார்.

சங்கானையில் பிராமணக்குருக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி இனங்காணப்பட்ட பின்பும் அண்மையில் பாதுகாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் இதேபோன்று "இனிமேல் நடவாது' என்றே அவர் கூறியிருந்தார்; ஆனால் அது பொய்த்துவிட்டது.
எதிர்வரும் ஜூலை 23 இல் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கொடுப்பு நடைபெற இருக்கையில், அளவெட்டியில் நிகழ்ந்த அட்டூழியம் ஏற்படுத்திய சலசலப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கான சனச்செறிவை சற்று பாதிக்கத்தான் போகிறது. ஏற்கனவே த.தே.கூ. மற்றும் ஜே.வி.பி. வேட்பாளர்களின் விவரங்களைப் படையினர் சேகரிப்பதில் ஆர்வம் காட்டிய நிலையில், இந்தச் சம்பவம் தேர்தலில் கடைப்பிடிக்கப்படப் போகின்ற ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பி நிற்கிறது.
வடக்கு, கிழக்கில் வதிகின்ற மற்றும் மீளக்குடியேறி வதிய முயல்கின்ற தமிழர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் படைத்தரப்பின் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்; மெல்ல மெல்லமாகத் தளர்த்தப்பட வேண்டும். இல்லையேல் தமிழர் மனங்களை வெல்வது என்பது அரசுக்கு மணல் கயிறு திரித்த கதையை ஒத்தி ருக்கும்.
Ingen kommentarer:
Legg inn en kommentar